| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| பிறைசூடன் | மனோ | இளையராஜா | தங்க மனசுக்காரன் |
Manikkuyil Isaikkuthadi Song Lyrics in Tamil
ஆண் : மணிக்குயில் இசைக்குதடி…
மனம் அதில் மயங்குதடி…
ஆண் : மணிக்குயில் இசைக்குதடி…
மனம் அதில் மயங்குதடி…
சிறகுகள் விரிந்ததடி…
இளம் குருவிகள் பறந்ததடி…
ஆண் : அடி மானே மயங்குவதேனோ…
உனைத்தானே உருகுவதேனோ…
இளம் காற்றே கைகள் வீசி வா…
இதம் தேடும் கதைகள் பேச வா…
ஆண் : மணிக்குயில் இசைக்குதடி…
மனம் அதில் மயங்குதடி…
சிறகுகள் விரிந்ததடி…
இளம் குருவிகள் பறந்ததடி…
—BGM—
ஆண் : கட்டழகு தோட்டம் கண்டால்…
கம்பன் மகன் நானம்மா…
சிட்டு விழி சேதி சொன்னால்…
அந்த சுகம் தேனம்மா…
ஆண் : பட்டம் விட்டு வாழும் வாழ்க்கை…
இன்று வந்து கூடுமோ…
சட்ட திட்டம் ஏதும் இல்லா…
பிள்ளை குணம் ஆகுமோ…
ஆண் : ஊர்கோலம் போகும் கார்கால மேகம்…
பூக் கோலம் நாளும்தான்…
இளம் காற்றே கைகள் வீசி வா…
இதம் தேடும் கதைகள் பேச வா…
ஆண் : மணிக்குயில் இசைக்குதடி…
மனம் அதில் மயங்குதடி…
சிறகுகள் விரிந்ததடி…
இளம் குருவிகள் பறந்ததடி…
ஆண் : அடி மானே மயங்குவதேனோ…
உனைத் தானே உருகுவதேனோ…
இளம் காற்றே கைகள் வீசி வா…
இதம் தேடும் கதைகள் பேச வா…
ஆண் : மணிக்குயில் இசைக்குதடி…
மனம் அதில் மயங்குதடி…
சிறகுகள் விரிந்ததடி…
இளம் குருவிகள் பறந்ததடி…
—BGM—
ஆண் : ஆற்று நீரில் ஆட்டம் போட்டு…
ஆடி வந்த நாட்களும்…
நேற்று வந்த காற்று போலே…
நெஞ்சை விட்டுப் போகுமா…
ஆண் : அந்தி வந்து சேர்ந்த பின்னே…
நாள் முடிந்து போனதா…
சந்தனம்தான் காய்ந்த பின்னே…
வாசம் இன்றிப் போனதா…
ஆண் : நீராடும் மேகம் தாலாட்டுக் கேளு…
ஊர்கோலம் என்றும்தான்…
இளம் காற்றே கைகள் வீசி வா…
இதம் தேடும் கதைகள் பேச வா…
ஆண் : மணிக்குயில் இசைக்குதடி…
மனம் அதில் மயங்குதடி…
சிறகுகள் விரிந்ததடி…
இளம் குருவிகள் பறந்ததடி…
ஆண் : அடி மானே மயங்குவதேனோ…
உனைத்தானே உருகுவதேனோ…
இளம் காற்றே கைகள் வீசி வா…
இதம் தேடும் கதைகள் பேச வா…
ஆண் : மணிக்குயில் இசைக்குதடி…
மனம் அதில் மயங்குதடி…
சிறகுகள் விரிந்ததடி…
இளம் குருவிகள் பறந்ததடி…
Notes : Manikkuyil Isaikkuthadi Song Lyrics in Tamil. This Song from Thanga Manasukkaran (1992). Song Lyrics penned by Piraisoodan. மணிக்குயில் இசைக்குதடி பாடல் வரிகள்.

