Category Archives: பாரதி

பாரதி – Bharathi (2000)

மயில் போல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மகாகவி சுப்பிரமணிய பாரதிபவதாரணிஇளையராஜாபாரதி

Mayil Pola Song Lyrics in Tamil


பெண் : மயில் போல பொண்ணு ஒன்னு…
கிளி போல பேச்சு ஒன்னு…

BGM

பெண் : மயில் போல பொண்ணு ஒன்னு…
கிளி போல பேச்சு ஒன்னு…
மயில் போல பொண்ணு ஒன்னு…
கிளி போல பேச்சு ஒன்னு…

பெண் : குயில் போல பாட்டு ஒன்னு கேட்டு நின்னு…
மனசு போன இடம் தெரியல…
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல…

பெண் : மயில் போல பொண்ணு ஒன்னு…
பொண்ணு ஒன்னு…

BGM

பெண் : வண்டியில வண்ண மயில் நீயும் போனா…
சக்கரமா என் மனசு சுத்துதடி…
மந்தார மல்லி மரிகொழுந்து செம்பகமே…
முன முறியாப் பூவே என முறிச்சதேனடியோ…

பெண் : தங்க முகம் பார்க்க தெனம் சூரியனும் வரலாம்…
சங்கு கழுத்துக்கே பிறை சந்திரனைத் தரலாம்…

பெண் : குயில் போல பாட்டு ஒன்னு கேட்டு நின்னு…
மனசு போன இடம் தெரியல…
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல…

பெண் : மயில் போல பொண்ணு ஒன்னு…
கிளி போல பேச்சு ஒன்னு…

BGM

பெண் : வெள்ளி நிலா மேகத்துல வாரதுபோல்…
மல்லிகப் பூ பந்தலோட வந்தது யாரு…
சிறு ஓலையில உன் நெனப்ப எழுதி வச்சேன்…
ஒரு எழுத்தறியாத காத்தும் வந்து இழுப்பதும் என்ன…

பெண் : குத்து விளக்கொளியே சிறு குட்டி நிலா ஒளியே…
முத்துச் சுடர் ஒளியே ஒரு முத்தம் நீ தருவாயா…

பெண் : குயில் போல பாட்டு ஒன்னு கேட்டு நின்னு…
மனசு போன இடம் தெரியல…
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல…

பெண் : மயில் போல பொண்ணு ஒன்னு…
கிளி போல பேச்சு ஒன்னு…
மயில் போல பொண்ணு ஒன்னு…
கிளி போல பேச்சு ஒன்னு…

பெண் : குயில் போல பாட்டு ஒன்னு கேட்டு நின்னு…
மனசு போன இடம் தெரியல…
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல…

BGM

பெண் : மயில் போல பொண்ணு ஒன்னு…
பொண்ணு ஒன்னு…


Notes : Mayil Pola Song Lyrics in Tamil. This Song from Bharathi (2000). Song Lyrics penned by Mahakavi Subramania Bharathi. மயில் போல பாடல் வரிகள்.


நிற்பதுவே நடப்பதுவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மகாகவி சுப்பிரமணிய பாரதிஹரிஷ் ராகவேந்திராஇளையராஜாபாரதி

Nirpathuve Nadapadhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே…

BGM

ஆண் : நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே…
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே…
நீங்களெல்லாம் சொப்பனம்தானோ…
பல தோற்ற மயக்கங்களோ…
சொப்பனம்தானோ பல தோற்ற மயக்கங்களோ…

ஆண் : கற்பதுவே கேட்பதுவே கருதுவதே…
நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ…
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ…
அற்ப மாயைகளோ…
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ…

BGM

ஆண் : வானகமே இளவெயிலே மரச்சாிவே…
வானகமே இளவெயிலே மரச்சாிவே…
நீங்களெல்லாம் கானலின் நீரோ…
வெறும் காட்சிப் பிழைதானோ…

ஆண் : வானகமே இளவெயிலே மரச்சாிவே…
நீங்களெல்லாம் கானலின் நீரோ…
வெறும் காட்சிப் பிழைதானோ…

ஆண் : போனதெல்லாம் கனவினைப்போல்…
புதைந்தழிந்தே போனதனால்…
நானும் ஓர் கனவோ…
இந்த ஞாலமும் பொய்தானோ…

ஆண் : நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே…
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே…
நீங்களெல்லாம் சொப்பனம் தானோ…
பல தோற்ற மயக்கங்களோ…
சொப்பனம்தானோ பல தோற்ற மயக்கங்களோ…

BGM

ஆண் : காலமென்றே ஒரு நினைவும்…
காட்சியென்றே பல நினைவும்…
கோலமும் பொய்களோ…
அங்குக் குணங்களும் பொய்களோ…

ஆண் : காலமென்றே ஒரு நினைவும்…
காட்சியென்றே பல நினைவும்…
கோலமும் பொய்களோ…
அங்குக் குணங்களும் பொய்களோ…

ஆண் : காண்பதெல்லாம் மறையுமென்றால்…
மறைந்ததெல்லாம் காண்போமன்றோ…
நானும் ஓர் கனவோ…
இந்த ஞாலமும் பொய்தானோ…

ஆண் : நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே…
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே…
நீங்களெல்லாம் சொப்பனம்தானோ…
பல தோற்ற மயக்கங்களோ…
சொப்பனம்தானோ பல தோற்ற மயக்கங்களோ…

ஆண் : கற்பதுவே கேட்பதுவே கருதுவதே…
நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ…
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ…
அற்ப மாயைகளோ…
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ…


Notes : Nirpathuve Nadapadhu Song Lyrics in Tamil. This Song from Bharathi (2000). Song Lyrics penned by Mahakavi Subramania Bharati. நிற்பதுவே நடப்பதுவே பாடல் வரிகள்.


நின்னைச் சரணடைந்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மகாகவி சுப்பிரமணிய பாரதிபாம்பே ஜெயஸ்ரீஇளையராஜாபாரதி

Ninnaiye Song Lyrics in Tamil


BGM

பெண் : நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா…
நின்னைச் சரணடைந்தேன்…
நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா…
நின்னைச் சரணடைந்தேன்…

பெண் : பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்…
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்…
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று…

பெண் : நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா…
நின்னைச் சரணடைந்தேன்…
நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா…
நின்னைச் சரணடைந்தேன்…

BGM

பெண் : மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்…
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்…
குடிமை புகுந்தன கொன்றவை போக்கென்று…

பெண் : நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா…
நின்னைச் சரணடைந்தேன்…

BGM

பெண் : தன் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு…
நின் செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம்…

பெண் : நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா…
நின்னைச் சரணடைந்தேன்…

BGM

பெண் : துன்பம் இனியில்லை சோர்வில்லை…
சோர்வில்லை தோற்பில்லை…
நல்லது தீயது நாமறியோம்…
நாமறியோம் நாமறியோம்…

பெண் : அன்பு நெறிகள் அறங்கள் வளர்ந்திட…
நல்லது நாட்டுக தீமையை ஓட்டுக…

பெண் : நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா…
நின்னைச் சரணடைந்தேன்…
நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா…
நின்னைச் சரணடைந்தேன்…

பெண் : பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்…
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்…
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று…

பெண் : நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா…
நின்னைச் சரணடைந்தேன்…
நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா…
நின்னைச் சரணடைந்தேன்…


Notes : Ninnaiye Song Lyrics in Tamil. This Song from Bharathi (2000). Song Lyrics penned by Mahakavi Subramania Bharati. நின்னைச் சரணடைந்தேன் பாடல் வரிகள்.