என்ன புள்ள செஞ்ச

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஜெயந்தாவித்யாசாகர்வித்யாசாகர்ராமன் தேடிய சீதை

Enne Pulla Song Lyrics in Tamil


ஆண் : என்ன புள்ள செஞ்ச நீ… ஹோய்…
பாவி பய நெஞ்ச நீ…
என்ன புள்ள செஞ்ச நீ… ஹோய்…
பாவி பய நெஞ்ச நீ…

ஆண் : பார்க்கையிலே சொக்க வச்ச…
பறக்கத்தான் றெக்க வச்ச…
திக்க வச்ச தெனற வச்ச…
திசையதான் உணர வச்ச…
தெற்க வச்ச வள்ளுவனா ஒத்தையிலே நிக்க வச்ச…

ஆண் : என்ன புள்ள செஞ்ச நீ… ஹோய்…
பாவி பய நெஞ்ச நீ…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கொள்ளகாரன் நானே கொள்ளயாகி போனேன்… ஏ…
மிச்சம் மீதி ஏதும் இல்ல எல்லாம் தொலைச்சேனே…

ஆண் : தேதி போல நாளும் தேஞ்சு போகும் தேகம்…
நான் தேஞ்ச போதும் வளருதே காதல் தேயாம…

ஆண் : தண்ணீரில் உண்டாகும் மீன்கள்…
ஏன் தண்ணீரில் வேகின்ற மாயம்…
உன்னாலே வாழ்கின்ற நெஞ்சு…
ஏன் உன்னாலே ஏன் இந்த காயம்…

ஆண் : என் வாழ்க்கையே நீ வந்துதான் ஆரம்பமே ஆகும்…

ஆண் : என்ன புள்ள செஞ்ச நீ…
பாவி பய நெஞ்ச நீ…

BGM

ஆண் : ஒன்ன பாத்த வேள உடம்பும் செங்கல் சூலை…
ஏ செம்பரப்பு அருவியா நீயே வந்தாயே…
பாத மண்ண பிசைஞ்சே பான போல வளைஞ்சேன்…
ஏ என்ன நீயே என்னிடமே மாத்தி தந்தாயே…

ஆண் : எப்போதும் உன் பேரை சொல்லி…
என் உள் நாக்கும் தண்டோரா போடும்…
உப்பாத்தில் மீனாக தானே…
ஏ… அப்போதும் உன் பிம்பம் ஆடும்…

ஆண் : என் வாழ்க்கையே நீ வந்துதான் ஆரம்பமே ஆகும்…

ஆண் : என்ன புள்ள செஞ்ச நீ…
பாவி பய நெஞ்ச நீ…
என்ன புள்ள செஞ்ச நீ…
பாவி பய நெஞ்ச நீ…

ஆண் : பார்க்கையிலே சொக்க வச்ச…
பறக்கத்தான் றெக்க வச்ச…
திக்க வச்ச தெனற வச்ச…
திசையதான் உணர வச்ச…
தெற்க வச்ச வள்ளுவனா ஒத்தையிலே நிக்க வச்ச…


Notes : Enne Pulla Song Lyrics in Tamil. This Song from Raman Thediya Seethai (2008). Song Lyrics penned by Jeyantha. என்ன புள்ள செஞ்ச பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading