தெய்வம் இருப்பது எங்கே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம். சௌந்தரராஜன்கே.வி. மகாதேவன்சரஸ்வதி சபதம்

Deivam Iruppathu Engey Song Lyrics in Tamil


ஆண் : தெய்வம் இருப்பது எங்கே…
தெய்வம் இருப்பது எங்கே…
தெய்வம் இருப்பது எங்கே…
தெய்வம் இருப்பது எங்கே…

—BGM—

ஆண் : தெய்வம் இருப்பது எங்கே…
அது இங்கே வேர் எங்கே…
தெய்வம் இருப்பது எங்கே…
அது இங்கே வேர் எங்கே…

ஆண் : தெய்வம் இருப்பது எங்கே…

ஆண் : தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சும்…
நிறைந்ததுண்டோ அங்கே…
தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சும்…
நிறைந்ததுண்டோ அங்கே…

ஆண் : தெய்வம் இருப்பது எங்கே…

—BGM—

ஆண் : பொன்னும் பொருளும் நிறைந்தவர் நெஞ்சம்…
பொய்யில் வளர்ந்த காடு…
பொன்னும் பொருளும் நிறைந்தவர் நெஞ்சம்…
பொய்யில் வளர்ந்த காடு…

ஆண் : எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம்…
இறைவன் திகழும் வீடு…
எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் நெஞ்சம்…
இறைவன் திகழும் வீடு…

ஆண் : தெய்வம் இருப்பது எங்கே…

—BGM—

ஆண் : ஆடை அணிகலன் ஆடம்பரங்கள்…
ஆண்டவன் விரும்புவதில்லை…
ஆடை அணிகலன் ஆடம்பரங்கள்…
ஆண்டவன் விரும்புவதில்லை…

ஆண் : அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும்…
ஆலய வழிபாடில்லை…
அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும்…
ஆலய வழிபாடில்லை…

ஆண் : இசையில் கலையில் கவியில்…
மழலை மொழியில் இறைவன் உண்டு…
இசையில் கலையில் கவியில்…
மழலை மொழியில் இறைவன் உண்டு…

ஆண் : இவைதான் தெய்வம் என்பதை அறிந்தால்…
ஏற்கும் உனது தொண்டு…
இவைதான் தெய்வம் என்பதை அறிந்தால்…
ஏற்கும் உனது தொண்டு…
தெய்வம் ஏற்கும் உனது தொண்டு…

ஆண் : தெய்வம் இருப்பது எங்கே…
அது இங்கே வேர் எங்கே…

ஆண் : தெய்வம் இருப்பது எங்கே…

—BGM—

ஆண் : நன்றி நிறைந்தவர் எங்கே…
தெய்வம் அங்கே…
நன்மை புரிந்தவர் எங்கே…
தெய்வம் அங்கே…

ஆண் : பழமை நினைந்தவர் எங்கே…
தெய்வம் அங்கே…
பாசம் மலர்ந்தவர் எங்கே…
தெய்வம் அங்கே…

ஆண் : தெய்வம் இருப்பது இங்கே…


Notes : Deivam Iruppathu Engey Song Lyrics in Tamil. This Song from Saraswathi Sabatham (1966). Song Lyrics penned by Kannadasan. தெய்வம் இருப்பது எங்கே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading