Category Archives: சம்சாரம் அது மின்சாரம்

சம்சாரம் அது மின்சாரம் – Samsaram Adhu Minsaram (1986)

ஊர தெரிஞ்சிக்கிட்டேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமலேசியா வாசுதேவன்சங்கர் கணேஷ்சம்சாரம் அது மின்சாரம்

Oorai Therinchukiten Song Lyrics in Tamil


ஆண் : ஊர தெரிஞ்சிக்கிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்…
கண்ணம்மா என் கண்ணம்மா…
நாடி தளர்ந்திருச்சு வேல முடிஞ்சிருச்சு…
கண்ணம்மா என் கண்ணம்மா…

BGM

ஆண் : ஊர தெரிஞ்சிக்கிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்…
கண்ணம்மா என் கண்ணம்மா…
நாடி தளர்ந்திருச்சு வேல முடிஞ்சிருச்சு…
கண்ணம்மா என் கண்ணம்மா…

ஆண் : பாடம் படிக்குதுன்னு பாராட்டி வளர்த்தேன்…
பாடம் படிச்ச புள்ள பாடங்கள் சொல்லுதடி…

ஆண் : ஊர தெரிஞ்சிக்கிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்…
கண்ணம்மா என் கண்ணம்மா…
நாடி தளர்ந்திருச்சு வேல முடிஞ்சிருச்சு…
கண்ணம்மா என் கண்ணம்மா…

BGM

ஆண் : ஆத்தா அப்பன் பேச்சு காத்தில் அது போச்சு…
பேச்ச மீறி போச்சு இனி வாழாவெட்டி ஆச்சு…

ஆண் : காட்டுக்கு நடு காட்டுக்கு அன்ற சீதை அவ போனா…
ரோட்டுக்கு நடு ரோட்டுக்கு இன்று பேதை இவ போனா…

ஆண் : என் வீட்டு செல்லகட்டி என்னோட மல்லுகட்டி…
என்கோட்ட தாண்டு தடி கண்ணம்மா என் கண்ணம்மா…
என் இடுப்பு வேட்டி கூட என் பேச்ச கேட்க வில்லை…
கண்ணம்மா என் கண்ணம்மா…

ஆண் : ஊர தெரிஞ்சிக்கிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்…
கண்ணம்மா என் கண்ணம்மா…
நாடி தளர்ந்திருச்சு வேல முடிஞ்சிருச்சு…
கண்ணம்மா என் கண்ணம்மா…

BGM

ஆண் : ஏன்டி இந்த பாடு நீயும் கொஞ்சம் போடு…
சூடு பட்ட நெஞ்சம் தண்ணி விட்டு ஆத்து…

ஆண் : என் மகன் ஒரு பாலகன்…
இவன் படிப்பே தகராறோ…
பிள்ளையும் என் பேரனும்…
ஒரு வகுப்பில் படிப்பாரோ…

ஆண் : அழுகின்ற என்னை கண்டு…
அடங்காத பிள்ளை ஒன்று…
கடங்காரா என்றதடி கண்ணம்மா என் கண்ணம்மா…

ஆண் : என் பேறு அம்மை அப்பன்…
எனக்கு இல்லை வெள்ளை அப்பன்…
கண்ணம்மா என் கண்ணம்மா…

ஆண் : ஊர தெரிஞ்சிக்கிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்…
கண்ணம்மா என் கண்ணம்மா…
நாடி தளர்ந்திருச்சு வேல முடிஞ்சிருச்சு…
கண்ணம்மா என் கண்ணம்மா…

ஆண் : பாடம் படிக்குதுன்னு பாராட்டி வளர்த்தேன்…
பாடம் படிச்ச புள்ள பாடங்கள் சொல்லுதடி…

ஆண் : ஊர தெரிஞ்சிக்கிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்…
கண்ணம்மா என் கண்ணம்மா…
நாடி தளர்ந்திருச்சு வேல முடிஞ்சிருச்சு…
கண்ணம்மா என் கண்ணம்மா…


Notes : Oorai Therinchukiten Song Lyrics in Tamil. This Song from Samsaram Adhu Minsaram (1986). Song Lyrics penned by Vairamuthu. ஊர தெரிஞ்சிக்கிட்டேன் பாடல் வரிகள்.


ஜானகி தேவி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே. எஸ். சித்ராசங்கர் கணேஷ்சம்சாரம் அது மின்சாரம்

Janaki Devi Song Lyrics in Tamil


பெண் : ஜானகி தேவி ராமனைத் தேடி…
இருவிழி வாசல் திறந்து வைத்தாள்…

BGM

பெண் : ஜானகி தேவி ராமனைத் தேடி…
இருவிழி வாசல் திறந்து வைத்தாள்…
ராமன் வந்தான் மயங்கிவிட்டாள்…
தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்…

பெண் : ஜானகி தேவி ராமனைத் தேடி…
இருவிழி வாசல் திறந்து வைத்தாள்…

BGM

பெண் : சீதை வணங்கி எழுந்தாளே…
கண்களில் அவனை அளந்தாளே…
பாதம் பார்த்து நடந்தாளே…
ரகசிய புன்னகை புரிந்தாளே…

பெண் : பார்வையில் கேட்கிறான் பதில் என்ன மானே…
பார்வையில் கேட்கிறான் பதில் என்ன மானே…
மௌனம் மௌனம் சம்மதம்தானே…

பெண் : ஜானகி தேவி ராமனைத் தேடி…
இருவிழி வாசல் திறந்து வைத்தாள்…
ராமன் வந்தான் மயங்கிவிட்டாள்…
தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்…

BGM

பெண் : ராமன் சீதை முகம் பார்க்க…

BGM

பெண் : ராமன் சீதை முகம் பார்க்க…
சீதையின் கண்களோ நிலம் பார்க்க…
நாணம் வந்து தடை போட…
நாயகன் அங்கங்கே எடை போட…

பெண் : பாவையும் பாடினாள் பரம்பரை பாட்டு…
பாவையும் பாடினாள் பரம்பரை பாட்டு…
சபையில் தவித்தாள் தலைவனைப் பார்த்து…

பெண் : ஜானகி தேவி ராமனைத் தேடி…
இருவிழி வாசல் திறந்து வைத்தாள்…
ராமன் வந்தான் மயங்கிவிட்டாள்…
தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்…


Notes : Janaki Devi Song Lyrics in Tamil. This Song from Samsaram Adhu Minsaram (1986). Song Lyrics penned by Vairamuthu. ஜானகி தேவி பாடல் வரிகள்.


சம்சாரம் அது மின்சாரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம்சங்கர் கணேஷ்சம்சாரம் அது மின்சாரம்

Samsaram Adhu Minsaram Song Lyrics in Tamil


BGM

ஆண் : சம்சாரம் அது மின்சாரம்…
சம்சாரம் அது மின்சாரம்…
அன்புக் கொள்ள யாரும் இல்ல…
எந்த நெஞ்சும் ஈரமில்ல சம்சாரம்…

ஆண் : பந்தமில்லை பாசமில்லை…
சொந்தமிங்கு சொந்தமில்லை சம்சாரம்…
நேரம் வந்து நெருங்கித் தொட்டா…
ஷாக் அடிக்கிற மின்சாரம்…

ஆண் : சம்சாரம் அது மின்சாரம்…
சம்சாரம் அது மின்சாரம்…

BGM

ஆண் : அப்பன் என்ன ஆத்தா என்ன ஒப்புக்குத்தானடி…
பாராங்கல்ல பெத்து புட்டா பாசம் ஏதடி…

ஆண் : பெத்தப் புள்ள தந்த பணம் உப்புக்கு ஆகுமா…
தாய்பாலுக்கு கணக்கு போட்டா தாலி மிஞ்சுமா…

ஆண் : வாயக் கட்டி வளத்த புள்ள மல்லுக் கட்டி நிக்குதடி…
வாங்கித் தந்த காசுக்கெல்லாம் வட்டிக் கட்ட சொல்லுதடி…
கோடு ஒன்னு கிழிக்க வச்சி கும்மி அடிக்குது அம்மாடி…

ஆண் : சம்சாரம் அது மின்சாரம்…
சம்சாரம் அது மின்சாரம்…

BGM

ஆண் : காலில் ஒரு முள்ளு தச்சா கண்ணு கலங்குது…
கண்ணில் ஒரு தூசு பட்டா கைதான் ஓடுது…
சேவல் அன்று கோடு கிழிச்சி வேலி போட்டது…
வேலிதாண்டி கோழி போக வேளை வந்தது…

ஆண் : அக்கம்பக்கம் யாருமில்லை ஆபத்துக்கு பாவமில்லை…
பாவத்துக்கு சட்டம் இல்ல மீறுவது குத்தம் இல்ல…
பாசத்துக்கு ரக்க மொளச்சு பறந்து போகுது தன்னாலே

ஆண் : சம்சாரம் அது மின்சாரம்…
சம்சாரம் அது மின்சாரம்…

BGM

ஆண் : இந்த சொந்தம் என்ன சொந்தம் யாருக்கும் தோணல…
வாய் திறந்தது சொல்ல வந்தா வார்த்த வரல…

ஆண் : வானவில்ல சின்னப்புள்ள வளைக்க பாக்குது…
ஆகாயத்தில் ஊஞ்சல் கட்ட ஆசப்படுது…

ஆண் : சிறகொண்ணு மொளைக்கு முன்னே பறக்குது பட்டாம்பூச்சி…
காமதேவன் ராஜாங்கத்தில் இது ஒரு கண்ணாமூச்சி…
ஆத்துமேட்டில் எழுதி வச்சத அலை அடிச்சுது அண்ணாச்சி…

ஆண் : சம்சாரம் அது மின்சாரம்…
சம்சாரம் அது மின்சாரம்…

BGM

ஆண் : வயசு வந்த புள்ள ஒண்ணு பாடம் படிக்குது…
அன்பு ஒன்றே வாழ்க்கை என்ற அர்த்தம் வெளங்குது…
கட்டிலுக்கு ஆசப்பட்டு புத்தி அலைஞ்சுது…
கணவர் இங்கே பிள்ளை என்றே கண்டு கொண்டது…

ஆண் : தன்னடக்கம் வேணுமம்மா பெண்ணுகது நல்லதம்மா…
காமத்துக்கும் மோகத்துக்கும் காலநேரம் உள்ளதம்மா…
இல்லறத்தில் இன்ப துன்பம் இரண்டும் உள்ளது பொன்னம்மா…

ஆண் : சம்சாரம் அது மின்சாரம்…
சம்சாரம் அது மின்சாரம்…

ஆண் : அன்புக் கொள்ள ஆளுமுண்டு…
நெஞ்சுக்குள்ளே ஈரமுண்டு சம்சாரம்…
பந்தமுண்டு பாசமுண்டு…
சொந்தத்துக்கு உள்ளம் உண்டு சம்சாரம்…
சூட்சுமத்தை தெரிஞ்சிகிட்டா ஒளி கொடுக்கிற மின்சாரம்…

ஆண் : சம்சாரம் அது மின்சாரம்…
சம்சாரம் அது மின்சாரம்…


Notes : Samsaram Adhu Minsaram Song Lyrics in Tamil. This Song from Samsaram Adhu Minsaram (1986). Song Lyrics penned by Vairamuthu. சம்சாரம் அது மின்சாரம் பாடல் வரிகள்.