ஓடோடி போறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிலாவண்யா & ராஷ்மி விஜயன்வித்யாசாகர்கண்டேன் காதலை

Oododi Poaraen Song Lyrics in Tamil


BGM

பெண் : ஓடோ ஓடோ ஓடோடி போறேன்…
காதல் பாதி தேடோடி போறேன்…
ஓடோ ஓடோ ஓடோடி போறேன்…
காதல் பாதி தேடோடி போறேன்…

பெண் : கனவெல்லாம் விரலோடு…
உலகெல்லாம் அழகோடு…
இனியெல்லாம் அவனோடு…

BGM

பெண் : பூவாகும் தாரோடு…
காற்றாகும் காரோடு…
மாற்றங்கள் வேரோடு…

BGM

பெண் : ஓ ஹோ ஹோ… என் கூடு மாறப்போறேன்…
ஓ ஹோ ஹோ… என் வானம் மாத்தப்போறேன்…

BGM

பெண் : ஓடோ ஓடோ ஓடோடி போறேன்…
காதல் பாதி தேடோடி போறேன்…

BGM

பெண் : ஹே… என் புது சிறகே…
நீ ஏன் முளைத்தாய் கேட்காமல் என்னை…
ஹே… என் மனச் சிறையே…
நீ ஏன் திறந்தாய் கேட்காமல் என்னை…

பெண் : ஒற்றைப் பின்னல் அவனுக்காக…
நெற்றிப் பொட்டும் அவனுக்காக…
இன்னும் என்ன என்று என்னைக் கேட்காதே…

பெண் : இதழின் ஈரம் அவனுக்காக…
மனதின் பாரம் அவனுக்காக…
இன்னும் என்ன என்று என்னைக் கேட்காதே…

பெண் : ஓ ஹோ ஹோ… என் கூடு மாறப்போறேன்…
ஓ ஹோ ஹோ… என் வானம் மாத்தப்போறேன்…

பெண் : ஓடோ ஓடோ ஓடோடி போறேன்…
காதல் பாதி தேடோடி போறேன்…

BGM

பெண் : ஹே… நீ சிரிப்பது ஏன் நீ நடிப்பது ஏன்…
கேட்காதே என்னை…
ஹே… நீ குதிப்பது ஏன் நீ மிதப்பது ஏன்…
கேட்காதே என்னை…

பெண் : தானே பேசி நடக்கும் போதும்…
காற்றில் முத்தம் கொடுக்கும்போதும்…
எனக்கென்ன ஆச்சு என்னைக் கேட்காதே…

பெண் : கன்னம் சிவந்து நிற்கும் போதும்…
கட்டிக்கொண்டு கத்தும் போதும்…
எனக்கென்ன ஆச்சு என்னைக் கேட்காதே…

பெண் : ஓ ஹோ ஹோ… என் கூடு மாறப்போறேன்…
ஓ ஹோ ஹோ… என் வானம் மாத்தப்போறேன்…
ஓ ஹோ ஹோ… என் கூடு மாறப்போறேன்…
ஓ ஹோ ஹோ… என் வானம் மாத்தப்போறேன்…


Notes : Oododi Poaraen Song Lyrics in Tamil. This Song from Kanden Kadhalai (2009). Song Lyrics penned by Madhan Karky. ஓடோடி போறேன் பாடல் வரிகள்.


Scroll to Top