என்ன தந்திடுவேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கார்த்திக் & ஸ்ரீலேகா பார்த்தசாரதிவித்யாசாகர்சதுரங்கம்

Enna Thandhiduvean Song Lyrics in Tamil


ஆண் : சொல்ல வந்ததை சொல்ல வந்ததை சொல்லவில்லை…
சொல்லும் வரை சொல்லும் வரை காதல் தொல்லை…

BGM

பெண் : என்ன தந்திடுவேன்…
நான் என்னை தந்திடுவேன்…

ஆண் : உள்ளம் தந்திடுவேன்…
நான் உயிரை தந்திடுவேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நீ வானவில் தந்தால்…
நான் வானம் தந்திடுவேன்…

ஆண் : நீ ஓரிடம் தந்தால்…
நான் உலகை தந்திடுவேன்…

பெண் : உன் ஆயுள் காலம் தீரும் போது…
என் ஆயுள் தந்திடுவேன்…

பெண் : என்ன தந்திடுவேன்…
நான் என்னை தந்திடுவேன்…

ஆண் : உள்ளம் தந்திடுவேன்…
நான் உயிரை தந்திடுவேன்…

BGM

பெண் : விரல்கள் நீ தந்தால்…
நான் ஸ்பரிசம் தந்திடுவேன்…
விழிகள் நீ தந்தால்…
நான் கனவு தந்திடுவேன்…

BGM

ஆண் : நொடிகள் நீ தந்தால்…
நான் யுகங்கள் தந்திடுவேன்…
விதைகள் நீ தந்தால்…
நான் விருட்சம் தந்திடுவேன்…

பெண் : நீ கோப பார்வை பார்க்கும் போது…
கொஞ்சல் தந்திடுவேன்…

ஆண் : என் தோளில் வந்து நீயும் சாய…
தொட்டில் தந்திடுவேன்…

பெண் : நீ பார்த்திடும் போது பாராமல் நான்…
பார்வை தந்திடுவேன்…

ஆண் : நீ பேசிடும் போது பேசாமல் நான்…
மௌனம் தந்திடுவேன்…

பெண் : என்ன தந்திடுவேன்…
நான் என்னை தந்திடுவேன்…

ஆண் : உள்ளம் தந்திடுவேன்…
நான் உயிரை தந்திடுவேன்…

BGM

பெண் : தன தோம் தன தன தோம்…
தன தன தோம் தன தன தோம்…
தன தோம் தன தன தோம்…
தன தன… ஆ ஆ ஆ…

BGM

ஆண் : இறகு நீ தந்தால்…
நான் தோகை தந்திடுவேன்…
கைகள் நீ தந்தால்…
உயிர் ரேகை தந்திடுவேன்…

பெண் : பூமி நீ தந்தால்…
நான் பூக்கள் தந்திடுவேன்…
கிளைகள் நீ தந்தால்…
நான் கிளிகள் தந்திடுவேன்…

ஆண் : உன் நெற்றி வருடி கேசம் ஒதுக்க…
காற்று தந்திடுவேன்…

பெண் : நீ இருட்டில் நடக்க எந்தன் விழியில்…
வெளிச்சம் தந்திடுவேன்…

ஆண் : நீ ஜன்னலின் ஓரம் நின்றிடும் போது…
சாரல் தந்திடுவேன்…

பெண் : நீ தூங்கிடும் நேரம் லேசாய் கேட்கும்…
பாடல் தந்திடுவேன்…


Notes : Enna Thandhiduvean Song Lyrics in Tamil. This Song from Sadhurangam (2011). Song Lyrics penned by Pa Vijay. என்ன தந்திடுவேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading