Category Archives: பன்னீர் புஷ்பங்கள்

பன்னீர் புஷ்பங்கள் – Panneer Pushpangal (1981)

கோடைக்கால காற்றே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன்இளையராஜாபன்னீர் புஷ்பங்கள்

Kodai Kaala Kaatre Song Lyrics in Tamil


BGM

ஆண் : கோடைக்கால காற்றே…
குளிர்த்தென்றல் பாடும் பாட்டே…
மனம் தேடும் சுவையோடு…
தினம்தோறும் இசைபாடு…

ஆண் : அதை கேட்கும் நெஞ்சமே…
சுகம் கோடி காணட்டும்…
இவைகள் இளமாலை பூக்களே…
புதுச்சோலை பூக்களே…

ஆண் : கோடைகால காற்றே…
குளிர்த்தென்றல் பாடும் பாட்டே…

BGM

ஆண் : வானில் போகும் மேகம் இங்கே…
யாரைத் தேடுதோ…
வாசம் வீசும் பூவின் ராகம்…
யாரைப் பாடுதோ…

ஆண் : தன் உணர்வுகளை மெல்லிசையாக…
நம் உறவுகளை வந்து கூடாதோ…

ஆண் : திருநாளும் கூடட்டும்…
சுகம் தேடி ஆடட்டும்…
இவைகள் இளமாலை பூக்களே…
புதுச்சோலை பூக்களே…

ஆண் : கோடைகால காற்றே…
குளிர்த்தென்றல் பாடும் பாட்டே…

BGM

ஆண் : ஏதோ ஒன்றைத் தேடும் நெஞ்சம்…
இங்கே கண்டதே…
ஏங்கும் கண்ணில் தோன்றும் இன்பம்…
இங்கே என்றதே…

ஆண் : வெண்மலை அருவி பன்னீர் தூவி…
பொன்மலை அழகின் சுகம் ஏற்காதோ…

ஆண் : இவை யாவும் பாடங்கள்…
இனிதான வேதங்கள்…
இவைகள் இளமாலை பூக்களே…
புதுச்சோலை பூக்களே…

ஆண் : கோடைக்கால காற்றே…
குளிர்த்தென்றல் பாடும் பாட்டே…
மனம் தேடும் சுவையோடு…
தினம்தோறும் இசைபாடு…

ஆண் : அதை கேட்கும் நெஞ்சமே…
சுகம் கோடி காணட்டும்…
இவைகள் இளமாலை பூக்களே…
புதுச்சோலை பூக்களே…

ஆண் : கோடைகால காற்றே…
குளிர்த்தென்றல் பாடும் பாட்டே…


Notes : Kodai Kaala Kaatre Song Lyrics in Tamil. This Song from Panneer Pushpangal (1981). Song Lyrics penned by Gangai Amaran. கோடைக்கால காற்றே பாடல் வரிகள்.


ஆனந்த ராகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்உமா ரமணன்இளையராஜாபன்னீர் புஷ்பங்கள்

Aanandha Raagam Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆனந்த ராகம் கேட்கும் காலம்…
ஆனந்த ராகம் கேட்கும் காலம்…
கீழ் வானிலே ஒளி போல் தோன்றுதே…
ஆயிரம் ஆசைகள் உள் நெஞ்சம் பாடதோ…

பெண் : ஆனந்த ராகம் கேட்கும் காலம்…

BGM

பெண் : துள்ளி வரும் உள்ளங்களில்…
தூது வந்து தென்றல் சொல்ல…
தோன்றும் எங்கும் இன்பத்தின் ஆனந்த தாளங்களே…

பெண் : வெள்ளி மலைக் கோலங்களை…
அள்ளி கொண்ட மேகங்களை…
காணும் நெஞ்சில் பொங்கட்டும் சொந்தத்தின் பாவங்களே…

பெண் : கள்ளம் இன்றி உள்ளங்கள் துள்ளி எழ…
கட்டி கொண்ட எண்ணங்கள் மெல்ல விழ…
ராகங்கள் பாட தாளங்கள் போட வானெங்கும் போகதோ…

பெண் : ஆனந்த ராகம் கேட்கும் காலம்…
லா லா ல லா லா லா லா லா லா…

BGM

பெண் : வண்ண வண்ண எண்ணங்களும்…
வந்து விழும் உள்ளங்களும்…
வானின் மீது ஊர்வலம் போகின்ற காலங்களே…

பெண் : சின்ன சின்ன மின்னல்களும்…
சிந்தனையின் பின்னல்களும்…
சேரும் போது தோன்றிடும் ஆயிரம் கோலங்களே…

பெண் : இன்று முதல் இன்பங்கள் பொங்கி வரும்…
இந்த மனம் எங்கெங்கும் சென்று வரும்…
காவிய ராகம் காற்றினில் கேட்கும் காலங்கள் ஆரம்பம்…

பெண் : ஆனந்த ராகம் கேட்கும் காலம்…
ஆனந்த ராகம் கேட்கும் காலம்…
கீழ் வானிலே ஒளி போல் தோன்றுதே…
ஆயிரம் ஆசைகள் உள் நெஞ்சம் பாடதோ…

பெண் : ஆனந்த ராகம் கேட்கும் காலம்…
லா லா ல லா லா லா லா லா லா…


Notes : Aanandha Raagam Song Lyrics in Tamil. This Song from Panneer Pushpangal (1981). Song Lyrics penned by Gangai Amaran. ஆனந்த ராகம் பாடல் வரிகள்.


பூந்தளிர் ஆட

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாபன்னீர் புஷ்பங்கள்

Poonthalir Aada Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூந்தளிர் ஆட…

BGM

ஆண் : பொன் மலர் சூட…

BGM

ஆண் : பூந்தளிர் ஆட பொன்மலர் சூட…
சிந்தும் பனி வாடைக் காற்றில்…
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்…
பாடும் புது ராகங்கள்…
இனி நாளும் சுப காலங்கள்…

ஆண் : பூந்தளிர் ஆட…

BGM

ஆண் : பொன் மலர் சூட…

BGM

பெண் : காதலை ஏற்றும் காலையின் காற்றும்…
நீரைத் தொட்டு பாடும் பாட்டும் காதில் பட்டதே…
வாலிப நாளில் வாசனை பூவின்…
வாடைப்பட்டு வாடும் நெஞ்சில் எண்ணம் சுட்டதே…

ஆண் : கோடிகள் ஆசை கூடிய போது…
கூடும் நெஞ்சிலே கோலம் இட்டதே…

பெண் : தேடிடுதே பெண் பாட்டின் ராகம்…

பெண் : பூந்தளிர் ஆட…

BGM

பெண் : பொன் மலர் சூட…

BGM

ஆண் : பூமலர் தூவும் பூமரம் நாளும்…
போதை கொண்டு பூமி தன்னை பூஜை செய்யுதே…
பூவிரலாலும் பொன்னிதழாலும்…
பூவை எண்ணம் காதல் என்னும் இன்பம் செய்யுதே…

பெண் : பூமழை தூவும் புண்ணிய மேகம்…
பொன்னை அள்ளுதே வண்ணம் நெய்யுதே…

ஆண் : ஏங்கிடுதே என் ஆசை எண்ணம்…

ஆண் : பூந்தளிர் ஆட…

BGM

ஆண் : பொன் மலர் சூட…

BGM

பெண் : சிந்தும் பனி வாடைக் காற்றில்…
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்…
பாடும் புது ராகங்கள்…
ஆண் : இனி நாளும் சுப காலங்கள்…

பெண் : பாடும் புது ராகங்கள்…
ஆண் : இனி நாளும் சுப காலங்கள்…


Notes : Poonthalir Aada Song Lyrics in Tamil. This Song from Panneer Pushpangal (1981). Song Lyrics penned by Gangai Amaran. பூந்தளிர் ஆட பாடல் வரிகள்.