தெய்வம் இல்லை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிமது பாலகிருஷ்ணன்யுவன் ஷங்கர் ராஜாநான் மகான் அல்ல

Dheivam Illai Song Lyrics in Tamil


ஆண் : தெய்வம் இல்லை எனும்போது…
கோவில் எதற்கு…
இல்லை நீயும் எனும்போது…
வாழ்வே எதற்கு…

ஆண் : இதுவரையில் எதைக் கேட்டாலும்…
தருவாயே மனம் கோணாமல்…
துயரம் நான் இதை கேட்காமல்…
கொடுத்தாயே எதற்காக…

ஆண் : தெய்வம் இல்லை எனும்போது…
கோவில் எதற்கு…
இல்லை நீயும் எனும்போது…
வாழ்வே எதற்கு…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஒரு நாள் எனைப் பிரிந்தாலும்…
வாடிய முகமே உனை இனி எங்கு பார்ப்பது… ஒ…
எனதாசைகள் நிறைவேற ஏங்கிய…
மனமே உன்னை எதை தந்து மீட்பது…

ஆண் : அழுதிடக் கூடாதென்று அறிவுரை கூறுவாய்…
அழுகையை நீயே தந்து போனாயே…
உறங்கிட நேரம் இன்றி உழைத்திடும் கண்களே…
நிரந்தர தூக்கம் என்ன ஆழ்ந்தாயே…

ஆண் : தெய்வம் இல்லை எனும்போது…
கோவில் எதற்கு…

BGM

ஆண் : உயிர் வாழ்வதே எனக்காக என்று நீ…
தினம் பேசுவாய் அது என்ன ஆனது… ஒ…
தலை மேல் சுமை இருந்தாலும் புன்னகை…
தருமே இதழ் அது எங்கு போனது…

ஆண் : நடந்திட பாதம் தந்து வழிகளை காட்டினாய்…
நடுவினில் முந்தி சென்றால் என் செய்வேன்…
எது எது இல்லை என்று எனக்கென வாங்குவாய்…
இறுதியில் நீயே இல்லை என் சொல்வேன்…

ஆண் : தெய்வம் இல்லை எனும்போது…
கோவில் எதற்கு…
இல்லை நீயும் எனும் போது…
வாழ்வே எதற்கு…


Notes : Dheivam Illai Song Lyrics in Tamil. This Song from Naan Mahaan Alla (2010). Song Lyrics penned by Yugabharathi. தெய்வம் இல்லை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading