Category Archives: ஜே ஜே

பெண்கள் நெஞ்சை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமகாலட்சுமி ஐயர் & கே கேபரத்வாஜ்ஜே ஜே

Pengal Nenjai Song Lyrics in Tamil


பெண் : பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா…
உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போட வா…

பெண் : உன்னிடத்தில் உள்ள தெல்லாம் அள்ளி கொள்ளவா…
உன் உடம்புக்குள் உயிர் மட்டும் விட்டு செல்லவா…

ஆண் : உன் வேரோடு மழை சிந்த வரவா…
உன் வெட்கத்தை குளிப்பாட்ட வரவா…

பெண் : குளிப்பாட்டி அழுக்காக்கவா… ஏய் படவா…
ஆண் : நீ தொடவா… நான் தொட வா…
பெண் : ஹே மாதவா…

பெண் : பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா…
உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போட வா…

ஆண் : உன்னிடத்தில் உள்ள தெல்லாம் அள்ளி கொள்ளவா…
உன் உடம்புக்குள் உயிர் மட்டும் விட்டு செல்லவா…

பெண் : ஹே சண்டை போட வா…
ஆண் : ஹே விட்டு செல்ல வா…

BGM

பெண் : மொட்டுக்கெல்லாம் தும்மல் வந்தால் மலர்ந்து விடும்…
மோகம் வந்தால் பெண்ணின் உள்ளம் திறந்து விடும்…

BGM

ஆண் : முட்டைக்குள்ளே மஞ்சளுக்கும் கொழுப்பிருக்கும்…
உன் முடி முதல் கால் வரை கொழுப்பிருக்கும்…

பெண் : விழிகள் அளந்தால் இலக்கணம் இருக்கும்…
விரல்கள் அளந்தால் இலக்கியம் இருக்கும்…

ஆண் : பட்டு கைகளால் நீ தொட்டு கிடந்தால்…
பாறையும் இளமை சுரக்கும்…

பெண் : பாலாற்றில் நீராட்டவா… ஏய் படவா…

ஆண் : தொட வா… தொட வா…
தொட வா… தொட வா… தொட வா…

ஆண் : நான் தொட வா…
தொட வா… தொட வா…

பெண் : ஹே மாதவா…

பெண் : பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா…
உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போட வா…

ஆண் : உன்னிடத்தில் உள்ள தெல்லாம் அள்ளி கொள்ளவா…
உன் உடம்புக்குள் உயிர் மட்டும் விட்டு செல்லவா…

BGM

பெண் : கண்ணு காது மூக்கு மட்டும் தொட்டு விட்டு போ…
கற்பை மட்டும் கொஞ்ச காலம் விட்டு விட்டு போ…

BGM

ஆண் : தொலைந்த என் தூக்கம் எங்கே தந்து விட்டு போ…
தலையணை சுகம் இல்லை சொல்லி விட்டு போ…

பெண் : பதினெட்டு வருடம் பழுத்த என் அழகு…
பதினெட்டு நொடியில் சமர்ப்பணம் உனக்கு…

ஆண் : உன்னை கலந்தால் முன்னூறு வருஷம்…
நான் கண்ட இளமை நிலைக்கும்…

பெண் : முச்சத்தில் மூப்பேதடா படவா…

ஆண் : நீ தொட வா… நான் தொட வா…
பெண் : ஹே மாதவா வா வா…

பெண் : பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா…
உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போட வா…

ஆண் : உன்னிடத்தில் உள்ள தெல்லாம் அள்ளி கொள்ளவா…
உன் உடம்புக்குள் உயிர் மட்டும் விட்டு செல்லவா…

ஆண் : உன் வேரோடு மழை சிந்த வரவா…
உன் வெட்கத்தை குளிப்பாட்ட வரவா…

பெண் : ஹே குளிப்பாட்டி அழுக்காக்கவா படவா…
ஆண் : நீ தொடவா… நான் தொட வா…
பெண் : ஹே மாதவா…


Notes : Pengal Nenjai Song Lyrics in Tamil. This Song from Jay Jay (2003). Song Lyrics penned by Vairamuthu. பெண்கள் நெஞ்சை பாடல் வரிகள்.


May Maasam Song Lyrics in Tamil

மே மாசம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுசித்ராபரத்வாஜ்ஜே ஜே

May Maasam Song Lyrics in Tamil


BGM

பெண் : மே மாசம் 98இல் மேஜர் ஆனேனே…

BGM

பெண் : மேஜர் ஆன நாளாய் நானும் பேஜார் ஆனேனே…

BGM

பெண் : காயா பழமா என்று…
என் கன்னம் தடவும் சில பேர்…
எறும்பு ஊறுது என்று…
என் இடையை கிள்ளும் சில பேர்…

பெண் : என் ஆடைகளை தொட்டு பார்ப்பது போல்…
சிலர் அங்கம் தொடுகின்றார்…
அட சாலைகளில் உள்ள ரசிகர் எல்லாம்…
ஒரு சங்கம் வைக்கின்றார்…

BGM

பெண் : மே மாசம் 98இல் மேஜர் ஆனேனே…

BGM

பெண் : த்ர்டீன் என்பது அன்லக்கி நம்பர்…
மேற்கு உலகத்தில்…
த்ர்டீன் என்பது லக்கி நம்பர்…
எந்தன் விஷயத்தில்…

BGM

பெண் : த்ர்டீன் வந்தது ஏதோ நேர்ந்தது…
மங்கை பருவத்தில்…
போர்ட்டீன் வந்ததும் மாற்றம் வந்தது…
எந்தன் உருவத்தில்…

பெண் : அடுத்த வீட்டு பையன்…
அட அம்பு தொடுத்தான் சும்மா…
கோலம் போட போனால்…
அடி கூடாதென்றால் அம்மா…

பெண் : அட வயசுக்கு ஏன் வந்தேனோ…
படு தொல்லை அம்மம்மா…
அட வயசுக்கு ஏன் வந்தேனோ…
படு தொல்லை அம்மம்மா…

BGM

பெண் : மே மாசம் 98இல் மேஜர் ஆனேனே…

BGM

பெண் : மே மே மே மே மாசம்…

—BGM—

பெண் : ஃபிப்டீன் வந்தது மலர்கள் பூத்தன…
எந்தன் தேகத்தில்…
மலர்கள் எல்லாம் கனியாய் மாறும்…
மாலை நேரத்தில்…

BGM

பெண் : சிக்ஸ்டீன் வந்ததும்…
கள்ள பார்வைகள் எந்தன் பாகத்தில்…
பெண்கள் கூட ஆசை கொண்டனர்…
பள்ளி கூடத்தில்…

பெண் : எத்தனை உள்ளது பெண்ணில்…
ஏன் எதையோ தேடுறீங்க…
எங்கோ போகுது பார்வை…
என்னை வெட்கம் பின்னுது போங்க…

பெண் மார்புக்குள் ஒரு மனசுண்டு…
மரியாதை பண்ணுங்க…
பெண் மார்புக்குள் ஒரு மனசுண்டு…
அட அதையும் பாருங்க…

BGM

பெண் : மே மாசம் 98இல் மேஜர் ஆனேனே…

BGM

பெண் : மேஜர் ஆன நாளாய் நானும் பேஜார் ஆனேனே…

BGM

பெண் : காயா பழமா என்று…
என் கன்னம் தடவும் சில பேர்…
எறும்பு ஊறுது என்று…
என் இடையை கிள்ளும் சில பேர்…

பெண் : என் ஆடைகளை தொட்டு பார்ப்பது போல்…
சிலர் அங்கம் தொடுகின்றார்…
அட சாலைகளில் உள்ள ரசிகர் எல்லாம்…
ஒரு சங்கம் வைக்கின்றார்…

BGM


Notes : May Maasam Song Lyrics in Tamil. This Song from Jay Jay (2003). Song Lyrics penned by Vairamuthu. மே மாசம் பாடல் வரிகள்.


உன்னை நினைக்கவே 

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துரேஷ்மிபரத்வாஜ்ஜே ஜே

Unnai Ninaikave Song Lyrics in Tamil


BGM

பெண் : உன்னை நினைக்கவே…
நொடிகள் போதுமே…
உன்னை மறக்கவே…
யுகங்கள் ஆகுமே…

பெண் : உன்னை நினைக்கவே…
நொடிகள் போதுமே…
உன்னை மறக்கவே…
யுகங்கள் ஆகுமே…

பெண் : நீ கேட்கையில் சலனமே இல்லையே…
நான் நினைக்கையில் ஓரமாய் வலிக்குதே…
என் மார்பில் காதல் வந்து மையமிட்டதே…

பெண் : உன்னை நினைக்கவே…
நொடிகள் போதுமே…
உன்னை மறக்கவே…
யுகங்கள் ஆகுமே…

BGM

பெண் : ஜே ஜே ஜே ஜே…
ஜே ஜே ஜே ஜே…
ஜே ஜே ஜே ஜே…

BGM

பெண் : நான் உன்னை மறந்த செய்தி மறந்துவிட்டேன்…
ஏன் இன்று குளிக்கும் போது நினைத்து கொண்டேன்…

பெண் : கண் மூடி சாயும் பொழுதிலும்…
உன் கண்கள் கண் முன்பு தோன்றி மறைவதேன்…
ஏன் ஏன் ஏன்…

பெண் : நீ என்னை கேட்ட போது காதல் இல்லை…
நான் காதலுற்ற போது நீயும் இல்லை…

பெண் : ஒற்றை கேள்வி உன்னை கேட்கிறேன்…
இப்போதும் எந்தன் மீது காதல் உள்ளதா…

பெண் : ஹார்மோன்களின் சத்தம் கேட்குதே…
உன் காதிலே என்று கேட்கும் இந்த சத்தம்…

பெண் : உன்னை நினைக்கவே…
நொடிகள் போதுமே…
உன்னை மறக்கவே…
யுகங்கள் ஆகுமே…

BGM

பெண் : என் சாலை இங்கும் எங்கும் ஆண்கள் கூட்டம்…
என் கண்கள் சாய்ந்ததுண்டு மேய்ந்ததில்லை…

பெண் : காட்சி யாவும் புதைந்து போனது…
என் நெஞ்சம் உன்னை மட்டும் தோண்டி பார்ப்பதேன்…

பெண் : ஓஹோ… உன்னோடு அன்று கண்ட காதல் வேகம்…
என்னோடு எட்டி நின்ற நாகரீகம்…
கண்ணில் கண்ணில் வந்து போகுதே…

பெண் : என் நெஞ்சு கட்டில் மீது திட்டுகின்றதே…
உன் தேடலோ காதல் தேடல்தான்…
என் தேடலோ கடவுள் தேடும் பக்தன் போலே…

பெண் : உன்னை நினைக்கவே…
நொடிகள் போதுமே…
உன்னை மறக்கவே…
யுகங்கள் ஆகுமே…

பெண் : உன்னை நினைக்கவே…
நொடிகள் போதுமே…
உன்னை மறக்கவே…
யுகங்கள் ஆகுமே…

பெண் : நீ கேட்கையில் சலனமே இல்லையே…
நான் நினைக்கையில் ஓரமாய் வலிக்குதே
என் மார்பில் காதல் வந்து மையமிட்டதே…

பெண் : உன்னை நினைக்கவே…
நொடிகள் போதுமே…
உன்னை மறக்கவே…
யுகங்கள் ஆகுமே…

BGM


Notes : Unnai Ninaikave Song Lyrics in Tamil. This Song from Jay Jay (2003). Song Lyrics penned by Vairamuthu. உன்னை நினைக்கவே  பாடல் வரிகள்.


உன்னை நான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன்பரத்வாஜ்ஜே ஜே

Unnai Naan Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன்னை நான் உன்னை நான் உன்னை நான்…
கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்…
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே…
லட்சம் சிறகுகள் முளைக்குதே…

ஆண் : நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா…
என்னை மெல்ல மெல்ல…
கொல்ல வரும் மோகினியா…

ஆண் : ஜே ஜே… உனக்கு ஜே ஜே…
ஜே ஜே… உனக்கு ஜே ஜே…

ஆண் : உன்னை நான் உன்னை நான் உன்னை நான்…
கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்…

BGM

ஆண் : சொக்குபொடி கொண்ட சுடர் விழியா…
திக்கி திக்கி வந்த சிறு மொழியா…
எது எது என்னை இழுத்தது நீ சொல்லடி…

ஆண் : 8 மில்லிமீட்டர் புன்னகையா…
முத்து பற்கள் சிந்தும் முதல் ஒளியா…
எது எது என்னை இழுத்தது நீ சொல்லடி…

ஆண் : முகத்தில் இருந்த பிள்ளை குறும்பா…
மூடி கிடந்த ஜோடி திமிரா…

ஆண் : என்ன சொல்ல எப்படி சொல்ல…
எதுகை மோனை கை வசம் இல்ல…

ஆண் : உன்னை எண்ணி கொண்டு…
உள்ளே பற்றி கொண்டு…
உள்ளம் நோகுதடி…
என் உச்சி வேகுதடி…

ஆண் : நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா…
என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா…

ஆண் : ஜே ஜே… உனக்கு ஜே ஜே…
ஜே ஜே… உனக்கு ஜே ஜே…

BGM

ஆண் : கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்…

BGM

ஆண் : மறுமுறை உன்னை சந்திப்பேனா…
மலர் கண்ணுக்குள்ளே வசிப்பேனா…
மழை துளி எங்கே என்று கடல் காட்டுமா…

ஆண் : வெட்கம் இன்றி மண்ணில் அலைவேனே…
ரெக்கை இன்றி விண்ணில் திரிவேனே…
உயிர் எங்கே எங்கே என்று உடல் தேடுமே…

ஆண் : பதறும் இதயம் தோண்டி எடுத்து…
சிதறு தேங்காய் போட்டு முடித்து…
உடைந்த சத்தம் உந்திடும் முன்னே…
எங்கே சென்றாய் எவ்விடம் சென்றாய்…

ஆண் : என்னை காணும் போது…
கண்ணை பார்த்து சொல்லு…
கண்ணே என் போல…
நீயும் காதல் கொண்டாயா…

ஆண் : நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா…
என்னை மெல்ல மெல்ல…
கொல்ல வரும் மோகினியா…

ஆண் : ஜே ஜே… உனக்கு ஜே ஜே…
ஜே ஜே உனக்கு ஜே ஜே…

ஆண் : உன்னை நான் உன்னை நான் உன்னை நான்…
கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்…
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே…
லட்சம் சிறகுகள் முளைக்குதே…

ஆண் : நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா…
என்னை மெல்ல மெல்ல…
கொல்ல வரும் மோகினியா…

ஆண் : ஜே ஜே… உனக்கு ஜே ஜே…
ஜே ஜே… உனக்கு ஜே ஜே…


Notes : Unnai Naan Song Lyrics in Tamil. This Song from Jay Jay (2003). Song Lyrics penned by Vairamuthu. உன்னை நான் பாடல் வரிகள்.


காதல் மழையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ்பரத்வாஜ்ஜே ஜே

Kadhal Mazhaiye Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் மழையே காதல் மழையே…
எங்கே விழுந்தாயோ…

BGM

ஆண் : கண்ணில் உன்னைக் காணும் முன்னே…
மண்ணில் ஒளிந்தாயோ…

BGM

ஆண் : அலைந்து உன்னை அடைவது…
வாழ்வில் சாத்தியமா…
நான் நடந்துகொண்டே எரிவது…
உனக்கு சம்மதமா…

ஆண் : அடி உனக்கு மனதிலே…
என் நினைப்பு இருக்குமா…

ஆண் : வாழ்ந்த வாழ்வெனக்கும்…
வாழும் நாட்களுக்கும்…
பொருளே நீதான் உயிரே வாராய்…

ஆண் : காதல் மழையே காதல் மழையே…
எங்கே விழுந்தாயோ…
விழுந்தாயோ… ஓ ஹோ…

BGM

ஆண் : கண்ணில் ஒரு துளிநீர்…
மெல்லக் கழன்று விழுந்தது ஏன்…
விண்ணில் ஒரு விண்மீன்…
சற்று விசும்பி அழுததுதான்…

ஆண் : உள்ளங்கை கடந்து…
எங்கோ ஒழுகிய நிமிடங்களை…
மெல்லச் சிறைசெய்யவே…
காதல் மீண்டும் பதிவு செய்தேன்…

ஆண் : வாழ்ந்த வாழ்வெனக்கும்…
வாழும் நாட்களுக்கும்…
பொருளே நீதான் உயிரே வாராய்…

ஆண் : காதல் மழையே…

BGM

ஆண் : சங்கில் குதித்து விட…
ஒரு சமுத்திரம் நினைப்பதுபோல்…
அங்கம் நிறைந்துவிட…
என் ஆவி துடித்ததுதான்…

ஆண் : தேடிக் கிடைப்பதில்லை…
என்று தெரிந்த ஒரு பொருளை…
தேடிப் பார்ப்பதென்று…
மெய்த்தேடல் தொடங்கியதே…

ஆண் : வாழ்ந்த வாழ்வெனக்கும்…
வாழும் நாட்களுக்கும்…
பொருளே நீதான்…
உயிரே வாராய்…
உயிரே வாராய்…
என் உயிரே வாராய்…

ஆண் : காதல் காதல் காதல்…
காதல் காதல் காதல் காதல்…
காதல் மழையே காதல் மழையே…
எங்கே விழுந்தாயோ…
கண்ணில் உன்னைக் காணும் முன்னே…
மண்ணில் ஒளிந்தாயோ…

ஆண் : அலைந்து உன்னை அடைவது…
வாழ்வில் சாத்தியமா…
நான் நடந்துகொண்டே எரிவது…
உனக்கு சம்மதமா…

ஆண் : அடி உனக்கு மனதிலே…
என் நினைப்பு இருக்குமா…

ஆண் : வாழ்ந்த வாழ்வெனக்கும்…
வாழும் நாட்களுக்கும்…
பொருளே நீதான்…
உயிரே வாராய் வாராய் வாராய்…

BGM


Notes : Kadhal Mazhaiye Song Lyrics in Tamil. This Song from Jay Jay (2003). Song Lyrics penned by Vairamuthu. காதல் மழையே பாடல் வரிகள்.