நிற்பதுவே நடப்பதுவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மகாகவி சுப்பிரமணிய பாரதிஹரிஷ் ராகவேந்திராஇளையராஜாபாரதி

Nirpathuve Nadapadhu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே…

—BGM—

ஆண் : நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே…
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே…
நீங்களெல்லாம் சொப்பனம்தானோ…
பல தோற்ற மயக்கங்களோ…
சொப்பனம்தானோ பல தோற்ற மயக்கங்களோ…

ஆண் : கற்பதுவே கேட்பதுவே கருதுவதே…
நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ…
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ…
அற்ப மாயைகளோ…
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ…

—BGM—

ஆண் : வானகமே இளவெயிலே மரச்சாிவே…
வானகமே இளவெயிலே மரச்சாிவே…
நீங்களெல்லாம் கானலின் நீரோ…
வெறும் காட்சிப் பிழைதானோ…

ஆண் : வானகமே இளவெயிலே மரச்சாிவே…
நீங்களெல்லாம் கானலின் நீரோ…
வெறும் காட்சிப் பிழைதானோ…

ஆண் : போனதெல்லாம் கனவினைப்போல்…
புதைந்தழிந்தே போனதனால்…
நானும் ஓர் கனவோ…
இந்த ஞாலமும் பொய்தானோ…

ஆண் : நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே…
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே…
நீங்களெல்லாம் சொப்பனம் தானோ…
பல தோற்ற மயக்கங்களோ…
சொப்பனம்தானோ பல தோற்ற மயக்கங்களோ…

—BGM—

ஆண் : காலமென்றே ஒரு நினைவும்…
காட்சியென்றே பல நினைவும்…
கோலமும் பொய்களோ…
அங்குக் குணங்களும் பொய்களோ…

ஆண் : காலமென்றே ஒரு நினைவும்…
காட்சியென்றே பல நினைவும்…
கோலமும் பொய்களோ…
அங்குக் குணங்களும் பொய்களோ…

ஆண் : காண்பதெல்லாம் மறையுமென்றால்…
மறைந்ததெல்லாம் காண்போமன்றோ…
நானும் ஓர் கனவோ…
இந்த ஞாலமும் பொய்தானோ…

ஆண் : நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே…
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே…
நீங்களெல்லாம் சொப்பனம்தானோ…
பல தோற்ற மயக்கங்களோ…
சொப்பனம்தானோ பல தோற்ற மயக்கங்களோ…

ஆண் : கற்பதுவே கேட்பதுவே கருதுவதே…
நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ…
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ…
அற்ப மாயைகளோ…
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ…


Notes : Nirpathuve Nadapadhu Song Lyrics in Tamil. This Song from Bharathi (2000). Song Lyrics penned by Mahakavi Subramania Bharati. நிற்பதுவே நடப்பதுவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading