கோடைக்கால காற்றே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன்இளையராஜாபன்னீர் புஷ்பங்கள்

Kodai Kaala Kaatre Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கோடைக்கால காற்றே…
குளிர்த்தென்றல் பாடும் பாட்டே…
மனம் தேடும் சுவையோடு…
தினம்தோறும் இசைபாடு…

ஆண் : அதை கேட்கும் நெஞ்சமே…
சுகம் கோடி காணட்டும்…
இவைகள் இளமாலை பூக்களே…
புதுச்சோலை பூக்களே…

ஆண் : கோடைகால காற்றே…
குளிர்த்தென்றல் பாடும் பாட்டே…

—BGM—

ஆண் : வானில் போகும் மேகம் இங்கே…
யாரைத் தேடுதோ…
வாசம் வீசும் பூவின் ராகம்…
யாரைப் பாடுதோ…

ஆண் : தன் உணர்வுகளை மெல்லிசையாக…
நம் உறவுகளை வந்து கூடாதோ…

ஆண் : திருநாளும் கூடட்டும்…
சுகம் தேடி ஆடட்டும்…
இவைகள் இளமாலை பூக்களே…
புதுச்சோலை பூக்களே…

ஆண் : கோடைகால காற்றே…
குளிர்த்தென்றல் பாடும் பாட்டே…

—BGM—

ஆண் : ஏதோ ஒன்றைத் தேடும் நெஞ்சம்…
இங்கே கண்டதே…
ஏங்கும் கண்ணில் தோன்றும் இன்பம்…
இங்கே என்றதே…

ஆண் : வெண்மலை அருவி பன்னீர் தூவி…
பொன்மலை அழகின் சுகம் ஏற்காதோ…

ஆண் : இவை யாவும் பாடங்கள்…
இனிதான வேதங்கள்…
இவைகள் இளமாலை பூக்களே…
புதுச்சோலை பூக்களே…

ஆண் : கோடைக்கால காற்றே…
குளிர்த்தென்றல் பாடும் பாட்டே…
மனம் தேடும் சுவையோடு…
தினம்தோறும் இசைபாடு…

ஆண் : அதை கேட்கும் நெஞ்சமே…
சுகம் கோடி காணட்டும்…
இவைகள் இளமாலை பூக்களே…
புதுச்சோலை பூக்களே…

ஆண் : கோடைகால காற்றே…
குளிர்த்தென்றல் பாடும் பாட்டே…


Notes : Kodai Kaala Kaatre Song Lyrics in Tamil. This Song from Panneer Pushpangal (1981). Song Lyrics penned by Gangai Amaran. கோடைக்கால காற்றே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading