என் வீட்டு தோட்டத்தில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & சுஜாதா மோகன்ஏ.ஆர்.ரகுமான்ஜென்டில்மேன்

En Veetu Thotathil Song Lyrics in Tamil


BGM

பெண் : என் வீட்டு தோட்டத்தில்…
பூவெல்லாம் கேட்டுப்பார்…
என் வீட்டு ஜன்னல் கம்பி…
எல்லாமே கேட்டுபார்…

பெண் : என் வீட்டு தென்னங்கீற்றை…
இப்போதே கேட்டுபார்…
என் நெஞ்சை சொல்லுமே…

பெண் : என் வீட்டு தோட்டத்தில்…
பூவெல்லாம் கேட்டுப்பார்…
என் வீட்டு ஜன்னல் கம்பி…
எல்லாமே கேட்டுபார்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : என் வீட்டு தென்னங்கீற்றை…
இப்போதே கேட்டுபார்…
என் நெஞ்சை சொல்லுமே…

BGM

ஆண் : வாய்பாட்டு பாடும் பெண்ணே…
மெளனங்கள் கூடாது…
வாய் பூட்டு சத்தம் எல்லாம்…
பெண்ணுக்கு ஆகாது…

பெண் : வண்டெல்லாம் சத்தம் போட்டால்…
பூஞ்சோலை தாங்காது…
மொட்டுக்கள் சத்தம் போட்டால்…
வண்டுகே கேட்காது…

ஆண் : ஆடிக்கு பின்னாலே காவேரி தாங்காது…
பெண் : ஆளான பின்னாலே அல்லி பூ மூடாது…
ஆண் : ஆசை துடிக்கின்றதோ…

ஆண் : உன் வீட்டு தோட்டத்தில்…
பூவெல்லாம் கேட்டுப்பார்…
உன் வீட்டு ஜன்னல் கம்பி…
எல்லாமே கேட்டுபார்…

ஆண் : உன் வீட்டு தென்னங்கீற்றை…
ஒவ்வொன்றாய் கேட்டுபார்…
என் பெயர் சொல்லுமே…

ஆண் : உன் வீட்டு தோட்டத்தில்…
பூவெல்லாம் கேட்டுப்பார்…
உன் வீட்டு ஜன்னல் கம்பி…
எல்லாமே கேட்டுபார்…

ஆண் : உன் வீட்டு தென்னங்கீற்றை…
ஒவ்வொன்றாய் கேட்டுபார்…
என் பெயர் சொல்லுமே…

BGM

பெண் : சொல்லுக்கும் தெரியாமல்…
சொல்லத்தான் வந்தேனே…
சொல்லுக்குள் அர்த்தம் போல…
சொல்லாமல் நின்றேனே…

ஆண் : சொல்லுக்கும் அர்த்ததுக்கும்…
தூரங்கள் கிடையாது…
சொல்லாத காதல் எல்லாம்…
சொர்க்கத்தில் சேராது…

பெண் : எண்ணிக்கை தீர்ந்தாலும் முத்தங்கள் தீராது…
ஆண் : எண்ணிக்கை பார்த்தாலே முத்தங்கள் ஆகாது…
பெண் : ம்ம்… அனுபவமோ…

பெண் : என் வீட்டு தோட்டத்தில்…
பூவெல்லாம் கேட்டுப்பார்…
என் வீட்டு ஜன்னல் கம்பி…
எல்லாமே கேட்டுபார்…

பெண் : என் வீட்டு தென்னங்கீற்றை…
இப்போதே கேட்டுபார்…
என் நெஞ்சை சொல்லுமே…

ஆண் : உன் வீட்டு தோட்டத்தில்…
பூவெல்லாம் கேட்டுப்பார்…
உன் வீட்டு ஜன்னல் கம்பி…
எல்லாமே கேட்டுபார்…

ஆண் : உன் வீட்டு தென்னங்கீற்றை…
ஒவ்வொன்றாய் கேட்டுபார்…
என் பெயர் சொல்லுமே…


Notes : En Veetu Thotathil Song Lyrics in Tamil. This Song from Gentleman (1993). Song Lyrics penned by Vairamuthu. என் வீட்டு தோட்டத்தில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading