Category Archives: என் தங்கச்சி படிச்சவ

என் தங்கச்சி படிச்சவ – En Thangachi Padichava (1988)

சொந்த சுமையை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கே.ஜே. யேசுதாஸ் & கே.எஸ். சித்ராகங்கை அமரன்என் தங்கச்சி படிச்சவ

Sondha Somaya Song Lyrics in Tamil


BGM

ஆண் : சொந்த சுமையை தூக்கி தூக்கி…
சோர்ந்து போனேன்
வந்த சுமையை தாங்கி தாங்கி…
சோகமானேன்…
தாயாக நானும் மாறி தாலாட்டு பாடுறேன்…
ஆராரிராரிரோ…

ஆண் : சொந்த சுமையை தூக்கி தூக்கி…
சோர்ந்து போனேன்…
வந்த சுமையை தாங்கி தாங்கி…
சோகமானேன்…

BGM

ஆண் : விலகாத சொந்தம் இருக்க…
தனியாக்கி போனாளே…
பிரிவாலே நானும் வாட…
வழிக்காட்டி போனாளே…

ஆண் : வெலகத்தான் நெனைக்கிறேன்…
வெலங்குதான் போட்டியே…
கலங்கித்தான் தவிக்கிறேன்…
கேள்விதான் கேட்டியே…

ஆண் : துன்பம் என்னென்ன வந்தாலென்ன…
சோகம் என் வீட்ட சூழ்ந்தாலென்னா…
ஒன்னோட ஆசய நெறவேத்தி காட்டுவேன்…

BGM

பெண் : எதிர்பார்த்த எல்லா கதையும் கனவாகக் கூடாது…
உனைத் தேடிப் போகும்போது வழி மாறக்கூடாது…
புயலிலும் மழையிலும் கொடி இது தாங்குமா…
இருட்டுல தவிக்கிறேன் விடிவுதான் தோணுமா…

பெண் : உன்ன எண்ணாத நேரமில்ல…
கண்ணா உன்னால தூக்கமில்ல…
காத்தோடு பாடுறேன் என் பாட்டு கேக்குதா…

ஆண் : சொந்த சுமையை தூக்கி தூக்கி…
சோர்ந்து போனேன்…
வந்த சுமையை தாங்கி தாங்கி…
சோகமானேன்…

பெண் : தாயாக நானும் மாறி தாலாட்டு பாடவா…
ஆராரிராரிரோ… ஆராரிராரிரோ… ஆராரிராரிரோ…


Notes : Sondha Somaya Song Lyrics in Tamil. This Song from En Thangachi Padichava (1988). Song Lyrics penned by Gangai Amaran. சொந்த சுமையை பாடல் வரிகள்.


சும்மா சும்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் & எஸ்.பி. சைலஜாகங்கை அமரன்என் தங்கச்சி படிச்சவ

Summa Summa Enna Paathu Song Lyrics in Tamil


BGM

ஆண் : சும்மா சும்மா என்ன பாத்து பாத்து…
கண்ணால இழுக்காதே…
அடி யம்மா யம்மா இந்த காள மனசு…
சும்மாவும் இருக்காதே…
நான் கற்பூரந்தான் என் முன்னாலதான்…
ஒரு காதல் நெருப்பு… ஹோய்…

பெண் : கண்ணா கண்ணா அட இப்போது எனக்கு…
கல்யாண வயசாச்சு…
அட உன்னாலத்தான் என் ஆச மனசு…
ஏதேதோ போலாச்சு…
நான் கற்பூரந்தான் என் முன்னாலதான்…
ஒரு காதல் நெருப்பு… ஹோய்…

ஆண் : சும்மா சும்மா என்ன பாத்து பாத்து…
கண்ணால இழுக்காதே… ஹே…

பெண் : அட உன்னாலத்தான் என் ஆச மனசு…
ஏதேதோ போலாச்சு…

BGM

ஆண் : பூவான மேனி…
பெண் : ம்ஹூம்…
ஆண் : நானிப்போ தேனீ…
பெண் : ம்ஹூம்…
ஆண் : தேனுண்ண நானும் வரலாமா… ஆஹா…

பெண் : நீ போடு தாலி…
ஆண் : ம்ஹூம்…
பெண் : கிடையாது வேலி…
ஆண் : ஆஹா…
பெண் : தேனள்ளி தாரேன் வா மாமா…

ஆண் : பாய் போட்டு படுத்தா தூக்கம் வராது… ஹா…
விடிஞ்சாலும் கூட ஏக்கம் விடாது…

பெண் : ஹேய்… நான் கூட மாமா…
உன் போல் தூக்கம் கெட்டு போனேனே…

ஆண் : ஏ… சும்மா சும்மா என்ன பாத்து பாத்து…
கண்ணால இழுக்காதே…
அடி யம்மா யம்மா இந்த காள மனசு…
சும்மாவும் இருக்காதே…

பெண் : கண்ணா கண்ணா அட இப்போது எனக்கு…
கல்யாண வயசாச்சு…
அட உன்னாலத் தான் ஏன் ஆச மனசு…
ஏதேதோ போலாச்சு…

BGM

பெண் : ஆளான நானு…
ஆண் : ம்ஹூம்…
பெண் : அழகான மானு…
ஆண் : ஆஹாஹ்…
பெண் : அரங்கேற நேரம் கேட்டேனே…

ஆண் : அதுக்காகத்தானே…
பெண் : ஓஹோ…
ஆண் : உன் மாமன் நானே…
பெண் : ஓஹோ…
ஆண் : அச்சாரம் இப்போ போட்டேனே…

பெண் : அல மேல தள்ளாடும் ஒரு தோணி…
அதுதானே பெண்ணோட இள மேனி…

ஆண் : ஹே… ஊர்கோலம் போகும் நாள…
பாத்து காத்து நின்னேனே…

பெண் : கண்ணா கண்ணா அட இப்போது எனக்கு…
கல்யாண வயசாச்சு…
அட உன்னாலத்தான் என் ஆச மனசு…
ஏதேதோ போலாச்சு…
நான் கற்பூரந்தான் என் முன்னாலதான்…
ஒரு காதல் நெருப்பு… ஹோய்…

ஆண் : சும்மா சும்மா என்ன பாத்து பாத்து…
கண்ணால இழுக்காதே…
அடி யம்மா யம்மா இந்த காள மனசு…
சும்மாவும் இருக்காதே…


Notes : Summa Summa Enna Paathu Song Lyrics in Tamil. This Song from En Thangachi Padichava (1988). Song Lyrics penned by Gangai Amaran. சும்மா சும்மா பாடல் வரிகள்.