ஏதோ மாயம் என்ன தொடுதே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
சுபுதீவிஜய் நரேன்டகால்டி

Yedho maayam Enna thoduthae Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஏதோ மாயம்…
என்னத் தொடுதே…
ஏக்கம் லேசா…
சுத்தி விடுதே…

பெண் : வளையும் நெடுஞ்சாலையும்…
புதிர் போட…
விடையே இல்ல குடுக்க…
கரையும் மணிக் காலமும்…
நொடிப் போல…
அறையும் எதிர் காத்துல சிறகு போலவே…
ஆச்சுது என் மனசு…

பெண் : ஏதோ மாயம்…
என்னத் தொடுதே…
கள்ள சிரிப்புல கெறங்குறனே…
சின்னக் கோவத்த ரசிக்குறனே…
படங்காட்டும் என்னோடக் கனவுல…
தடு மாற்றம் என்ன…

பெண் : வந்த நோக்கத்த மறக்குறனே…
மனக்கூட்டுல சறுக்குறனே…
கிறுக்கேத்தும் உள்ளார புதுசா…
போராட்டம் என்ன…

—BGM—

பெண் : தனியே வருஷம்…
பல கடந்தேனே நான்…
துணைக்குன்னு ஒரு தேவ வல்லையே…
கனவ நினைச்சே…
கிறுக்கா அலைஞ்சேன்…
வானமே நீ காத்துல…
பறக்க தயங்குறனே…

பெண் : உன் கத என்னத் தெரியலையே…
உன் பேச்சும் புரியலையே…
உன் வழி எது கேக்கலையே…
இருந்தும் புடிக்குதே…

பெண் : கள்ள சிரிப்புல கெறங்குறனே…
சின்னக் கோவத்த ரசிக்குறனே…
படங்காட்டும் என்னோடக் கனவுல…
தடுமாற்றம் என்ன…

பெண் : வந்த நோக்கத்த மறக்குறனே…
மனக்கூட்டுல சறுக்குறனே…
கிறுக்கேத்தும் உள்ளாரப் புதுசா…
போராட்டம் என்ன…

பெண் : ஏதோ மாயம்…
என்னத் தொடுதே…
ஏக்கம் லேசா…
சுத்தி விடுதே…

பெண் : வளையும் நெடுஞ்சாலையும்…
புதிர் போட…
அறையும் எதிர் காத்துல சிறகு போலவே…
ஆச்சுது என் மனசு…

பெண் : ஏதோ மாயம்…
என்னத் தொடுதே…

—BGM—


Notes : Yedho maayam Enna thoduthae Song Lyrics in Tamil. This Song from Dagaalty (2020). Song Lyrics penned by Subu. ஏதோ மாயம் என்ன தொடுதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading