மழை நின்ற பின்பும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்கல்யாணிவித்யாசாகர்ராமன் தேடிய சீதை

Mazhai Nindra Song Lyrics in Tamil


BGM

பெண் : மழை நின்ற பின்பும் தூரல் போல…
உனை மறந்த பின்பும் காதல்…
அலை கடந்த பின்பும் ஈரம் போல…
உனை பிரிந்த பின்பும் காதல்…

பெண் : எனக்கும் காதல் பிறந்திருக்கு…
அதற்கு உன் பேர் வைக்கட்டுமா… ஹோய்…
எனக்குள் இதயம் தனித்திருக்கு…
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா…

பெண் : மழை நின்ற பின்பும் தூரல் போல…
உனை மறந்த பின்பும் காதல்…
அலை கடந்த பின்பும் ஈரம் போல…
உனை பிரிந்த பின்பும் காதல்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : நீர் துளிகள் நிலம் விழுந்தால்…
பூக்கள் மெல்ல தலை அசைக்கும்…
என் மனதில் நீ நுழைந்தால்…
மௌனம் கூட இசை அமைக்கும்…

பெண் : பூங்குயில்கள் மறைந்திருந்தால்…
கூவும் ஓசை மறைவதில்லை…
தாமரையாய் நான் இருந்தும்…
தாகம் இன்னும் அடங்கவில்லை…

பெண் : வானும் இணைந்து நடக்கும்…
இந்த பயணத்தில் என்ன நடக்கும்…
வானம் இருக்கும் வரைக்கும்…
இந்த வானவில் உன்னுடன் இருக்கும்…

பெண் : மழை துளி பனி துளி கலைந்த பின்னே…
அது மறுபடி இரண்டென பிரிந்திடுமோ…

பெண் : மழை நின்ற பின்பும் தூரல் போல…
உனை மறந்த பின்பும் காதல்…
அலை கடந்த பின்பும் ஈரம் போல…
உனை பிரிந்த பின்பும் காதல்…

BGM

பெண் : கண்ணிமைகள் கை தட்டியே…
உன்னை மெல்ல அழைக்கிறதே…
உன் செவியில் விழவில்லையா…
உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே…

பெண் : உன்னருகே நான் இருந்தும்…
உண்மை சொல்ல துணிவு இல்லை…
கைகளிலே விரல் இருந்தும்…
கைகள் கோர்க்க முடியவில்லை…

பெண் : உன்னை எனக்கு பிடிக்கும்…
அதை சொல்வதில்தானே தயக்கம்…
நீயே சொல்லும் வரைக்கும்…
என் காதலும் காத்து கிடக்கும்…

பெண் : தினம் தினம் கனவினில் வந்துவிடு…
நம் திருமண அழைப்பிதழ் தந்துவிடு…

பெண் : மழை நின்ற பின்பும் தூரல் போல…
உனை மறந்த பின்பும் காதல்…
அலை கடந்த பின்பும் ஈரம் போல…
உனை பிரிந்த பின்பும் காதல்…

பெண் : எனக்கும் காதல் பிறந்திருக்கு…
அதற்கு உன் பேர் வைக்கட்டுமா… ஹோய்…
எனக்குள் இதயம் தனித்திருக்கு…
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா…


Notes : Mazhai Nindra Song Lyrics in Tamil. This Song from Raman Thediya Seethai (2008). Song Lyrics penned by Kabilan. மழை நின்ற பின்பும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading