என்னை போலவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.எஸ். சித்ரா & சுசித்ராஹாரிஸ் ஜெயராஜ்லேசா லேசா

Ennai Polave Song Lyrics in Tamil


பெண் : என்னை போலவே காற்று…
இட்டுக்கட்டும் பாட்டு இனிமை…
என்னை போலவே பூத்து…
எட்டி பார்க்கும் நாத்து இளமை…

பெண் : ஏரி கரையில் எழுந்து ஆடும்…
சிறு குறிஞ்சி பூவும்…
என் கூந்தல் தானே தேடும்…

பெண் : நீரின் அலையில் நடனமாடும்…
சிறு வண்ண மீன்கள்…
என் விழிகளை கண்டு ஆடும்…

பெண் : போகும் இடம் எங்கும்…
என் பின் வரும் அந்த வானம்…
என் மேல் காதல் கொண்டால்…
அடி என்னடி செய்வேன் நானும்…

பெண் : என்னை போலவே காற்று…
இட்டுக்கட்டும் பாட்டு இனிமை…
என்னை போலவே பூத்து…
எட்டி பார்க்கும் நாத்து இளமை… யை யை யை…

குழு : கம் ஆன் டேக் மீ அவுட் இன் திஸ் சிட்டி…
ஐ அம் ஜஸ்ட் வெய்டிங் பார் யுவர் கால் —BGM—
கம் ஆன் ஓவர் லெட்ஸ் கெட் கிரேசி…
லெட்ஸ் கெட் பார்ட்டி ஒன் அண்ட் ஆல்…

குழு : இளமை இளமை இளமை இளமை… வோஹா…
இனிமை இனிமை இனிமை இனிமை…
இளமை மை இளமை மை இளமை மை இளமை…
இனிமை மை இனிமை மை இனிமை மை இனிமை…

BGM

பெண் : வீசும் சாரலில் வீழும் தூறலில்…
குழு : நனைந்திடலாம் நாம் நனைந்திடலாம்…
பெண் : வாட்டும் வாடையில் வீதி மேடையில்…
குழு : நடந்திடலாம் நாம் நடந்திடலாம்…

பெண் : உள்ளூர உண்டாகும் உற்சாகம் ஓர் ஆயிரம்…
ஒன்றல்ல ரெண்டல்ல உல்லாச பூங்காவியம்…
காட்டாறு போல நம் பாட்டாறு ஓடுது…
கரையோர நாணல்கள் கை கொட்டி ஆடுது…
நன்னாளிது பொன்னாளிது… ஓஹோ ஹோஹோஹோ…

குழு : கம் ஆன் ஓவர் லெட்ஸ் கெட் கிரேசி…
கம் ஆன் ஓவர் லெட்ஸ் கெட் கிரேசி…

பெண் : என்னை போலவே காற்று…
இட்டுக்கட்டும் பாட்டு இனிமை…
என்னை போலவே பூத்து…
எட்டி பார்க்கும் நாத்து இளமை…

BGM

பெண் : பன்னீர் பூக்களில் பட்டாம் பூச்சிகள்…
குழு : படுத்திருக்கு ஹோய் படுத்திருக்கு…
பெண் : பூவின் வாய் வழி பொங்கும் தேன் துளி…
குழு : கொடுத்திருக்கு ஹோய் கொடுத்திருக்கு…

பெண் : முத்தங்கள் வைக்கின்ற சத்தங்கள் நான் கேட்கிறேன்…
மொத்தத்தில் சித்தத்தில் பித்தேறி நான் வேர்கிறேன்…
கல்யாண நாடகம் கண்ணுக்குள் தோன்றுது…
ஏதேதோ ஆசையை நெஞ்சுக்குள் ஊன்றுது…
எம்மாடியோ எப்பாடியோ… ஹை யை யை ஏஹே…

BGM

பெண் : தனன் நனனா நானா…
தனன நானா இனிமை…
என்னை போலவே பூத்து…
எட்டி பார்க்கும் நாத்து இளமை…

பெண் : ஏரி கரையில் எழுந்து ஆடும்…
சிறு குறிஞ்சி பூவும்…
என் கூந்தல் தானே தேடும்…

பெண் : நீரின் அலையில் நடனமாடும்…
சிறு வண்ண மீன்கள்…
என் விழிகளை கண்டு ஆடும்…

பெண் : போகும் இடம் எங்கும்…
என் பின் வரும் அந்த வானம்…
என் மேல் காதல் கொண்டால்…
அடி என்னடி செய்வேன் நானும்…

BGM


Notes : Ennai Polave Song Lyrics in Tamil. This Song from Lesa Lesa (2002). Song Lyrics penned by Vaali. என்னை போலவே பாடல் வரிகள்.