பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | ஏ.ஆர்.ரகுமான் | ஜென்டில்மேன் |
Ottagatha Kattikko Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஒட்டகத்த கட்டிக்கோ…
கெட்டியாக ஒட்டிக்கோ…
வட்ட வட்ட பொட்டுக்காரி…
பெண் : ஒத்துழைக்க ஒத்துக்கோ…
பத்த வச்சா பத்திக்கோ…
வாய் வெடிச்ச மொட்டுக்காரி…
பெண் : விடவேண்டும் அச்சத்தை…
தொடவேண்டும் உச்சத்தை…
அதிகாலை சேலை சொல்லுமடி மிச்சத்தை…
பெண் : விடவேண்டும் அச்சத்தை…
தொடவேண்டும் உச்சத்தை…
அதிகாலை சேலை சொல்லுமடி மிச்சத்தை…
பெண் : ஒட்டகத்த கட்டிக்கோ…
கெட்டியாக ஒட்டிக்கோ…
வட்ட வட்ட பொட்டுக்காரி…
பெண் : ஒத்துழைக்க ஒத்துக்கோ…
பத்த வச்சா பத்திக்கோ…
வாய் வெடிச்ச மொட்டுக்காரி…
—BGM—
ஆண் : கண்ணே என் முன்னே கடலும் துள்ளாது…
பெண்ணே நான் தூண்டில் போட்டால் விண்மீனும் தப்பாது…
—BGM—
ஆண் : கண்ணே என் முன்னே கடலும் துள்ளாது…
பெண்ணே நான் தூண்டில் போட்டால் விண்மீனும் தப்பாது…
ஆண் : உள்ளங்கை தேனே கள்வன் நான்தானே…
கள்வனை கொள்ளை கொண்ட கள்ளி நீதானே…
பொன் கொண்டதுண்டு பெண் கொண்டதில்லை…
அங்கம் சொந்தமானால் தங்கம் தேவையில்லை…
ஆண் : ஒட்டகத்த கட்டிக்கோ…
கெட்டியாக ஒட்டிக்கோ…
வட்ட வட்ட பொட்டுக்காரி…
ஆண் : ஒத்துழைக்க ஒத்துக்கோ…
பத்த வச்சா பத்திக்கோ…
வாய் வெடிச்ச மொட்டுக்காரி…
ஆண் : விடவேண்டும் அச்சத்தை…
தொடவேண்டும் உச்சத்தை…
அதிகாலை சேலை சொல்லுமடி மிச்சத்தை…
ஆண் : ஒட்டகத்த கட்டிக்கோ…
கெட்டியாக ஒட்டிக்கோ…
வட்ட வட்ட பொட்டுக்காரி…
ஆண் : ஒத்துழைக்க ஒத்துக்கோ…
பத்த வச்சா பத்திக்கோ…
வாய் வெடிச்ச மொட்டுக்காரி…
—BGM—
பெண் : உடைவாளில் நீ எந்தன் உடைதொட்ட அந்நேரம்…
உன் பார்வை எந்தன் உயிர் தொட்டா தருவாயோ…
கோழைக்கு வாழ்க்கை பட்டால் வாழ்வே என்னாகும்…
உன் வாலுக்கு வாழ்க்கைப் பட்டால் வாழ்வே பொன்னாகும்…
பெண் : நீ என்னை மீண்டும் திருடத்தான் வேண்டும்…
முரட்டுக் கைகள் தொட்டு மொட்டுக்கள் பூக்கவேண்டும்…
பெண் : ஒட்டகத்த கட்டிக்கோ…
கெட்டியாக ஒட்டிக்கோ…
வட்ட வட்ட பொட்டுக்காரி…
பெண் : ஒத்துழைக்க ஒத்துக்கோ…
பத்த வச்சா பத்திக்கோ…
வாய் வெடிச்ச மொட்டுக்காரி…
ஆண் & பெண் : விடவேண்டும் அச்சத்தை…
தொடவேண்டும் உச்சத்தை…
அதிகாலை சேலை சொல்லுமடி மிச்சத்தை…
ஆண் & பெண் : விடவேண்டும் அச்சத்தை…
தொடவேண்டும் உச்சத்தை…
அதிகாலை சேலை சொல்லுமடி மிச்சத்தை…
ஆண் & பெண் : ஒட்டகத்த கட்டிக்கோ…
கெட்டியாக ஒட்டிக்கோ…
வட்ட வட்ட பொட்டுக்காரி…
ஆண் & பெண் : ஒத்துழைக்க ஒத்துக்கோ…
பத்த வச்சா பத்திக்கோ…
வாய் வெடிச்ச மொட்டுக்காரி…
Notes : Ottagatha Kattikko Song Lyrics in Tamil. This Song from Gentleman (1993). Song Lyrics penned by Vairamuthu. ஒட்டகத்த கட்டிக்கோ பாடல் வரிகள்.