செம்மீனா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன்தேவாஆனந்த பூங்காற்றே

Semeena Song Lyrics in Tamil


BGM

ஆண் : செம்மீனா விண்மீனா…
செம்மீனா விண்மீனா…
கண்ணோடு வாழும் கலைமானா…
இல்லை கண் தோன்றி மறையும் பொய்மானா…
கண்ணிரண்டும் இமைக்கும் சிலைதானா…
என் கனவுக்குள் அடிக்கும் அலைதானா…

ஆண் : வெண்ணிலாவின் தீவா…
அவள் வெள்ளைப்பூவா…
கம்பன் காளிதாசன் சொன்ன காதல் தேனா…

ஆண் : செம்மீனா விண்மீனா…
செம்மீனா விண்மீனா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : இருளைப் பின்னிய குழலோ…
இருவிழிகள் நிலவின் நிழலோ…
பொன் உதடுகளின் சிறுவரியில்…
என் உயிரைப் புதைப்பாளோ…

ஆண் : ரவிவர்மன் தூரிகை எழுத்தோ…
இல்லை சங்கில் ஊறிய கழுத்தோ…
அதில் ஒற்றை வேர்வைத் துளியாய்…
நான் உருண்டிட மாட்டேனோ…

ஆண் : பூமி கொண்ட பூவையெல்லாம்…
இரு பந்தாய் செய்தது யார் செயலோ…
சின்ன ஓவியச் சிற்றிடையோ…
அவள் சேலை கட்டிய சிறு புயலோ…

ஆண் : என் பெண்பாவை கொண்ட பொன்கால்கள்…
அவை மன்மதன் தோட்டத்து மரகதத் தூண்கள்…
பெண் : தாரரரா…

ஆண் : செம்மீனா விண்மீனா…
செம்மீனா விண்மீனா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : அவளே என் துணையானால்…
என் ஆவியை உடையாய் நெய்வேன்…
அவள் மேனியில் உடையாய்த் தழுவி…
பல மெல்லிய இடம் தொடுவேன்…

ஆண் : மார்கழி மாதத்து இரவில்…
என் மாங்கனி குளிர்கிற பொழுதில்…
என் சுவாசத்தில் தணிகின்ற சூட்டை…
என் சுந்தரிக்குப் பரிசளிப்பேன்…

ஆண் : மோகம் தீர்க்கும் முதலிரவில்…
ஒரு மேக மெத்தை நான் தருவேன்…
மாதம் இரண்டில் மசக்கை வந்தால்…
ஒரு மாந்தோப்பு பரிசளிப்பேன்…

ஆண் : அவள் நடந்தாலோ…
இடை அதிர்ந்தாலோ…
குழல் உதிர்க்கிற பூவுக்கும்…
பூஜைகள் புரிவேன்…

ஆண் : செம்மீனா விண்மீனா…
செம்மீனா விண்மீனா…

ஆண் : செம்மீனா விண்மீனா…
செம்மீனா விண்மீனா…
கண்ணோடு வாழும் கலைமானா…
இல்லை கண் தோன்றி மறையும் பொய்மானா…
கண்ணிரண்டும் இமைக்கும் சிலைதானா…
என் கனவுக்குள் அடிக்கும் அலைதானா…

ஆண் : வெண்ணிலாவின் தீவா…
அவள் வெள்ளைப்பூவா…
கம்பன் காளிதாசன் சொன்ன காதல் தேனா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : செம்மீனா விண்மீனா…
செம்மீனா விண்மீனா…

BGM


Notes : Semeena Song Lyrics in Tamil. This Song from Anantha Poongatre (1999). Song Lyrics penned by Vairamuthu. செம்மீனா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading