மனசுக்குள் மனசுக்குள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஸ்வேதா மோகன்சுந்தர் சி பாபுஅஞ்சாதே

Manasukkul Song Lyrics in Tamil


BGM

பெண் : மனசுக்குள் மனசுக்குள் புதுமழை விழுகிறதே…
முழுதாய் நனைந்தேன்…
கருவிழி இரண்டுமே கருவறை ஆகிறதே…
உனை நான் சுமந்தேன்…

பெண் : ஒரு காதல் எனும் புயல் நெஞ்சில் வீசியதால்…
அழகானேன் புதிதாய் பிறந்தேன்…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : இதுவரை காதலை இதயத்தில் பூட்டினேன்…
இதயத்தை திறக்கின்றேன் விடுதலை தருகிறேன்…

பெண் : வெட்கங்களின் இரகசியம் உணர்ந்தேன்…
அந்த நொடியினில் உனக்குள்ளே தொலைந்தேன்…
உயிர்த் தேடல் நிகழ்கின்ற கூடல் நுாலகத்தில்…
உன்னிடம் நான் படித்தேன் அடைத்தேன்…

பெண் : மனசுக்குள் மனசுக்குள் புதுமழை விழுகிறதே…
முழுதாய் நனைந்தேன்…

BGM

பெண் : இரவெல்லாம் சூரியன் ஒளிர்வதைக் காண்கிறேன்…
பகல் எல்லாம் பனித்துளி சிதறியும் வேர்க்கிறேன்…

பெண் : நீ அருகினில் இருக்கின்ற நேரம்…
மின்னல் அருவிகள் நரம்பினில் பாயும்…
தினம் மோதல் நிகழ்கின்ற காதல் பூத்து முட்டும்…
உன் நிழல் நான் வீழ்வேன் எழுவேன்…

பெண் : மனசுக்குள் மனசுக்குள் புதுமழை விழுகிறதே…
முழுதாய் நனைந்தேன்…
கருவிழி இரண்டுமே கருவறை ஆகிறதே…
உனை நான் சுமந்தேன்…

பெண் : ஒரு காதல் எனும் புயல் நெஞ்சில் வீசியதால்…
அழகானேன் புதிதாய் பிறந்தேன்…

BGM


Notes : Manasukkul Song Lyrics in Tamil. This Song from Anjathe (2008). Song Lyrics penned by Kabilan. மனசுக்குள் மனசுக்குள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading