விழியும் விழியும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிஹரிணி & மது பாலகிருஷ்ணன்வித்யாசாகர்சதுரங்கம்

Vizhiyum Vizhiyum Song Lyrics in Tamil


—BGM—

பெண் : விழியும் விழியும் நெருங்கும் பொழுது…
வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது…
வசதியாக வசதியாக வளைந்து கொடு…

ஆண் : இதழும் இதழும் இழையும் பொழுது…
இமையில் நிலவு நுழையும் பொழுது…
வசதியாக வசதியாக வளைந்து கொடு…

பெண் : காதலினால் காதல் தொட்டு விடு…

ஆண் : ஆதலினால் நாணம் விட்டு விடு…

பெண் : விழியும் விழியும் நெருங்கும் பொழுது…
வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது…

ஆண் : வசதியாக வசதியாக வளைந்து கொடு…

—BGM—

பெண் : முத்தம் ஒன்று தந்தவுடன்…
மூடி கொள்ளும் கண்கள்…
மொத்தமாக கூந்தல் அள்ளி…
மூடி கொள்ளும் கைகள்…

ஆண் : உடல் இறங்கி நீந்தும் என்னை…
உயிர் இழுத்து செல்லும்…
ஒய்வு தந்த காரணத்தால்…
உடைகள் நன்றி சொல்லும்…

பெண் : விரலும்…
ஆண் : விரலும்…
பெண் : இறுகும்…
ஆண் : பொழுது…
பெண் : முதுகின்…
ஆண் : சுவரில்…
பெண் : வழியும்…
ஆண் : விழுது…

ஆண் : விரலும்…
பெண் : விரலும்…
ஆண் : இறுகும்…
பெண் : பொழுது…
ஆண் : முதுகின்…
பெண் : சுவரில்…
ஆண் : வழியும்…
பெண் : விழுது…

பெண் : உறங்கிடாமல் உறங்கிடாமல் கிறங்கி விடு…

ஆண் : இதழும் இதழும் இழையும் பொழுது…
இமையில் நிலவு நுழையும் பொழுது…

பெண் : வசதியாக வசதியாக வளைந்து கொடு…

—BGM—

ஆண் : புயல் முடிந்து போன பின்னே…
கடல் உறங்க செல்லும்…
கண் விழித்த அலை திரும்ப…
களம் இறங்க சொல்லும்…

பெண் : உயிர் அணுக்கள் கோடி நின்று ஓசை…
இன்றி கிள்ளும்…
ஒரு நொடிக்குள் நூறு முறை மெத்தை…
இங்கு துள்ளும்…

ஆண் : இமையின்…
பெண் : முடியால்…
ஆண் : உடலை…
பெண் : உழவா…
ஆண் : இளமை…
பெண் : வயலில்…
ஆண் : புயலை…
பெண் : நடவா…

பெண் : இமையின்…
ஆண் : முடியால்…
பெண் : உடலை…
ஆண் : உழவா…
பெண் : இளமை…
ஆண் : வயலில்…
பெண் : புயலை…
ஆண் : நடவா…

ஆண் : இசைத்திடாமல் இசைத்திடாமல் மூச்சு விடு…

பெண் : விழியும் விழியும் நெருங்கும் பொழுது…
வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது…
வசதியாக வசதியாக வளைந்து கொடு…

ஆண் : இதழும் இதழும் இழையும் பொழுது…
இமையில் நிலவு நுழையும் பொழுது…
வசதியாக வசதியாக வளைந்து கொடு…

பெண் : காதலினால் காதல் தொட்டு விடு…

ஆண் : ஆதலினால் நாணம் விட்டு விடு…


Notes : Vizhiyum Vizhiyum Song Lyrics in Tamil. This Song from Sadhurangam (2011). Song Lyrics penned by Arivumathi. விழியும் விழியும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading