வாழ்வே மாயம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ்கங்கை அமரன்வாழ்வே மாயம்

Vazhvey Maayam Song Lyrics in Tamil


ஆண் : வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்…
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்…
தரை மீது காணும் யாவும்…
தண்ணீரில் போடும் கோலம் நிலைக்காதம்மா…

ஆண் : யாரோடு யார் வந்தது…
நாம் போகும்போது யாரோடு யார் செல்வது…

ஆண் : வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்…

—BGM—

ஆண் : யார் யார்க்கு என்ன வேஷமோ…
இங்கே யார் யார்க்கு எந்த மேடையோ…
ஆடும் வரைக் கூட்டம் வரும்…
ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்…

ஆண் : தாயாலே வந்தது தீயாலே வெந்தது…
தாயாலே வந்தது தீயாலே வெந்தது…
மெய் என்று மேனியை யார் சொன்னது…

ஆண் : வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்…

—BGM—

ஆண் : பிறந்தாலும் பாலை ஊற்றுவார்…
இங்கே இறந்தாலும் பாலை ஊற்றுவார்…
உண்டாவது ரெண்டாலதான்…
ஊர்போவது நாலாலதான்…

ஆண் : கருவோடு வந்தது தெருவோடு போவது…
கருவோடு வந்தது தெருவோடு போவது…
மெய் என்று மேனியை யார் சொன்னது…

ஆண் : வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்…

—BGM—

ஆண் : நாடகம் விடும் நேரம்தான்…
உச்சக் காட்சி நடக்குதம்மா…

—BGM—

ஆண் : வேஷம் கலைக்கவும் ஒய்வு எடுக்கவும்…
வேலை நெருங்குதம்மா…

—BGM—

ஆண் : பாதைகள் பல மாறியே…
வந்த பயணம் முடியுதம்மா…
தாய் கொண்டு வந்ததை தாலாட்டி வைத்ததை…
நோய் கொண்டு போகும் நேரமம்மா…


Notes : Vazhvey Maayam Song Lyrics in Tamil. This Song from Vazhvey Maayam (1982). Song Lyrics penned by Vaali. வாழ்வே மாயம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading