Category Archives: நாடோடி பாட்டுக்காரன்

காதலுக்கு கண்கள் இல்லே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்எஸ். பி. பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாஇளையராஜாநாடோடி பாட்டுக்காரன்

Kathalukku Kangal Illai Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதலுக்கு கண்கள் இல்லே மானே…

BGM

ஆண் : காதலுக்கு கண்கள் இல்லே மானே…
கண்ணுக்குள்ள உன்ன வச்சேன் நானே…

ஆண் : காதல் ஒரு துன்பக் கதையோ…
காலம் தந்த மாய வலையோ…
கங்கை வெள்ளம் கண்ணில் கொண்டேன் நானே…

ஆண் : காதலுக்கு கண்கள் இல்லே மானே…
கண்ணுக்குள்ள உன்ன வச்சேன் நானே…

BGM

ஆண் : என் ராகம் எல்லாம் இங்கே நீதானே…
உன்னை என்னாத நாள் ஏது பூமானே…
அடி உன்னோடு நானும் வந்து சேராது…
என் தேகம் மண்ணில் இங்கே சாயாது…

ஆண் : கங்கைக்கொரு கரை கட்டலாம்…
காவிரிக்கும் அணை கட்டலாம்…
காதலுக்கே வேலி கட்டலாமா…
ஹே… மண்ணில் வச்சு மூடும்…
விதையாவும் பயிர் ஆகும்…
மழை மேகம் நெருப்பாகி போகாதம்மா…

பெண் : காதலுக்கு கண்கள் இல்லே ராசா…
கண்ணுக்குள்ளே உன்ன வச்சா ரோசா…
காதலுக்கு கண்கள் இல்லே ராசா…

BGM

பெண் : தண்ணீரில் நீந்திச் செல்லும் மீன் ஒன்று…
சுடும் வெந்நீரில் விழுந்தாலே என்னாகும்…
இளம் பன்னீரில் ஆடும் தங்க ரோஜாப்பூ…
அது முள் மீது விழுந்தாலே பொல்லாப்பு…

பெண் : எப்பொழுதும் மனசில் உன்னை…
எண்ணி எண்ணி இருக்கும் என்னை…
தடைதான் செய்வார் இங்கே யாரு…

பெண் : மெல்ல துள்ளி வரும் காத்து…
தடை பாத்து தயங்காது…
எந்நாளும் என் நேசம் மாறாதையா…

ஆண் : காதலுக்கு கண்கள் இல்லே மானே…
கண்ணுக்குள்ள உன்ன வச்சேன் நானே…

ஆண் : காதல் ஒரு துன்பக் கதையோ…
காலம் தந்த மாய வலையோ…
கங்கை வெள்ளம் கண்ணில் கொண்டேன் நானே…

ஆண் : காதலுக்கு கண்கள் இல்லே மானே…
கண்ணுக்குள்ள உன்ன வச்சேன் நானே…

ஆண் : காதலுக்கு கண்கள் இல்லே மானே…


Notes : Kathalukku Kangal Illai Song Lyrics in Tamil. This Song from Nadodi Pattukkaran (1992). Song Lyrics penned by Muthulingam. காதலுக்கு கண்கள் இல்லே பாடல் வரிகள்.


ஆகாய தாமரை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஇளையராஜா & பி. சுசீலாஇளையராஜாநாடோடி பாட்டுக்காரன்

Aagaya Thamarai Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆகாய தாமரை அருகில் வந்ததே…
நாடோடி பாடலில் உருகி நின்றதே…

BGM

ஆண் : ஆகாய தாமரை அருகில் வந்ததே…
நாடோடி பாடலில் உருகி நின்றதே…
காவல்தனை தாண்டியே…
காதல் துணை வேண்டியே…

பெண் : ஆகாய தாமரை அருகில் வந்ததே…
நாடோடி பாடலில் உருகி நின்றதே…
காவல்தனை தாண்டியே…
காதல் துணை வேண்டியே…

ஆண் : ஆகாய தாமரை அருகில் வந்ததே…

BGM

ஆண் : மெல்லிசை பாட்டு முழங்கிட கேட்டு…
இதயமே இளகுதா இள மயிலே…

பெண் : நீ மந்திரன் போலே மணி தமிழாலே…
இசைக்கிறாய் இழுக்கிறாய் இளவரசே…

ஆண் : ஒரு மட மாது இணை பிரியாது…
இருக்குமோ மறக்குமோ…

பெண் : ஒரு பொழுதென்னும் அருவியை மீனும்…
பிரியுமோ விலகுமோ…

ஆண் : என்று இந்த லீலை எல்லாம்…
எல்லை தாண்டி போவது…

பெண் : கைகள் ஏந்தும் வேளையெல்லாம்…
கன்னி போகும் பூவிது…

ஆண் : முத்தம் தலைவன் இதழ் பதித்திட…
இதயம் தித்தித்திட…
புதிய மது ரசம் வழிந்திட…

பெண் : ஆகாய தாமரை அருகில் வந்ததே…
ஆண் : நாடோடி பாடலில் உருகி நின்றதே…

BGM

ஆண் : புன்னகை முல்லை புது விழி குவளை…
அழகிய அதரங்கள் அரவிந்த பூவோ…
உன் கன்னங்கள் ரோஜா கொடி இடை அள்ளி…
நிறத்தினில் நீ ஒரு செவ்வந்திப்பூவோ…

ஆண் : செண்பகம் ஒன்று பெண் முகம் கொண்டு…
எனக்கென பிறந்ததோ…
குன்றினில் தோன்றும் குறிஞ்சியும் இங்கே…
குமரியாய் விளைந்ததோ…

பெண் : மின்னும் வண்ண பூக்கள் எல்லாம்…
மாலை என்று ஆகலாம்…
மன்னன் தந்த மாலை எந்தன்…
நெஞ்சை தொட்டு ஆடலாம்…

பெண் : நெஞ்சை தழுவியது துலங்கிட…
உறவு விளங்கிட…
இனிய கவிதைகள் புனைந்திட…

ஆண் : ஆகாய தாமரை அருகில் வந்ததே…
பெண் : நாடோடி பாடலில் உருகி நின்றதே…

ஆண் : காவல்தனை தாண்டியே…
காதல் துணை வேண்டியே…

பெண் : ஆகாய தாமரை அருகில் வந்ததே…


Notes : Aagaya Thamarai Song Lyrics in Tamil. This Song from Nadodi Pattukkaran (1992). Song Lyrics penned by Vaali. ஆகாய தாமரை பாடல் வரிகள்.


vanamellam-shenbagapoo-song-lyrics-in-tamil

வனமெல்லாம் செண்பகப்பூ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாநாடோடி பாட்டுக்காரன்

Vanamellam Shenbagapoo Song Lyrics in Tamil


BGM

ஆண் : வனமெல்லாம் செண்பகப்பூ…
வானெல்லாம் குங்குமப்பூ…
தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ…

ஆண் : வனமெல்லாம் செண்பகப்பூ…
வானெல்லாம் குங்குமப்பூ…
தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ…

ஆண் : நல்லவங்க வாழ்க்கைக்கெல்லாம்…
சாமிதானே காப்பு…
நாமெல்லாம் தெய்வ படைப்பு…

ஆண் : வனமெல்லாம் செண்பகப்பூ…
வானெல்லாம் குங்குமப்பூ…
தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ…

BGM

ஆண் : ஆத்தோரம் பூங்கரும்பு…
காத்திருக்கும் சிறு எறும்பு…
அக்கறையில் ஆயிரம் பூ பூ பூ…

ஆண் : பூத்திருக்கு தாமரப்பூ…
பொன்னிறத்து காஞ்சறம்பூ…
புத்தம் புது பூஞ்சிரிப்பு டாப்பு…

ஆண் : எப்போதும் மாராப்பு…
எடுப்பான பூந்தோப்பு…
என்ன என்ன எங்கும் தித்திப்பூ பூ…

ஆண் : ஒட்டாத ஊதாப்பூ…
உதிராத வீராப்பு…
வண்ண வண்ண இன்பம் ரெட்டிப்பூ பூ…

ஆண் : வழி முழுதும் வனப்பு…
எனக்கழைப்பு…
புது தொகுப்பு வகுப்பு…
கணக்கெடுப்பு…

ஆண் : வனமெல்லாம் செண்பகப்பூ…
வானெல்லாம் குங்குமப்பூ…
தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ…

BGM

ஆண் : கெட்டவர்க்கு மனம் இரும்பு…
நல்லவரை நீ விரும்பு…
எல்லோர்க்கும் வருவதிந்த மூப்பு…

ஆண் : ஏழைகளின் நல்லுழைப்பு…
என்ன இங்கு அவர் பிழைப்பு…
வாழ்வு வரும் என்று எதிர்ப்பார்ப்பு…

ஆண் : வீணாக இழுக்கும் வம்பு…
வினையாகும் கைகலப்பு…
விட்டு விடு சின்ன தம்பி எயிப்பு…

ஆண் : கையோடு எடு சிலம்பு…
கலந்தாட நிமிர்ந்தெழும்பு…
கையில் வரும் நல்ல நல்ல வாய்ப்பு…

ஆண் : விறுவிறுப்பு இருக்கு…
சுறுசுறுப்பு
அருவருப்பு ஒதுக்கு…
வரும் சிறப்பு…

ஆண் : வனமெல்லாம் செண்பகப்பூ…
வானெல்லாம் குங்குமப்பூ…
தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ…

ஆண் : வனமெல்லாம் செண்பகப்பூ…
வானெல்லாம் குங்குமப்பூ…
தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ…

ஆண் : நல்லவங்க வாழ்க்கைக்கெல்லாம்…
சாமிதானே காப்பு…
நாமெல்லாம் தெய்வ படைப்பு…

ஆண் : வனமெல்லாம் செண்பகப்பூ…
வானெல்லாம் குங்குமப்பூ…
தென் பொதிகை காற்றினிலே செந்தாழம்பூ…

BGM


Notes : Vanamellam Shenbagapoo Song Lyrics in Tamil. This Song from Nadodi Pattukkaran (1992). Song Lyrics penned by Gangai Amaran. வனமெல்லாம் செண்பகப்பூ பாடல் வரிகள்.