Category Archives: தங்க மனசுக்காரன்

பூத்தது பூந்தோப்பு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காமகொடியன்மனோ & எஸ். ஜானகிஇளையராஜாதங்க மனசுக்காரன்

Poothathu Poonthoppu Song Lyrics in Tamil


BGM

பெண் : பூத்தது பூந்தோப்பு பாத்துப் பாத்து…
ஆண் : ஆஹா… போட்டது மாராப்பு தேடிப் பாத்து…

பெண் : ஓஹோ… நேத்தொரு நீரூத்து பொங்கி எழுந்து…
ஆனது காட்டாறு பொங்கிப் புரளுது ஆஹா…

ஆண் : பூத்தது பூந்தோப்பு பாத்துப் பாத்து…
பெண் : ஆஹா… போட்டது மாராப்பு தேடிப் பாத்து… ஹோ…

BGM

குழு : தானத் தந்தம் தீனத் தந்தம்…
தந்தனத்தத் தந்தம் தந்தனா…
தானத் தந்தம் தீனத் தந்தம்…
தந்தனத்தத் தந்தம் தந்தனா…

குழு : தானத் தந்தம் தந்தீன தனதீம் தந்தீன…
தந்தனத்தம் தந்தீனா…
தானத் தந்தம் தந்தீன தனதீம் தந்தீன…
தந்தனத்தம் தந்தீனா…

BGM

பெண் : கேக்குது காட்டுப் பாட்டு…
தூக்குது நேரம் பாத்து…
வாட்டுது ஆசக் கூத்து…
சீக்கிரம் மால மாத்து…

ஆண் : பூ எல்லாம் சேர்த்து கோர்த்து…
மாலையா ஆனது…
நாள் எல்லாம் பார்த்து பார்த்து…
நாணமும் போனது…

பெண் : மாமனே மாங்கனி நானே…
ஏந்தவா தேவனே…
காமனே கை தொடத்தானே…
காயுதே தேகமே…

ஆண் : பூ விழி காட்டும் போதையும் வாட்டும் ஏறுதே பாரமே…

பெண் : ஆஹா… பூத்தது பூந்தோப்பு பாத்துப் பாத்து…
ஆண் : ஆஹா… போட்டது மாராப்பு தேடிப் பாத்து…

பெண் : ஓஹோ… நேத்தொரு நீரூத்து பொங்கி எழுந்து…
ஆனது காட்டாறு பொங்கிப் புரளுது …ஆஹா…

ஆண் : பூத்தது பூந்தோப்பு பாத்துப் பாத்து…
பெண் : ஆஹா… போட்டது மாராப்பு தேடிப் பாத்து… ஹோ…

BGM

ஆண் : கூந்தலா மேகம்தானா…
கூடுது மோகம்தானா…
சேந்தது யோகம்தானா…
பாடுது ராகம்தானா…

பெண் : பாத்ததும் பாவையானா…
பார்வையால் மாறினா…
சேர்த்ததும் தேவியானா…
தினசரி உன் கனா…

ஆண் : கோயிலில் வாழ்கிற மீனா…
வாழ்க்கையை காட்டினா…
கூட உன் கைகளைச் சேர்த்து…
வானத்தில் ஏத்தினா…

பெண் : பாலொடு தேனா சேருதுதானா…
பாடினா தேன் கனா…

ஆண் : ஆஹா… பூத்தது பூந்தோப்பு பாத்துப் பாத்து…
பெண் : ஆஹா… போட்டது மாராப்பு தேடிப் பாத்து…

ஆண் : ஓஹோ… நேத்தொரு நீரூத்து பொங்கி எழுந்து…
ஆனது காட்டாறு பொங்கிப் புரளுது… ஆஹா…

பெண் : பூத்தது பூந்தோப்பு பாத்துப் பாத்து…
ஆண் : ஆஹா… போட்டது மாராப்பு தேடிப் பாத்து ஹோ…


Notes : Poothathu Poonthoppu Song Lyrics in Tamil. This Song from Thanga Manasukkaran (1992). Song Lyrics penned by Kamakodiyan. பூத்தது பூந்தோப்பு பாடல் வரிகள்.


மணிக்குயில் இசைக்குதடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிறைசூடன்மனோஇளையராஜாதங்க மனசுக்காரன்

Manikkuyil Isaikkuthadi Song Lyrics in Tamil


ஆண் : மணிக்குயில் இசைக்குதடி…
மனம் அதில் மயங்குதடி…

ஆண் : மணிக்குயில் இசைக்குதடி…
மனம் அதில் மயங்குதடி…
சிறகுகள் விரிந்ததடி…
இளம் குருவிகள் பறந்ததடி…

ஆண் : அடி மானே மயங்குவதேனோ…
உனைத்தானே உருகுவதேனோ…
இளம் காற்றே கைகள் வீசி வா…
இதம் தேடும் கதைகள் பேச வா…

ஆண் : மணிக்குயில் இசைக்குதடி…
மனம் அதில் மயங்குதடி…
சிறகுகள் விரிந்ததடி…
இளம் குருவிகள் பறந்ததடி…

BGM

ஆண் : கட்டழகு தோட்டம் கண்டால்…
கம்பன் மகன் நானம்மா…
சிட்டு விழி சேதி சொன்னால்…
அந்த சுகம் தேனம்மா…

ஆண் : பட்டம் விட்டு வாழும் வாழ்க்கை…
இன்று வந்து கூடுமோ…
சட்ட திட்டம் ஏதும் இல்லா…
பிள்ளை குணம் ஆகுமோ…

ஆண் : ஊர்கோலம் போகும் கார்கால மேகம்…
பூக் கோலம் நாளும்தான்…
இளம் காற்றே கைகள் வீசி வா…
இதம் தேடும் கதைகள் பேச வா…

ஆண் : மணிக்குயில் இசைக்குதடி…
மனம் அதில் மயங்குதடி…
சிறகுகள் விரிந்ததடி…
இளம் குருவிகள் பறந்ததடி…

ஆண் : அடி மானே மயங்குவதேனோ…
உனைத் தானே உருகுவதேனோ…
இளம் காற்றே கைகள் வீசி வா…
இதம் தேடும் கதைகள் பேச வா…

ஆண் : மணிக்குயில் இசைக்குதடி…
மனம் அதில் மயங்குதடி…
சிறகுகள் விரிந்ததடி…
இளம் குருவிகள் பறந்ததடி…

BGM

ஆண் : ஆற்று நீரில் ஆட்டம் போட்டு…
ஆடி வந்த நாட்களும்…
நேற்று வந்த காற்று போலே…
நெஞ்சை விட்டுப் போகுமா…

ஆண் : அந்தி வந்து சேர்ந்த பின்னே…
நாள் முடிந்து போனதா…
சந்தனம்தான் காய்ந்த பின்னே…
வாசம் இன்றிப் போனதா…

ஆண் : நீராடும் மேகம் தாலாட்டுக் கேளு…
ஊர்கோலம் என்றும்தான்…
இளம் காற்றே கைகள் வீசி வா…
இதம் தேடும் கதைகள் பேச வா…

ஆண் : மணிக்குயில் இசைக்குதடி…
மனம் அதில் மயங்குதடி…
சிறகுகள் விரிந்ததடி…
இளம் குருவிகள் பறந்ததடி…

ஆண் : அடி மானே மயங்குவதேனோ…
உனைத்தானே உருகுவதேனோ…
இளம் காற்றே கைகள் வீசி வா…
இதம் தேடும் கதைகள் பேச வா…

ஆண் : மணிக்குயில் இசைக்குதடி…
மனம் அதில் மயங்குதடி…
சிறகுகள் விரிந்ததடி…
இளம் குருவிகள் பறந்ததடி…


Notes : Manikkuyil Isaikkuthadi Song Lyrics in Tamil. This Song from Thanga Manasukkaran (1992). Song Lyrics penned by Piraisoodan. மணிக்குயில் இசைக்குதடி பாடல் வரிகள்.


udukkai-satham-song-lyrics-in-tamil

உடுக்க சத்தம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மனோஇளையராஜாதங்க மனசுக்காரன்

Udukkai Satham Song Lyrics in Tamil


BGM

ஆண் : உடுக்க சத்தம் கேட்ட தாயி…
ஓடி வந்து நில்லு நில்லு…

BGM

ஆண் : தடுத்து நிக்கும் வேலி எல்லாம்…
தகர்க்க அருள் வாக்குச் சொல்லு…

BGM

ஆண் : வானம் தொட்டு பூமி எங்கும்…
வாழும் சக்தி மாரியம்மா…

BGM

ஆண் : மானம் மரியாதைகளை…
காத்து நிக்க வாடியம்மா…

BGM

ஆண் : நாளும் உன்ன பூஜை செய்ய…
நல்ல பதில் தாருமம்மா…

BGM

ஆண் : நெனச்ச போது அணைக்க வேணும்…
தவிச்ச தாகம் தணிக்க வேணும்…
படைச்ச தாயி மனசு வந்து…
எறங்கி நீயும் வழங்க வேணும்…

BGM

ஆண் : தீய மிதிப்போம்…
தீச் சட்டி எடுப்போம்…
முன்னம் செய்த வினை…
தீர வழி கேட்டு…
அருள் பெய்து…
துயர் தூரம் என ஓட்டு…

ஆண் : தாய மதிப்போம்…
தாய் பேர துதிப்போம்…
தங்கத் தாய் புகழ…
பாடும் இந்தப் பாட்டு…
இந்த சேய் படிக்க…
தீவினைய ஓட்டு…

ஆண் : சக்தி சக்தி தரும்…
வெற்றி வெற்றி…
என் தாயே சரணம்…
அருள் காட்டு…

ஆண் : சக்தி சக்தி தரும்…
வெற்றி வெற்றி…
என் தாயே சரணம்…
அருள் காட்டு…

ஆண் : தீய மிதிப்போம்…
தீச் சட்டி எடுப்போம்…
முன்னம் செய்த வினை…
தீர வழி கேட்டு…
அருள் பெய்து…
துயர் தூரம் என ஓட்டு…

BGM

ஆண் : ஆச வச்ச பாவத்துக்கு…
ஆடுகிறேன் பம்பரமா…
பாசம் வச்ச பாரத்துக்கு…
பாடு பட்டேன் எந்திரமா…

ஆண் : ஒம் மேல சாட்சி வச்சு…
ஒண்ணான ஜோடி…
ஊராரு கண்ணு பட்டு ரெண்டானது…

ஆண் : பொன்னான நெஞ்சுக்குள்ளே…
உண்டான மோகம்…
பொல்லாங்கு சொல்லும் பழி என்றானது…

ஆண் : ஒண்ணா ரெண்டா…
சுமை தாங்கணுமா…
உள்ளம் ரெண்டும் இன்னும் ஏங்கணுமா…

ஆண் : கண்ணால் கண்டும்…
மௌனம் ஏண்டியம்மா
முன்னால் வந்தால் இன்னல் தீருமம்மா…

ஆண் : அடி ஆதி முதல்…
அந்தம் கண்ட மாரி…
பல நீதி சொல்லி…
வாழ வைக்கும் தேவி…

ஆண் : தீய மிதிப்போம்…
தீச் சட்டி எடுப்போம்…
முன்னம் செய்த வினை…
தீர வழி கேட்டு…
அருள் பெய்து…
துயர் தூரம் என ஓட்டு…

BGM

ஆண் : ஏழைக்கும் பாழைக்கும்…
இன்றைக்கும் என்றைக்கும்…
காவல் நிற்கும் மாரி…
குழு : கருமாரி…

BGM

ஆண் : வாழ்வுக்கும் தாழ்வுக்கும்…
நான் உண்டு…
பார் என்று சாட்சி சொல்லும் தேவி…
குழு : அலங்காரி…

BGM

ஆண் : ஏழைக்கும் பாழைக்கும்…
இன்றைக்கும் என்றைக்கும்…
காவல் நிற்கும் மாரி…
குழு : கருமாரி…

BGM

ஆண் : வாழ்வுக்கும் தாழ்வுக்கும்…
நான் உண்டு…
பார் என்று சாட்சி சொல்லும் தேவி…
குழு : அலங்காரி…

BGM

ஆண் : அன்புக்கு அன்பு சொல்லும்…
காளி நீ…
துன்பத்த வெல்ல வரும்…
சூலி நீ…

ஆண் : தாய் எந்தன் முத்து மாரி…
நியாயங்கள் சொல்லும் தேவி…

குழு : தாய் எந்தன் முத்து மாரி…
நியாயங்கள் சொல்லும் தேவி…

BGM


Notes : Udukkai Satham Song Lyrics in Tamil. This Song from Thanga Manasukkaran (1992). Song Lyrics penned by Gangai Amaran. உடுக்க சத்தம் பாடல் வரிகள்.