மழைக் கால மேகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்கங்கை அமரன்வாழ்வே மாயம்

Mazhai Kaala Megam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மழைக் கால மேகம் ஒன்று…
மடி ஊஞ்சல் ஆடியது…
இதற்காகதானே அன்று…
ஒரு ஜீவன் வாடியது…

ஆண் : மழைக் கால மேகம் ஒன்று…
மடி ஊஞ்சல் ஆடியது…
இதற்காகதானே அன்று…
ஒரு ஜீவன் வாடியது…

பெண் : இத்தனை காலம் சித்திரப் பெண்ணை…
பார்வை தேடியது…

—BGM—

ஆண் : ஒரு பாடல் பாடியது…
அதில் ஊடல் கூடியது…

—BGM—

பெண் : மீட்டாத வீணையின் மெல்லிய தேகம்…
நீ தொட்ட வேளையில் மோகன ராகம்…
மீட்டாத வீணையின் மெல்லிய தேகம்…
நீ தொட்ட வேளையில் மோகன ராகம்…

ஆண் : விரல் வழி பிறந்தது…
உடல் வழி கலந்தது…
தலை முதல் கால் வரை சிலிர்த்திடத்தான்…

பெண் : பூவை நானும் பூவல்ல…
பூப்போல் நீ கிள்ள…

ஆண் : எனக்கென இருப்பது எதற்கதை மறைப்பது…

பெண் : மழைக் கால மேகம் ஒன்று…
மடி ஊஞ்சல் ஆடியது…

ஆண் : இதற்காகதானே அன்று…
ஒரு ஜீவன் வாடியது…

—BGM—

ஆண் : ஆஹா என் தோள்களில் மாங்கனி சாய…
ஆகாய கங்கை என் மார்பினில் பாய…
ஆஹா என் தோள்களில் மாங்கனி சாய…
ஆகாய கங்கை என் மார்பினில் பாய…

பெண் : கொதித்தது குளிர்ந்தது குளிர்ந்தது வளர்ந்தது…
நடந்ததை மறந்திடு உனக்கினி நான்…

ஆண் : காமன் பாடும் சங்கீதம்…
காலத்தின் சந்தோஷம்…

பெண் : தொடத் தொடத் தொடர்ந்தது…
கொடியெனப் படர்ந்தது…

ஆண் : மழைக் கால மேகம் ஒன்று…
மடி ஊஞ்சல் ஆடியது…
இதற்காகதானே அன்று…
ஒரு ஜீவன் வாடியது…

பெண் : இத்தனை காலம் சித்திரப் பெண்ணை…
பார்வை தேடியது…

ஆண் : ஒரு பாடல் பாடியது…
அதில் ஊடல் கூடியது…

—BGM—


Notes : Mazhai Kaala Megam Song Lyrics in Tamil. This Song from Vazhvey Maayam (1982). Song Lyrics penned by Vaali. மழைக் கால மேகம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading