ஆகாய தாமரை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஇளையராஜா & பி. சுசீலாஇளையராஜாநாடோடி பாட்டுக்காரன்

Aagaya Thamarai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆகாய தாமரை அருகில் வந்ததே…
நாடோடி பாடலில் உருகி நின்றதே…

—BGM—

ஆண் : ஆகாய தாமரை அருகில் வந்ததே…
நாடோடி பாடலில் உருகி நின்றதே…
காவல்தனை தாண்டியே…
காதல் துணை வேண்டியே…

பெண் : ஆகாய தாமரை அருகில் வந்ததே…
நாடோடி பாடலில் உருகி நின்றதே…
காவல்தனை தாண்டியே…
காதல் துணை வேண்டியே…

ஆண் : ஆகாய தாமரை அருகில் வந்ததே…

—BGM—

ஆண் : மெல்லிசை பாட்டு முழங்கிட கேட்டு…
இதயமே இளகுதா இள மயிலே…

பெண் : நீ மந்திரன் போலே மணி தமிழாலே…
இசைக்கிறாய் இழுக்கிறாய் இளவரசே…

ஆண் : ஒரு மட மாது இணை பிரியாது…
இருக்குமோ மறக்குமோ…

பெண் : ஒரு பொழுதென்னும் அருவியை மீனும்…
பிரியுமோ விலகுமோ…

ஆண் : என்று இந்த லீலை எல்லாம்…
எல்லை தாண்டி போவது…

பெண் : கைகள் ஏந்தும் வேளையெல்லாம்…
கன்னி போகும் பூவிது…

ஆண் : முத்தம் தலைவன் இதழ் பதித்திட…
இதயம் தித்தித்திட…
புதிய மது ரசம் வழிந்திட…

பெண் : ஆகாய தாமரை அருகில் வந்ததே…
ஆண் : நாடோடி பாடலில் உருகி நின்றதே…

—BGM—

ஆண் : புன்னகை முல்லை புது விழி குவளை…
அழகிய அதரங்கள் அரவிந்த பூவோ…
உன் கன்னங்கள் ரோஜா கொடி இடை அள்ளி…
நிறத்தினில் நீ ஒரு செவ்வந்திப்பூவோ…

ஆண் : செண்பகம் ஒன்று பெண் முகம் கொண்டு…
எனக்கென பிறந்ததோ…
குன்றினில் தோன்றும் குறிஞ்சியும் இங்கே…
குமரியாய் விளைந்ததோ…

பெண் : மின்னும் வண்ண பூக்கள் எல்லாம்…
மாலை என்று ஆகலாம்…
மன்னன் தந்த மாலை எந்தன்…
நெஞ்சை தொட்டு ஆடலாம்…

பெண் : நெஞ்சை தழுவியது துலங்கிட…
உறவு விளங்கிட…
இனிய கவிதைகள் புனைந்திட…

ஆண் : ஆகாய தாமரை அருகில் வந்ததே…
பெண் : நாடோடி பாடலில் உருகி நின்றதே…

ஆண் : காவல்தனை தாண்டியே…
காதல் துணை வேண்டியே…

பெண் : ஆகாய தாமரை அருகில் வந்ததே…


Notes : Aagaya Thamarai Song Lyrics in Tamil. This Song from Nadodi Pattukkaran (1992). Song Lyrics penned by Vaali. ஆகாய தாமரை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading