Category Archives: ஊர் மரியாதை

ஊர் மரியாதை – Oor Mariyadai (1992)

Kichchali Samba Song Lyrics in Tamil

கிச்சிலி சம்பா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராதேவாஊர் மரியாதை

Kichchali Samba Song Lyrics in Tamil


BGM

பெண் : கிச்சிலி சம்பா குத்தி எடுத்தேன்…
மொச்சக் கொழம்பும் வச்சி எடுத்தேன்…
மாமாவே உனக்காகத்தான்…

BGM

பெண் : கிச்சிலி சம்பா குத்தி எடுத்தேன்…
மொச்சக் கொழம்பும் வச்சி எடுத்தேன்…
மாமாவே உனக்காகத்தான்…

பெண் : உச்சி மலைக் காத்துல உச்சந்தலை வேர்க்குது…
மச்சமுள்ள மாமன மல்லுக்கட்ட பார்க்குது…
பச்சப்புள்ள மனசு தாங்கல… ஒஒஒ…
பந்தி வச்சி பசிய தீர்க்கல…

ஆண் : கிச்சிலி சம்பா குத்தி எடுத்தே…
மொச்சக் கொழம்பும் வச்சி எடுத்தே…
ஆமாடி அதுக்காகத்தான்… ம்ம்ம்… ஹாஹா…

ஆண் : உச்சி மலைக் காத்துல உச்சந்தலை வேர்க்குது…
மச்சமுள்ள பூவத்தான் மல்லுக்கட்ட பார்க்குது…
பக்கம் வந்து ஒரசி பார்க்கவா… ஒஒஒ…
பந்தி வச்சி பசிய தீர்க்கவா…

BGM

ஆண் : மாங்கொழுந்தே பூங்கரும்பே மரிக்கொழுந்து நாத்தே…
தாங்கிக்கடி தழுவிக்கடி தாழம்பூவு காத்தே…
மாங்கொழுந்தே பூங்கரும்பே மரிக்கொழுந்து நாத்தே…
தாங்கிக்கடி தழுவிக்கடி தாழம்பூவு காத்தே…

பெண் : ஆத்திரத்தில் தொட்டுப்புட்டேன்…
சாத்திரத்தில் விட்டுப்புட்டேன்…
ஆம்பளைய கிள்ளிப்புட்டேன்…
வீம்புபண்ண சொல்லிப்புட்டேன்…

பெண் : எறைக்காத நீரு…
இது எளம் பஞ்சு தேரு…
உருக்காத தங்கம்…
இனி உனக்காக பொங்கும்…

ஆண் : வெத்தலைய நான் கிள்ளிக்கவா…
மத்ததெல்லாம் மெதுவா சொல்லிக்கவா…

பெண் : கிச்சிலி சம்பா…
ஆ… கிச்சிலி சம்பா குத்தி எடுத்தேன்…
மொச்சக் கொழம்பும் வச்சி எடுத்தேன்…
மாமாவே உனக்காகத்தான்…

BGM

பெண் : சேலை முட்டி சாஞ்சிபுட்ட சிங்கக்குட்டி நீதான்…
சேத்தணைக்க காத்திருக்கும் தங்கக்கட்டி நான்தான்…
சேலை முட்டி சாஞ்சிபுட்ட சிங்கக்குட்டி நீதான்…
சேத்தணைக்க காத்திருக்கும் தங்கக்கட்டி நான்தான்…

ஆண் : ஆத்தங்கர முல்லை மொட்டு…
பூத்துருச்சி வெட்கம் விட்டு…
ஆசையில தொட்டுப்புட்டேன்…
நெஞ்சுக்குள்ள ஜல்லிக்கட்டு…

ஆண் : புடிவாதமானே ஒரு கடிவாளம் போட்டேன்…
மலை நாட்டுத் தேனே…
ஒன்ன மடிமேல சாச்சேன்…

பெண் : சொக்குப்பொடி ஒன்னு வச்சிபுட்ட…
சொக்கி சொக்கி அதுல சிக்கிகிட்டேன்…

ஆண் : ஹாஹா… கிச்சிலி சம்பா குத்தி எடுத்தே…
மொச்சக் கொழம்பும் வச்சி எடுத்தே…
ஆமாடி அதுக்காகத்தான்…

பெண் : உச்சி மலைக் காத்துல உச்சந்தலை வேர்க்குது…
மச்சமுள்ள மாமன மல்லுக்கட்ட பார்க்குது…

ஆண் : பக்கம் வந்து ஒரசி பார்க்கவா…
ஹான் ஹான்… பந்தி வச்சி பசிய தீர்க்கவா…

பெண் : கிச்சிலி சம்பா…
ஆண் : ஹான்… ஆ…
பெண் : குத்தி எடுத்தேன்…
ஆண் : ஒஒ…

பெண் : மொச்ச கொழம்பும்…
ஆண் : ஹான்… ஆ…
பெண் : வச்சி எடுத்தேன்…
ஆண் : ஒஒ…
பெண் : மாமாவே உனக்காகத்தான்…


Notes : Kichchali Samba Song Lyrics in Tamil. This Song from Oor Mariyadai (1992). Song Lyrics penned by Kalidasan. கிச்சிலி சம்பா பாடல் வரிகள்.