எழு வேலைக்காரா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாசித்தார்த் மகாதேவன்அனிருத் ரவிசந்தர்வேலைக்காரன்

Ezhu Velaikkara Song Lyrics in Tamil


ஆண் : எழு வேலைக்காரா…
எழு வேலைக்காரா இன்றே இன்றே…

—BGM—

குழு : ஓயாதே… சாயாதே…
வாய் மூடி வாழாதே…

ஆண் : எழு வேலைக்காரா இன்றே இன்றே…
இனி செய்யும் வேலை நன்றே…
அட மேலும் கீழும் ஒன்றே ஒன்றே…
வரலாறை மாற்று வென்றே…

ஆண் : வேர்வை தீயே…
உன் தேசம் நீயே…
உன் சொல் கேட்டே…
வீசும் உன் காற்றே…

குழு : போராடு…
ஓயாதே தேயாதே சாயாதே…
போராடு…
ஆறாதே சோராதே வீழாதே…
போராடு…

ஆண் : எழு வேலைக்காரா இன்றே இன்றே…
இனி செய்யும் வேலை நன்றே…
அட மேலும் கீழும் ஒன்றே ஒன்றே…
வரலாறை மாற்று வென்றே…

—BGM—

குழு : போராடு போராடு போராடு போராடு…

—BGM—

ஆண் : முடியாத செயல் ஏதுமே புவி மீது கிடையாது…
எழுந்து வா புயலை போலே…
பலம் என்ன புரியாமலே பணிந்தோமே குனிந்தோமே…
நிமிர்ந்து வா மேலே மேலே…

குழு : ஒரு முறையே ஹே தரையினில் வாழும் வாய்ப்பு…
அதை முறையே ஹே பயனுற வாழும் வாழ்க்கை ஆக்கு…
உழைப்பவனே ஹே எழுதிட வேண்டும் தீர்ப்பு…
விதைத்தவனே ஹே பசியென போனால் எங்கோ தப்பு…

குழு : போராடு…
ஓயாதே தேயாதே சாயாதே…
போராடு…
ஆறாதே சோராதே வீழாதே…
போராடு…

—BGM—

ஆண் : எழு வேலைக்காரா இன்றே இன்றே…
இனி செய்யும் வேலை நன்றே…
அட மேலும் கீழும் ஒன்றே ஒன்றே…
வரலாறை மாற்று வென்றே…

ஆண் : வேர்வை தீயே…
உன் தேசம் நீயே…
உன் சொல் கேட்டே…
வீசும் உன் காற்றே…

குழு : போராடு…
ஓயாதே தேயாதே சாயாதே…
போராடு…
ஆறாதே சோராதே வீழாதே…
போராடு…

—BGM—

ஆண் : எழு வேலைக்காரா இன்றே இன்றே…
இனி செய்யும் வேலை நன்றே…
அட மேலும் கீழும் ஒன்றே ஒன்றே…
வரலாறை மாற்று வென்றே…

குழு : போராடு போராடு போராடு போராடு…
ஓயாதே சாயாதே…
வாய் மூடி வாழாதே…


Notes : Ezhu Velaikkara Song Lyrics in Tamil. This Song from Velaikkaran (2017). Song Lyrics penned by Viveka. எழு வேலைக்காரா பாடல் வரிகள்


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading