சுத்துது சுத்துது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிஹரன்வித்யாசாகர்கண்டேன் காதலை

Suthudhu Suthudhu Song Lyrics in Tamil


ஆண் : கொக்கே கொக்கே பூவ போடு…
மக்கா மக்கா கொலவ போடு…
கெழக்கா மேற்கா வேட்ட போடு…
இதமா பதமா கம்மல் போடு…

ஆண் : விளையாட்டு பயலுங்க யாரு…
வெண்டைக்கா கம்மல போடு…
பணக்காரன் மாமன் யாரு…
வைரத்தில் லோலாக்கு போடு…

ஆண் : வலி ஏதும் இல்லாம…
துளி ரத்தம் சிந்தாமல் தோடு போடு…
சித்தப்பு பெரியப்பு சீரோடு…
விருந்தொன்னு போடு போடு…

—BGM—

ஆண் : சுத்துது சுத்துது இந்தாறு…
சொக்குது சொக்குது இந்தாறு…
சிக்குது சிக்குது இந்தாறு…
அத சொன்னா கூட தீராது…

ஆண் : சுத்துது சுத்துது இந்தாறு…
சொக்குது சொக்குது இந்தாறு…
சிக்குது சிக்குது இந்தாறு…
அத சொன்னா கூட தீராது…

ஆண் : கத்தி எரிஞ்சது போல…
நீ சுத்தி இழுப்பதினால…
பஞ்சு வெடிப்பது போல…
என் நெஞ்சு துடிப்பதுனால…
அடி மயிலே உன்னால் மனசுக்குள்ள தகராறு…

ஆண் : சுத்துது சுத்துது இந்தாறு…
சொக்குது சொக்குது இந்தாறு…
சிக்குது சிக்குது இந்தாறு…
அத சொன்னா கூட தீராது…

—BGM—

ஆண் : உனக்கோர் பேர்தான் கிடையாது…
அத நான் சொல்ல முடியாது…
கடல பிடிச்சு கையில் அடக்கிட தெரியாது…

ஆண் : உனக்கோர் பேர்தான் கிடையாது…
அத நான் சொல்ல முடியாது…
கடல பிடிச்சு கையில் அடக்கிட தெரியாது…

ஆண் : விண்ணில் போனா நிலவாகும்…
மண்ணில் வந்தா மழையாகும்…
கோவில் போனா சிலையாகும்…
கொடியில் பூத்தா மலராகும்…

ஆண் : ஒத்த வார்த்தையில் சொல்ல சொன்னா…
உனது பேரே அழகாகும்…

—BGM—

ஆண் : சுத்துது சுத்துது இந்தாறு…
சொக்குது சொக்குது இந்தாறு…
சிக்குது சிக்குது இந்தாறு…
அத சொன்னா கூட தீராது…

—BGM—

ஆண் : ஓ… அழகே உன்னை பார்க்கதானே…
அத்தனை ஊரும் வருகிறதே…
தென்னக்காயில் கூடதான்…
மூணாம் கண்ணும் முளைக்கிறதே…

ஆண் : ஓ… அழகே உன்னை பார்க்கதானே…
அத்தனை ஊரும் வருகிறதே…
தென்னக்காயில் கூடதான்…
மூணாம் கண்ணும் முளைக்கிறதே…

ஆண் : சந்தர்பம் நம்பி போனா…
சந்திரன் வந்து கடை போடும்…
அந்த பக்கம் நீ போனா…
மின்னல் உன்னை எடை போடும்…

ஆண் : ஒத்த வார்த்தையில் சொல்ல சொன்னா…
எல்லோர் மனசும் தடுமாறும்…

—BGM—


Notes : Suthudhu Suthudhu Song Lyrics in Tamil. This Song from Kanden Kadhalai (2009). Song Lyrics penned by Na. Muthukumar. சுத்துது சுத்துது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading