Category Archives: வால்டர் வெற்றிவேல்

Mannava Mannava Song Lyrics in Tamil

மன்னவா மன்னவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசுனந்தாஇளையராஜாவால்டர் வெற்றிவேல்

Mannava Mannava Song Lyrics in Tamil


பெண் : மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா…
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா…

பெண் : மழலைகள் யாவும் தேனோ…
மரகத வீணை தானோ…
மடிமேலே ஆடும் பூந்தேரோ…
அன்னை மனம்தான் பாடும் ஆராரோ…

பெண் : ஒ… மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா…

BGM

பெண் : நாள்தோறும் காவல் நின்று…
நம்மை காக்கும் தந்தை உண்டு…
இந்த வாழ்வு என்பது…
அந்த தெய்வம் தந்தது…

பெண் : ராஜாதிராஜன் என்று…
பல தேசம் நீயும் வென்று…
வர வேண்டும் கண்மணி…
வெற்றிவேலின் பிள்ளை நீ…

பெண் : தென் மதுரை சீமை எல்லாம்…
அரசு ஆளும் உன்னை கண்டு…
திரு தோளில் மாலை சூடும்…
மகாராணி யாரோ இங்கு…

பெண் : ஒளி விடும் எதிர்காலம் ஒன்று…
உருவாகும் நாளை இங்கு…
பணிவாய் மலரே மடிமேல் உறங்கு…

பெண் : மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா…
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா…

BGM

பெண் : மீனாட்சி கையில் கொண்டு…
அருள் கூறும் பிள்ளை ஒன்று…
உருமாறி நின்றதோ…
எந்தன் மகனாய் வந்ததோ…

பெண் : காமாட்சி கோயில் கொண்டு…
சுடர் வீசும் தீபம் ஒன்று…
எந்தன் வீடு வந்ததோ…
பிள்ளை வடிவாய் நின்றதோ…

பெண் : உன்னை ஒரு ஈயும் மொய்த்தால்…
உருகாதா தாயின் சித்தம்…
விழியோரம் நீரை கண்டால்…
கொதிக்காதா அன்னை ரத்தம்…

பெண் : உனக்கு ஒரு குறை நேர்ந்திடாது…
வளர்ப்பேனே தோளின் மீது…
பணிவாய் மலரே மடிமேல் உறங்கு…

பெண் : மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா…
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா…

பெண் : மழலைகள் யாவும் தேனோ…
மரகத வீணை தானோ…
மடிமேலே ஆடும் பூந்தேரோ…
அன்னை மனம்தான் பாடும் ஆராரோ…

பெண் : ஓ… மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா…
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா…


Notes : Mannava Mannava Song Lyrics in Tamil. This Song from Walter Vetrivel (1993). Song Lyrics penned by Vaali. மன்னவா மன்னவா பாடல் வரிகள்.


பூங்காற்றே இங்கே வந்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & உமா ரமணன்இளையராஜாவால்டர் வெற்றிவேல்

Poongatre Inge Vanthu Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து…
பூ போன்ற பிள்ளை முகம் பார்த்து…
பாராட்டி சொல்லு ஒரு பாட்டு…
பால் போன்ற வெள்ளை மனம் பார்த்து…

ஆண் : யார் சொல்லுவது இங்கு தாய் இல்லையென…
நான் கொஞ்சிடுவேன் உன்னை என் பிள்ளையென…
என்றும் வாடாமல் ராஜா நீ வாழ்க…

ஆண் : பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து…
பூ போன்ற பிள்ளை முகம் பார்த்து…

BGM

பெண் : காவிரி போலே கங்கை போலே…
உன் பேரும் உன் சீரும் பொங்கிட வேண்டும்…
தேசம் உன்னை பேசிட வேண்டும்…

பெண் : உந்தன் அண்ணனை போலே மண்ணின் மேலே…
ஊரார்கள் பாராட்ட வாழ்ந்திட வேண்டும்…
அன்னை மனம் வாழ்த்திட வேண்டும்…

பெண் : சின்ன சின்ன வார்த்தை ஒன்று ரெண்டு பேசும்…
தம்பி உந்தன் வாழ்வில் தென்றல் வந்து வீசும்…

பெண் : காலம் உன் வசமே…
என பாடும் என் மனமே…
நாளும் என் அருகில் மனம் வீசும் சந்தனமே…
என்றும் வாடாமல் ராஜா நீ வாழ்க…

குழு : பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து…
பூ போன்ற பிள்ளை முகம் பார்த்து…

BGM

ஆண் : என்னிடம் உன்னை தந்தாள் அன்னை…
கண்மூடி சென்றாளே சென்றவள் அன்று…
சொன்ன சொல்லும் நெஞ்சினில் உண்டு…

பெண் : எந்தன் கண்களில் பார்வை வந்தால் முதல் பார்வையிலே…
அய்யா உன் பொன் முகம் பார்ப்பேன்…
பின்பு எந்தன் மன்னனை பார்ப்பேன்…

பெண் : அண்ணன் அண்ணி போலே…
தெய்வம் உண்டோ கூறு…
உன்னை எண்ணி நாளும்…
வாழும் உள்ளம் பாரு…

ஆண் : பொன்னே பொன்மணியே…
எங்கள் கண்ணே கண்மணியே…
பேசும் சித்திரமே ஒளி வீசும் ரத்தினமே…
என்றும் வாடாமல் ராஜா நீ வாழ்க…

குழு : பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து…
பூ போன்ற பிள்ளை முகம் பார்த்து…
பாராட்டி சொல்லு ஒரு பாட்டு…
பால் போன்ற வெள்ளை மனம் பார்த்து…

பெண் : யார் சொல்லுவது இங்கு தாய் இல்லையென…
ஆண் : நான் கொஞ்சிடுவேன் உன்னை என் பிள்ளையென…
குழு : என்றும் வாடாமல் ராஜா நீ வாழ்க…

குழு : பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து…
பூ போன்ற பிள்ளை முகம் பார்த்து…
பாராட்டி சொல்லு ஒரு பாட்டு…
பால் போன்ற வெள்ளை மனம் பார்த்து…


Notes : Poongatre Inge Vanthu Song Lyrics in Tamil. This Song from Walter Vetrivel (1993). Song Lyrics penned by Vaali. பூங்காற்றே இங்கே வந்து பாடல் வரிகள்.


சின்ன ராசாவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & எஸ்.ஜானகிஇளையராஜாவால்டர் வெற்றிவேல்

Chinna Rasave Song Lyrics in Tamil


BGM

பெண் : சின்ன ராசாவே சிட்டெறும்பு என்ன கடிக்குது…
ஒன்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது…
சின்ன ராசாவே சிட்டெறும்பு என்ன கடிக்குது…
ஒன்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது…

பெண் : வாங்கின பூவும் பத்தாது…
வீசுற காத்தும் நிக்காது…
அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு…

பெண் : ராசாவே… ராசாவே…

பெண் : சின்ன ராசாவே சிட்டெறும்பு என்ன கடிக்குது…
ஒன்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது…

BGM

பெண் : அக்கா மக பாட்ட கேட்டு…
முக்கா முழம் பூவ நீட்டு…
அக்காலத்து கோட்ட போட்டு…
நிக்காதே நீ ரொம்ப லேட்டு…

ஆண் : கொஞ்சம் பொறு மானே…
கொல்லி மலைத் தேனே…
காத்திருக்கேன் மீனே…
தூண்டில் இட நானே…

பெண் : அட மாமாவே வாயா நான் கூட…
ஒரு மாமாங்கம் போச்சே நான் வாட…

ஆண் : அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு…
ரோசாவே சிட்டெறும்பு உன்னக் கடிக்குதா…
பெண் : ஹான்…
ஆண் : என்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்கிதா… ஆ ஹா…

BGM

குழு : ஜிம்க்கு சிக்கு சிக்கிச்சா
ஜிம்க்கு சிக்குச்சா…
ஜிம்க்கு சிக்கு சிக்கிச்சா…
ஜிம்க்கு சிக்கு…

குழு : ஜிம்க்கு சிக்கு சிக்கிச்சா…
ஜிம்க்கு சிக்குச்சா…
ஜிம்க்கு சிக்கு சிக்கிச்சா…
ஜிம்க்கு சிக்கு…

ஆண் : தெக்காலதான் மேயும் காத்து…
தென்ன மர கீத்த பாத்து…
ஒக்காந்துதான் தாளம் போடும்…
உன்னுடைய ராகம் பாடும்…

பெண் : உச்சிலை ஓரம்…
வெயில் தாழும் நேரம்…
ஊத்து தண்ணி போல உன் நெனப்பு ஊறும்…

ஆண் : சிறு பாவாட சூடும் பூந்தேரு…
இது பூ வாட வீசும் பாலாறு…

பெண் : அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு…
ராசாவே சிட்டெறும்பு என்ன கடிக்குது…
ஒன்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது…

ஆண் : வாங்கின பூவும் பத்தாது…
வீசுற காத்தும் நிக்காது…
அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு…
ரோசாவே… ரோசாவே…

ஆண் : ரோசாவே…
பெண் : சிட்டெறும்பு என்ன கடிக்குது…
ஒன்னச் சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது…

ஆண் : ஹ்ம்ம்… அட ரோசாவே சிட்டெறும்பு உன்னக் கடிக்குதா…
என்ன சேராமா அடிகடி ராத்திரி துடிக்குதா…


Notes : Chinna Rasave Song Lyrics in Tamil. This Song from Walter Vetrivel (1993). Song Lyrics penned by Vaali. சின்ன ராசாவே பாடல் வரிகள்.