ஆசை வச்சேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. சுசீலாஇளையராஜாநட்பு

Aasa Vachen Unmela Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆசை வச்சேன் உன் மேல…
மச்சான் அரளி வச்சேன் கொல்லையிலே…
ஆசை வச்சேன் உன் மேல…
மச்சான் அரளி வச்சேன் கொல்லையிலே…

பெண் : ஆதரிச்சா நல்லதையா…
இல்ல அரளி வெதை உள்ளதையா…
அரளி வெதை உள்ளதையா…

பெண் : ஆசை வச்சேன் உன் மேல…
உன் மேல…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : சண்ட போட்ட கெண்டை மீனு…
ரெண்டும் சேந்து ஒண்ணாச்சு…
ரெண்டும் சேந்து கொஞ்சும் போது…
ஏரித் தண்ணி தேனாச்சு…

பெண் : தூண்டியிலே சிக்கவில்ல…
சுத்தி வர கொக்கும் இல்ல…
மீனு ரெண்டும் தூங்கயில…
அக்கம் பக்கம் யாரும் இல்ல…

பெண் : ரெண்டு மீனும் கண் முழிச்சா…
ஏரியில தண்ணி இல்ல…
ஏரியில தண்ணி இல்ல…

பெண் : ஆசை வச்சேன் உன் மேல…
மச்சான் அரளி வச்சேன் கொல்லையிலே…
ஆசை வச்சேன் உன் மேல…
உன் மேல…

BGM

பெண் : தென்னந்தோப்பில் என்னப் பாத்து…
சொன்ன வார்த்த என்னாச்சு…
அப்பன் பேசும் பேச்சக் கேட்டு…
காது ரெண்டும் புண்ணாச்சு…

பெண் : ரெக்கை எல்லாம் வெட்டிப்புட்டு…
நிக்குதையா பச்சக் கிளி…
ஊருக்குள்ள ஓமலிப்பு…
வாடுதையா வஞ்சிக் கொடி…

பெண் : கட்டிலிலே தேங்கி நிக்கும்…
கண்ணீர் மட்டும் ரெண்டு படி…
கண்ணீர் மட்டும் ரெண்டு படி…

பெண் : ஆசை வச்சேன் உன் மேல…
மச்சான் அரளி வச்சேன் கொல்லையிலே…
ஆசை வச்சேன் உன் மேல…
மச்சான் அரளி வச்சேன் கொல்லையிலே…

பெண் : ஆதரிச்சா நல்லதையா…
இல்ல அரளி வெதை உள்ளதையா…
அரளி வெதை உள்ளதையா…

பெண் : ஆசை வச்சேன் உன் மேல…
உன் மேல…


Notes : Aasa Vachen Unmela Song Lyrics in Tamil. This Song from Natpu (1986). Song Lyrics penned by Vairamuthu. ஆசை வச்சேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading