இப்பவே இப்பவே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாமது பாலகிருஷ்ணன் & ஹரிணிவித்யாசாகர்ராமன் தேடிய சீதை

Ippavae Ippavae Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே…
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே…

ஆண் : கண்ணை மூடி உன்னைக் கண்ட அப்பவே அப்பவே…
கைவளையல் ஓசை கேட்டால் அப்பவே அப்பவே…
ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே…
ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே…

பெண் : இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே…
ஆண் : இப்பவே இப்பவே பேசணும் இப்பவே…

—BGM—

ஆண் : வெள்ளச் சேதம் வந்தால் கூட தப்பிக் கொள்ளலாம்…
உள்ளச்சேதம் வந்து விட்டால் என்ன செய்வது…

பெண் : முள்ளைக் காலில் ஏற்றிக் கொண்டால் ரத்தம் மட்டும் தான்…
உன்னை நெஞ்சில் ஏற்றிக் கொண்டேன் நித்தம் யுத்தம் தான்…

ஆண் : சொல்லித் தீரா இன்பம் கண்டு…
எந்தன் நெஞ்சு கூத்தாட‌…

பெண் : மின்னல் கண்ட தாழை போல…
உன்னால் நானும் பூத்தாட‌…

ஆண் : உன்னைக் கண்டேன் என்னைக் காணோம்…
என்னைக் காண உன்னை நானும்…

பெண் : இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே…
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே…

—BGM—

ஆண் : எந்தன் வாழ்வில் வந்ததின்று நல்ல திருப்பம்…
இனி உந்தன் கையைப் பற்றிக் கொண்டே செல்ல விருப்பம்…

பெண் : நெஞ்சவயல் எங்கும் உன்னை நட்டு வைக்கிறேன்…
நித்தம் அதில் காதல் உரம் இட்டு வைக்கிறேன்…

ஆண் : உன்னைக் காண நானும் வந்தால்…
சாலை எல்லாம் பூஞ்சோலை…

பெண் : உன்னை நீங்கி போகும் நேரம்…
சோலை கூட தார்ப்பாலை…

ஆண் : மண்ணுக்குள்ளே வேரைப் போலே…
நெஞ்சுக்குள்ளே நீதான் நீதான்…

பெண் : இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே…
ஆண் : இப்பவே இப்பவே பேசணும் இப்பவே…

—BGM—

பெண் : கண்ணுக்குள்ள உன்னைக் கண்ட அப்பவே அப்பவே…
ஆண் : கைவளையல் ஓசை கேட்டால் அப்பவே அப்பவே…

பெண் : ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே…
ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே…


Notes : Ippavae Ippavae Song Lyrics in Tamil. This Song from Raman Thediya Seethai (2008). Song Lyrics penned by Viveka. இப்பவே இப்பவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading