Category Archives: கண்டேன் காதலை

ஒரு நாள் இரவில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்திப்பு & பென்னி டயல்வித்யாசாகர்கண்டேன் காதலை

Oru Naal Iravil Song Lyrics in Tamil


பெண் : கண்டேன் காதலை… கண்டேன் காதலை…
கண்டேன் காதலை… கண்டேன் காதலை…
கண்டேன் காதலை… கண்டேன் காதலை…
கண்டேன் காதலை… கண்டேன் காதலை…

BGM

ஆண் : ஒரு நாள் இரவில் பகல் போல் நிலவில்…
பருவம் பதினாறு கண்டேனே…

BGM

ஆண் : அடடா அருகில் அழகோ அழகில்…
இதயம் நழுவாது நின்றேனே…

BGM

ஆண் : கண்டேனே கடிக்கின்ற மானை…
பெண்ணுக்குள் இருக்கின்ற ஆணை…
பார்த்தாலேப் பயந்தோடும் சேனை…

BGM

ஆண் : வெட்கத்தில் அடங்காத பெண்மை…
நெஞ்சத்தில் நெறுப்பேற்றும் கண்ணை…
மொத்தத்தில் பறித்தாளே என்னை…

BGM

ஆண் : ஒரு நாள் இரவில் பகல் போல் நிலவில்…
பருவம் பதினாறு கண்டேனே…
ஆல்வேஸ் பீ மைன் ஆல்வேஸ் பீ மைன்… யெஹ்…

ஆண் : அடடா அருகில் அழகோ அழகில்…
இதயம் நழுவாது நின்றேனே…
யு மேக் மீ ஸ்மைல் யு மேக் மீ ஸ்மைல்… யெஹ்…

BGM

ஆண் : படப்படப் படபடப்பில்…
பார்த்தாலே பயமேற…
தொடத்தொடத் தொடதொடப்பில்…
உள்நெஞ்சில் இரயில் ஓட…

ஆண் : வாயாடிப் பெண்ணாக வந்தாளே…
என் நெஞ்சைப் பந்தாடிச் சென்றாளே…

ஆண் : படப்படப் படபடப்பில்…
பார்த்தாலே பயமேற…
தொடத்தொடத் தொடதொடப்பில்…
உள்நெஞ்சில் இரயில் ஓட…

ஆண் : வாயாடிப் பெண்ணாக வந்தாளே…
என் நெஞ்சைப் பந்தாடிச் சென்றாளே…

ஆண் : சின்னச்சின்னக் கண்ணாலே…
குழு : சின்னச்சின்னக் கண்ணாலே…
ஆண் : சிக்க வச்சிப் போனாளே…
குழு : சிக்க வச்சிப் போனாளே…

ஆண் : சக்கரத்தைப் போலத்தான் சுத்த வச்சிப்போனாளே…
குழு : போனாளே…
ஆண் : முதல் அவளா முதல் முதல் அவளா…
முதல் முறைத் தொலைத்தேனே…

BGM

ஆண் : ஒரு நாள் இரவில் பகல் போல் நிலவில்…
பருவம் பதினாறு கண்டேனே…

BGM

ஆண் : அடடா அருகில் அழகோ அழகில்…
இதயம் நழுவாது நின்றேனே…

BGM

ஆண் : மற மற என்றாலும் மனதோடு வந்தாளே…
சர சர சரவெடியாய் திரியேற்றிச் சென்றாளே…
ஐய்யையோ ஐய்யையோ யாரோ நீ…
எந்நாளும் எனை ஆளும் மகாராணி…

ஆண் : மற மற என்றாலும் மனதோடு வந்தாளே…
சர சர சரவெடியாய் திரியேற்றிச் சென்றாளே…
ஐய்யையோ ஐய்யையோ யாரோ நீ…
எந்நாளும் எனை ஆளும் மகாராணி…

ஆண் : அஞ்சு மீட்டர் பக்கத்தில்…
நெஞ்சிருக்கும் வெப்பத்தில்…
காதல் என்னும் யுத்தத்தில்…
என்னை வென்றாள் மொத்தத்தில்…

ஆண் : முதல் அவளா முதல் முதல் அவளா…
முதல் முறைத் தொலைத்தேனே…

BGM


Notes : Oru Naal Iravil Song Lyrics in Tamil. This Song from Kanden Kadhalai (2009). Song Lyrics penned by Na. Muthukumar. ஒரு நாள் இரவில் பாடல் வரிகள்.


Venpanju Song Lyrics in Tamil

வெண்பஞ்சு மேகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஉதித் நாராயண் & கார்த்திக்வித்யாசாகர்கண்டேன் காதலை

Venpanju Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெண்பஞ்சு மேகம் என்பேனா…
பொன் மஞ்சள் நேரம் என்பேனா…
கண் கொஞ்சும் கோலம் என்பேனா…
என் அன்பே என் அன்பே…

ஆண் : சில்லென்ற சாரல் என்பேனா…
சில்வண்டு பாடல் என்பேனா…
உள்ளத்தின் தேடல் என்பேனா…
என் அன்பே என் அன்பே…

ஆண் : என்னென்று உன்னை சொல்வது…
மொழி இல்லை சொல்ல என்னிடம்…
பொய் இல்லை என்ன செய்வது…
எனதுள்ளம் இன்று உன்னிடம்…

ஆண் : உன்னாலே உன்னாலே…
மண் மேலே மண் மேலே…

ஆண் : கண்டேன் கண்டேன் காதலை…
கண்டேன் கண்டேன் காதலை…
கண்டேன் கண்டேன் காதலை…
கண்டேன் கண்டேன் காதலை…

BGM

ஆண் : வெண்பஞ்சு மேகம் என்பேனா…
பொன் மஞ்சள் நேரம் என்பேனா…
கண் கொஞ்சும் கோலம் என்பேனா…
என் அன்பே என் அன்பே…

BGM

ஆண் : கண்கள் இரண்டை காதல் வந்து சந்திப்பதேன்…
இல்லை இல்லை தூக்கம் என்று வஞ்சிப்பதேன்…
உள்ளம் உன்னை ஏந்திக்கொள்ள சிந்திப்பதேன்…
கொள்ளைக்கொண்டு போனப்பின்பும் மண்ணிப்பதேன்…

ஆண் : உன் கையை சேர்ந்திடவே…
என் கைகள் நீளுவதேன்…
உன் பேரைக் கேட்டதுமே…
தார்சாலைப் பூப்பது ஏன்…

ஆண் : உதடுகள் அடிக்கடி சிரிப்பதும் ஏன்…
முதுகினில் சிறகுகள் முளைப்பது ஏன்…
என் ஆசைகள் உன்னை சொல்வது…
நீ ஆயுதம் இன்றிக் கொல்வது… கொள்வதேன்…

ஆண் : கண்டேன் கண்டேன் காதலை…
கண்டேன் கண்டேன் காதலை…
கண்டேன் கண்டேன் காதலை…
கண்டேன் கண்டேன் காதலை…

BGM

ஆண் : குட்டிக்குட்டி சேட்டை செய்து ஒட்டிக்கொண்டாய்…
கொஞ்சிக்கொஞ்சிப் பேசி என்னை கொத்திச்சென்றாய்…
தள்ளித்தள்ளிப் போனப் பின்னும் பக்கம் வந்தாய்…
இன்னும் இன்னும் மேலே செல்ல இரக்கை தந்தாய்…

ஆண் : எல்லாமே மாறிவிடும் சொன்னாளே மீண்டுவர…
சொல்லாமல் மாற்றத்தைத் தந்தாயே நான் மலர…

ஆண் : உன்னைவிட அதிசயம் உலகில் இல்லை…
ஏய் அழகிய அவஸ்தையும் எதுவுமில்லை…

ஆண் : என் தேவதை உன்னை எண்ணியே…
நான் ஏங்கியதென்ன என்னையே…

ஆண் : கண்டேன் கண்டேன் காதலை…
கண்டேன் கண்டேன் காதலை…
கண்டேன் கண்டேன் காதலை…
கண்டேன் கண்டேன் காதலை…

BGM


Notes : Venpanju Song Lyrics in Tamil. This Song from Kanden Kadhalai (2009). Song Lyrics penned by Yugabharathi. வெண்பஞ்சு மேகம் பாடல் வரிகள்.


ஓடோடி போறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிலாவண்யா & ராஷ்மி விஜயன்வித்யாசாகர்கண்டேன் காதலை

Oododi Poaraen Song Lyrics in Tamil


BGM

பெண் : ஓடோ ஓடோ ஓடோடி போறேன்…
காதல் பாதி தேடோடி போறேன்…
ஓடோ ஓடோ ஓடோடி போறேன்…
காதல் பாதி தேடோடி போறேன்…

பெண் : கனவெல்லாம் விரலோடு…
உலகெல்லாம் அழகோடு…
இனியெல்லாம் அவனோடு…

BGM

பெண் : பூவாகும் தாரோடு…
காற்றாகும் காரோடு…
மாற்றங்கள் வேரோடு…

BGM

பெண் : ஓ ஹோ ஹோ… என் கூடு மாறப்போறேன்…
ஓ ஹோ ஹோ… என் வானம் மாத்தப்போறேன்…

BGM

பெண் : ஓடோ ஓடோ ஓடோடி போறேன்…
காதல் பாதி தேடோடி போறேன்…

BGM

பெண் : ஹே… என் புது சிறகே…
நீ ஏன் முளைத்தாய் கேட்காமல் என்னை…
ஹே… என் மனச் சிறையே…
நீ ஏன் திறந்தாய் கேட்காமல் என்னை…

பெண் : ஒற்றைப் பின்னல் அவனுக்காக…
நெற்றிப் பொட்டும் அவனுக்காக…
இன்னும் என்ன என்று என்னைக் கேட்காதே…

பெண் : இதழின் ஈரம் அவனுக்காக…
மனதின் பாரம் அவனுக்காக…
இன்னும் என்ன என்று என்னைக் கேட்காதே…

பெண் : ஓ ஹோ ஹோ… என் கூடு மாறப்போறேன்…
ஓ ஹோ ஹோ… என் வானம் மாத்தப்போறேன்…

பெண் : ஓடோ ஓடோ ஓடோடி போறேன்…
காதல் பாதி தேடோடி போறேன்…

BGM

பெண் : ஹே… நீ சிரிப்பது ஏன் நீ நடிப்பது ஏன்…
கேட்காதே என்னை…
ஹே… நீ குதிப்பது ஏன் நீ மிதப்பது ஏன்…
கேட்காதே என்னை…

பெண் : தானே பேசி நடக்கும் போதும்…
காற்றில் முத்தம் கொடுக்கும்போதும்…
எனக்கென்ன ஆச்சு என்னைக் கேட்காதே…

பெண் : கன்னம் சிவந்து நிற்கும் போதும்…
கட்டிக்கொண்டு கத்தும் போதும்…
எனக்கென்ன ஆச்சு என்னைக் கேட்காதே…

பெண் : ஓ ஹோ ஹோ… என் கூடு மாறப்போறேன்…
ஓ ஹோ ஹோ… என் வானம் மாத்தப்போறேன்…
ஓ ஹோ ஹோ… என் கூடு மாறப்போறேன்…
ஓ ஹோ ஹோ… என் வானம் மாத்தப்போறேன்…


Notes : Oododi Poaraen Song Lyrics in Tamil. This Song from Kanden Kadhalai (2009). Song Lyrics penned by Madhan Karky. ஓடோடி போறேன் பாடல் வரிகள்.


சுத்துது சுத்துது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிஹரன்வித்யாசாகர்கண்டேன் காதலை

Suthudhu Suthudhu Song Lyrics in Tamil


ஆண் : கொக்கே கொக்கே பூவ போடு…
மக்கா மக்கா கொலவ போடு…
கெழக்கா மேற்கா வேட்ட போடு…
இதமா பதமா கம்மல் போடு…

ஆண் : விளையாட்டு பயலுங்க யாரு…
வெண்டைக்கா கம்மல போடு…
பணக்காரன் மாமன் யாரு…
வைரத்தில் லோலாக்கு போடு…

ஆண் : வலி ஏதும் இல்லாம…
துளி ரத்தம் சிந்தாமல் தோடு போடு…
சித்தப்பு பெரியப்பு சீரோடு…
விருந்தொன்னு போடு போடு…

BGM

ஆண் : சுத்துது சுத்துது இந்தாறு…
சொக்குது சொக்குது இந்தாறு…
சிக்குது சிக்குது இந்தாறு…
அத சொன்னா கூட தீராது…

ஆண் : சுத்துது சுத்துது இந்தாறு…
சொக்குது சொக்குது இந்தாறு…
சிக்குது சிக்குது இந்தாறு…
அத சொன்னா கூட தீராது…

ஆண் : கத்தி எரிஞ்சது போல…
நீ சுத்தி இழுப்பதினால…
பஞ்சு வெடிப்பது போல…
என் நெஞ்சு துடிப்பதுனால…
அடி மயிலே உன்னால் மனசுக்குள்ள தகராறு…

ஆண் : சுத்துது சுத்துது இந்தாறு…
சொக்குது சொக்குது இந்தாறு…
சிக்குது சிக்குது இந்தாறு…
அத சொன்னா கூட தீராது…

BGM

ஆண் : உனக்கோர் பேர்தான் கிடையாது…
அத நான் சொல்ல முடியாது…
கடல பிடிச்சு கையில் அடக்கிட தெரியாது…

ஆண் : உனக்கோர் பேர்தான் கிடையாது…
அத நான் சொல்ல முடியாது…
கடல பிடிச்சு கையில் அடக்கிட தெரியாது…

ஆண் : விண்ணில் போனா நிலவாகும்…
மண்ணில் வந்தா மழையாகும்…
கோவில் போனா சிலையாகும்…
கொடியில் பூத்தா மலராகும்…

ஆண் : ஒத்த வார்த்தையில் சொல்ல சொன்னா…
உனது பேரே அழகாகும்…

BGM

ஆண் : சுத்துது சுத்துது இந்தாறு…
சொக்குது சொக்குது இந்தாறு…
சிக்குது சிக்குது இந்தாறு…
அத சொன்னா கூட தீராது…

BGM

ஆண் : ஓ… அழகே உன்னை பார்க்கதானே…
அத்தனை ஊரும் வருகிறதே…
தென்னக்காயில் கூடதான்…
மூணாம் கண்ணும் முளைக்கிறதே…

ஆண் : ஓ… அழகே உன்னை பார்க்கதானே…
அத்தனை ஊரும் வருகிறதே…
தென்னக்காயில் கூடதான்…
மூணாம் கண்ணும் முளைக்கிறதே…

ஆண் : சந்தர்பம் நம்பி போனா…
சந்திரன் வந்து கடை போடும்…
அந்த பக்கம் நீ போனா…
மின்னல் உன்னை எடை போடும்…

ஆண் : ஒத்த வார்த்தையில் சொல்ல சொன்னா…
எல்லோர் மனசும் தடுமாறும்…

BGM


Notes : Suthudhu Suthudhu Song Lyrics in Tamil. This Song from Kanden Kadhalai (2009). Song Lyrics penned by Na. Muthukumar. சுத்துது சுத்துது பாடல் வரிகள்.