அதிகாலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகிஇளையராஜாநட்பு

Adhikaalai Song Lyrics in Tamil


—BGM—

பெண் : அதிகாலை சுபவேளை…
உன் ஓலை வந்தது…
அதிகாலை சுபவேளை…
உன் ஓலை வந்தது…

ஆண் : காதல் சொன்ன காகிதம்…
பூவாய்ப் போனது…
வானில் போன தேவதை…
வாழ்த்துச் சொன்னது…

பெண் : ஒரு தத்தை கடிதத்தை…
தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க…

பெண் : அதிகாலை சுபவேளை…
உன் ஓலை வந்தது…

ஆண் : அதிகாலை சுபவேளை…
உன் ஓலை வந்தது…

—BGM—

ஆண் : அன்பே வா வா அணைக்கவா…
நீ நிலவுக்குப் பிறந்தவளா…

பெண் : போதை வண்டே பொறுத்திரு…
இன்று மலருக்குத் திறப்பு விழா…

ஆண் : உன்னை வந்து பாராமல்…
தூக்கம் தொல்லையே…

பெண் : உன்னை வந்து பார்த்தாலும்…
தூக்கம் இல்லையே…

ஆண் : ஒரு பாரம் உடை மீறும்…
நிறம் மாறும் கனியே…

பெண் : இதழோரம் அமுதூறும் பரிமாறும் இனியே…
ஆண் : அடி தப்பி போகக்கூடாது…

ஆண் : அதிகாலை சுபவேளை…
உன் ஓலை வந்தது…

பெண் : அதிகாலை சுபவேளை…
உன் ஓலை வந்தது…

—BGM—

பெண் : தென்றல் வந்து தீண்டினால்…
இந்தத் தளிர் என்ன தடை சொல்லுமா…

ஆண் : பெண்மை பாரம் தாங்குமா…
அந்த இடை ஒரு விடை சொல்லுமா…

பெண் : என்னைச் சேர்ந்த உன்னுள்ளம்…
ஈரம் மாறுமா…

ஆண் : தங்கம் என்ன சுட்டாலும்…
சாரம் போகுமா…

பெண் : இளங்கோதை ஒரு பேதை…
இவள் பாதை உனது…

ஆண் : மலர் மாலை அணியாமல்…
உறங்காது மனது…

பெண் : இது போதும் சொர்க்கம் வேறேது…

பெண் : அதிகாலை சுபவேளை…
உன் ஓலை வந்தது…

ஆண் : அதிகாலை சுபவேளை…
உன் ஓலை வந்தது…

பெண் : காதல் சொன்ன காகிதம்…
பூவாய்ப் போனது…
வானில் போன தேவதை…
வாழ்த்துச் சொன்னது…

ஆண் : ஒரு தத்தை கடிதத்தை…
தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க…

ஆண் : அதிகாலை சுபவேளை…
உன் ஓலை வந்தது…

ஆண் & பெண் : அதிகாலை சுபவேளை…
உன் ஓலை வந்தது…


Notes : Adhikaalai Song Lyrics in Tamil. This Song from Natpu (1986). Song Lyrics penned by Vairamuthu. அதிகாலை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading