காதல் மழையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ்பரத்வாஜ்ஜே ஜே

Kadhal Mazhaiye Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் மழையே காதல் மழையே…
எங்கே விழுந்தாயோ…

BGM

ஆண் : கண்ணில் உன்னைக் காணும் முன்னே…
மண்ணில் ஒளிந்தாயோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : அலைந்து உன்னை அடைவது…
வாழ்வில் சாத்தியமா…
நான் நடந்துகொண்டே எரிவது…
உனக்கு சம்மதமா…

ஆண் : அடி உனக்கு மனதிலே…
என் நினைப்பு இருக்குமா…

ஆண் : வாழ்ந்த வாழ்வெனக்கும்…
வாழும் நாட்களுக்கும்…
பொருளே நீதான் உயிரே வாராய்…

ஆண் : காதல் மழையே காதல் மழையே…
எங்கே விழுந்தாயோ…
விழுந்தாயோ… ஓ ஹோ…

BGM

ஆண் : கண்ணில் ஒரு துளிநீர்…
மெல்லக் கழன்று விழுந்தது ஏன்…
விண்ணில் ஒரு விண்மீன்…
சற்று விசும்பி அழுததுதான்…

ஆண் : உள்ளங்கை கடந்து…
எங்கோ ஒழுகிய நிமிடங்களை…
மெல்லச் சிறைசெய்யவே…
காதல் மீண்டும் பதிவு செய்தேன்…

ஆண் : வாழ்ந்த வாழ்வெனக்கும்…
வாழும் நாட்களுக்கும்…
பொருளே நீதான் உயிரே வாராய்…

ஆண் : காதல் மழையே…

BGM

ஆண் : சங்கில் குதித்து விட…
ஒரு சமுத்திரம் நினைப்பதுபோல்…
அங்கம் நிறைந்துவிட…
என் ஆவி துடித்ததுதான்…

ஆண் : தேடிக் கிடைப்பதில்லை…
என்று தெரிந்த ஒரு பொருளை…
தேடிப் பார்ப்பதென்று…
மெய்த்தேடல் தொடங்கியதே…

ஆண் : வாழ்ந்த வாழ்வெனக்கும்…
வாழும் நாட்களுக்கும்…
பொருளே நீதான்…
உயிரே வாராய்…
உயிரே வாராய்…
என் உயிரே வாராய்…

ஆண் : காதல் காதல் காதல்…
காதல் காதல் காதல் காதல்…
காதல் மழையே காதல் மழையே…
எங்கே விழுந்தாயோ…
கண்ணில் உன்னைக் காணும் முன்னே…
மண்ணில் ஒளிந்தாயோ…

ஆண் : அலைந்து உன்னை அடைவது…
வாழ்வில் சாத்தியமா…
நான் நடந்துகொண்டே எரிவது…
உனக்கு சம்மதமா…

ஆண் : அடி உனக்கு மனதிலே…
என் நினைப்பு இருக்குமா…

ஆண் : வாழ்ந்த வாழ்வெனக்கும்…
வாழும் நாட்களுக்கும்…
பொருளே நீதான்…
உயிரே வாராய் வாராய் வாராய்…

BGM


Notes : Kadhal Mazhaiye Song Lyrics in Tamil. This Song from Jay Jay (2003). Song Lyrics penned by Vairamuthu. காதல் மழையே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading