குயில் பாட்டு கேக்குது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகிருஷ்ணராஜ் & கே.எஸ். சித்ராதேவாவாய்மையே வெல்லும்

Kuyil Pattu Kekkuthu Song Lyrics in Tamil


BGM

பெண் : குக்குகூகூ… குக்குகூகூ…
குயில் பாட்டு கேக்குது…
குயில் பாட்டை குளிர் காற்று…
செவியோரம் சேர்க்குது…

பெண் : அடி சின்ன மணிக்குயிலே…
எந்தன் சிந்தை மயங்குது பார்…
இந்த சிந்து படித்திடத்தான்…
இங்கு சொல்லி கொடுத்தது யார்…

பெண் : இசை தேன் வந்து தேன் வந்து…
பாயுது பாயுது குயிலே…

ஆண் : தீம்த தீம்த திரனா திர…
தீம்த தீம்த திரனா திர…
தீம்த தீம்த திரனா திர தீம் திர…

ஆண் : தீம்த தீம்த திரனா திர…
தீம்த தீம்த திரனா திர…
தீம்த தீம்த திரனா திர தீம்…

BGM

ஆண் : தீம்த தீம்த திரனா திர…
தீம்த தீம்த திரனா திர…
தீம்த தீம்த திரனா திர தீம்…

பெண் : விண்ணை விட்டு நிலத்தில் இறங்கிடும்…
மண்ணை தொட்டு நடனம் புரிந்திடும்…
தூறல் மழை துளியை தெளித்திடும் ஈர முகிலே…

பெண் : பச்சை பயிர் உலகில் தழைப்பதும்…
பட்ட மரம் திரும்ப கிளைப்பதும்…
தாகங்களை நொடியில் தணிப்பதும் உங்கள் செயலே…

பெண் : எந்த வேருக்கும் நீர்விடும் மனது…
இங்கு யாருக்கும் வாய்ப்பது அரிது…
அம்மம்மா மக்கள் தாகங்கள் தீர்ந்திட…
பாடடி பாடடி குயிலே…

ஆண் : தீம்த தீம்த திரனா திர…
தீம்த தீம்த திரனா திர…
தீம்த தீம்த திரனா திர தீம் திர…

BGM

பெண் : தென்பொதிகை மடியில் பிறந்தவள்…
தென்மதுரை நகரில் புகுந்தவள்…
செந்தமிழர் உணர்வில் கலந்தவள் தென்றல் மகளே…

பெண் : உன்னை இங்கு தடுக்க முடியுமா…
ஆணை இட்டு ஒடுக்க முடியுமா…
கூட்டுக்குள்ளே அடைக்க முடியுமா சொல்லு மகளே…

பெண் : இந்த பெண்ணினம் அப்படி இருக்கும்…
இது உன்னினம் என்பதை நினைக்கும்…
அம்மம்மா பெண்மை வாழ்கின்ற வாழ்வென்று…
பாடடி பாடடி குயிலே…

ஆண் : தீம்த தீம்த திரனா திர…
தீம்த தீம்த திரனா திர…
தீம்த தீம்த திரனா திர தீம் திர…

பெண் : குக்குகூகூ… குக்குகூகூ…
குயில் பாட்டு கேக்குது…
குயில் பாட்டை குளிர் காற்று…
செவியோரம் சேர்க்குது…

பெண் : அடி சின்ன மணிக்குயிலே…
எந்தன் சிந்தை மயங்குது பார்…
இந்த சிந்து படித்திடத்தான்…
இங்கு சொல்லி கொடுத்தது யார்…

பெண் : இசை தேன் வந்து தேன் வந்து…
பாயுது பாயுது குயிலே…

ஆண் : தீம்த தீம்த திரனா திர…
தீம்த தீம்த திரனா திர…
தீம்த தீம்த திரனா திர தீம் திர…


Notes : Kuyil Pattu Kekkuthu Song Lyrics in Tamil. This Song from Vaimaye Vellum (1997). Song Lyrics penned by Vaali. குயில் பாட்டு கேக்குது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading