| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வைரமுத்து | கே. எஸ். சித்ரா | சங்கர் கணேஷ் | சம்சாரம் அது மின்சாரம் |
Janaki Devi Song Lyrics in Tamil
பெண் : ஜானகி தேவி ராமனைத் தேடி…
இருவிழி வாசல் திறந்து வைத்தாள்…
—BGM—
பெண் : ஜானகி தேவி ராமனைத் தேடி…
இருவிழி வாசல் திறந்து வைத்தாள்…
ராமன் வந்தான் மயங்கிவிட்டாள்…
தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்…
பெண் : ஜானகி தேவி ராமனைத் தேடி…
இருவிழி வாசல் திறந்து வைத்தாள்…
—BGM—
பெண் : சீதை வணங்கி எழுந்தாளே…
கண்களில் அவனை அளந்தாளே…
பாதம் பார்த்து நடந்தாளே…
ரகசிய புன்னகை புரிந்தாளே…
பெண் : பார்வையில் கேட்கிறான் பதில் என்ன மானே…
பார்வையில் கேட்கிறான் பதில் என்ன மானே…
மௌனம் மௌனம் சம்மதம்தானே…
பெண் : ஜானகி தேவி ராமனைத் தேடி…
இருவிழி வாசல் திறந்து வைத்தாள்…
ராமன் வந்தான் மயங்கிவிட்டாள்…
தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்…
—BGM—
பெண் : ராமன் சீதை முகம் பார்க்க…
—BGM—
பெண் : ராமன் சீதை முகம் பார்க்க…
சீதையின் கண்களோ நிலம் பார்க்க…
நாணம் வந்து தடை போட…
நாயகன் அங்கங்கே எடை போட…
பெண் : பாவையும் பாடினாள் பரம்பரை பாட்டு…
பாவையும் பாடினாள் பரம்பரை பாட்டு…
சபையில் தவித்தாள் தலைவனைப் பார்த்து…
பெண் : ஜானகி தேவி ராமனைத் தேடி…
இருவிழி வாசல் திறந்து வைத்தாள்…
ராமன் வந்தான் மயங்கிவிட்டாள்…
தன் பேரைக் கூட மறந்துவிட்டாள்…
Notes : Janaki Devi Song Lyrics in Tamil. This Song from Samsaram Adhu Minsaram (1986). Song Lyrics penned by Vairamuthu. ஜானகி தேவி பாடல் வரிகள்.
