மன்னவா மன்னவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசுனந்தாஇளையராஜாவால்டர் வெற்றிவேல்

Mannava Mannava Song Lyrics in Tamil


பெண் : மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா…
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா…

பெண் : மழலைகள் யாவும் தேனோ…
மரகத வீணை தானோ…
மடிமேலே ஆடும் பூந்தேரோ…
அன்னை மனம்தான் பாடும் ஆராரோ…

பெண் : ஒ… மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நாள்தோறும் காவல் நின்று…
நம்மை காக்கும் தந்தை உண்டு…
இந்த வாழ்வு என்பது…
அந்த தெய்வம் தந்தது…

பெண் : ராஜாதிராஜன் என்று…
பல தேசம் நீயும் வென்று…
வர வேண்டும் கண்மணி…
வெற்றிவேலின் பிள்ளை நீ…

பெண் : தென் மதுரை சீமை எல்லாம்…
அரசு ஆளும் உன்னை கண்டு…
திரு தோளில் மாலை சூடும்…
மகாராணி யாரோ இங்கு…

பெண் : ஒளி விடும் எதிர்காலம் ஒன்று…
உருவாகும் நாளை இங்கு…
பணிவாய் மலரே மடிமேல் உறங்கு…

பெண் : மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா…
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா…

BGM

பெண் : மீனாட்சி கையில் கொண்டு…
அருள் கூறும் பிள்ளை ஒன்று…
உருமாறி நின்றதோ…
எந்தன் மகனாய் வந்ததோ…

பெண் : காமாட்சி கோயில் கொண்டு…
சுடர் வீசும் தீபம் ஒன்று…
எந்தன் வீடு வந்ததோ…
பிள்ளை வடிவாய் நின்றதோ…

பெண் : உன்னை ஒரு ஈயும் மொய்த்தால்…
உருகாதா தாயின் சித்தம்…
விழியோரம் நீரை கண்டால்…
கொதிக்காதா அன்னை ரத்தம்…

பெண் : உனக்கு ஒரு குறை நேர்ந்திடாது…
வளர்ப்பேனே தோளின் மீது…
பணிவாய் மலரே மடிமேல் உறங்கு…

பெண் : மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா…
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா…

பெண் : மழலைகள் யாவும் தேனோ…
மரகத வீணை தானோ…
மடிமேலே ஆடும் பூந்தேரோ…
அன்னை மனம்தான் பாடும் ஆராரோ…

பெண் : ஓ… மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா…
நீ புன்னகை சிந்திடும் சிங்கார கண்ணன் அல்லவா…


Notes : Mannava Mannava Song Lyrics in Tamil. This Song from Walter Vetrivel (1993). Song Lyrics penned by Vaali. மன்னவா மன்னவா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading