சோலைக்குயில் பாடும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & சுஜாதா மோகன்தேவாஆனந்த பூங்காற்றே

Solai Kuyil Song Lyrics in Tamil


BGM

ஆண் : தானே தானா… ராரரி நானா… ம்…

ஆண் : சோலைக்குயில் பாடும்…
சொல்லி கொடுத்தது யாரு…

பெண் : சோலைகுயில் பாடும்…
ஆண் : ஹிஹீம்ம்… அப்படியில்லையே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தான்னனன நானா…
நான்ன னன நானா…

பெண் : சோலைக்குயில் பாடும்…
சொல்லி கொடுத்தது யாரு…
ஆண் : ம்ம்… அப்படித்தான்…

ஆண் : சோலைக்குயில் பாடும்…
சொல்லி கொடுத்தது யாரு…
பூமி என்னும் கிண்ணம்…
இசையில் நிறைந்து வழியுதம்மா…
இதயம் துடிப்பதே இசை லயத்தில் அல்லவா…
அதை உள்ளே கேளு நீயும் பாடு…

பெண் : சோலைக்குயில் பாடும்…
சொல்லி கொடுத்தது யாரு…
பூமி என்னும் கிண்ணம்…
இசையில் நிறைந்து வழியுதம்மா…
இதயம் துடிப்பதே இசை லயத்தில் அல்லவா…
அதை உள்ளே கேளு நீயும் பாடு…

ஆண் & பெண் : சோலைக்குயில் பாடும்…

BGM

ஆண் : கொட்டும் மழை முடிந்த பிறகும்…
கொடிகளில் இலையில் இருந்து…
சொட்டுகின்ற மழையின் துளிகள்…
தாளகதி செல்லுமே அதை கண்டு தெளி மனமே…

பெண் : குடங்களை குளத்தில் நிறைத்து…
குமரிகள் நடக்கும் பொழுது…
குடத்துக்குள் தளும்பும் அலைகள்…
சப்தஸ்வரம் சொல்லுமே…

ஆண் : நமக்கெல்லாம் சங்கீதமும் மொழிகளும் வேறொன்றோ…
பறைவைக்கும் விலங்குக்கும் சங்கீதமே மொழியன்றோ…

பெண் : பெண்ணின் கையேடு வளையொலி சங்கீதம்…
பெண்ணின் காலோடு கொலுசொலி சங்கீதம்…

ஆண் : அந்த வளையும் கொலுசும் ஸ்வரங்கள்…
உனக்கு சொல்லி தரவில்லையா…

ஆண் & பெண் : சோலைக்குயில் பாடும்…

BGM

ஆண் : துள்ளி வரும் குழந்தை எடுத்து…
அள்ளி வைத்து அணைக்கும்போது…
பிஞ்சு பிள்ளை நெஞ்சை நனைப்பது…
சின்ன சுகம் அல்லவா அது நெஞ்சிக்கழகல்லவா…

ஆண் : இதயங்கள் எரியும் பொழுது…
இதயத்தை புரிந்த ஒருத்தி…
இரு விழி விரல் நனைப்பது…
சின்ன சுகமல்லவா…

ஆண் : சுற்றமெல்லாம் போன பின்னும்…
தனிமைதான் சின்ன சுகம்…
வெண்ணிலவு போன பின்னும்…
வெட்டவெளி சின்ன சுகம்…

பெண் : இந்த சங்கீதம் காயத்துக்கு சின்ன சுகம்…
பிள்ளை சந்தோசம் சோகத்திலும் சின்ன சுகம்…

ஆண் : ஒரு ஆனந்த பூங்காற்றை அள்ளி தருவது…
இசை இசை அல்லவா…

ஆண் : சோலைக்குயில் பாடும்…
சொல்லி கொடுத்தது யாரு…
பூமி என்னும் கிண்ணம்…
இசையில் நிறைந்து வழியுதம்மா…
இதயம் துடிப்பதே இசை லயத்தில் அல்லவா…
அதை உள்ளே கேளு நீயும் பாடு…

பெண் : சோலைக்குயில் பாடும்…
சொல்லி கொடுத்தது யாரு…
பூமி என்னும் கிண்ணம்…
இசையில் நிறைந்து வழியுதம்மா…
இதயம் துடிப்பதே இசை லயத்தில் அல்லவா…
அதை உள்ளே கேளு நீயும் பாடு…

ஆண் & பெண் : சோலைக்குயில் பாடும்… ம்ம்ம்…


Notes : Solai Kuyil Song Lyrics in Tamil. This Song from Anantha Poongatre (1999). Song Lyrics penned by Vairamuthu. சோலைக்குயில் பாடும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading