சும்மா சும்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் & எஸ்.பி. சைலஜாகங்கை அமரன்என் தங்கச்சி படிச்சவ

Summa Summa Enna Paathu Song Lyrics in Tamil


BGM

ஆண் : சும்மா சும்மா என்ன பாத்து பாத்து…
கண்ணால இழுக்காதே…
அடி யம்மா யம்மா இந்த காள மனசு…
சும்மாவும் இருக்காதே…
நான் கற்பூரந்தான் என் முன்னாலதான்…
ஒரு காதல் நெருப்பு… ஹோய்…

பெண் : கண்ணா கண்ணா அட இப்போது எனக்கு…
கல்யாண வயசாச்சு…
அட உன்னாலத்தான் என் ஆச மனசு…
ஏதேதோ போலாச்சு…
நான் கற்பூரந்தான் என் முன்னாலதான்…
ஒரு காதல் நெருப்பு… ஹோய்…

ஆண் : சும்மா சும்மா என்ன பாத்து பாத்து…
கண்ணால இழுக்காதே… ஹே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அட உன்னாலத்தான் என் ஆச மனசு…
ஏதேதோ போலாச்சு…

BGM

ஆண் : பூவான மேனி…
பெண் : ம்ஹூம்…
ஆண் : நானிப்போ தேனீ…
பெண் : ம்ஹூம்…
ஆண் : தேனுண்ண நானும் வரலாமா… ஆஹா…

பெண் : நீ போடு தாலி…
ஆண் : ம்ஹூம்…
பெண் : கிடையாது வேலி…
ஆண் : ஆஹா…
பெண் : தேனள்ளி தாரேன் வா மாமா…

ஆண் : பாய் போட்டு படுத்தா தூக்கம் வராது… ஹா…
விடிஞ்சாலும் கூட ஏக்கம் விடாது…

பெண் : ஹேய்… நான் கூட மாமா…
உன் போல் தூக்கம் கெட்டு போனேனே…

ஆண் : ஏ… சும்மா சும்மா என்ன பாத்து பாத்து…
கண்ணால இழுக்காதே…
அடி யம்மா யம்மா இந்த காள மனசு…
சும்மாவும் இருக்காதே…

பெண் : கண்ணா கண்ணா அட இப்போது எனக்கு…
கல்யாண வயசாச்சு…
அட உன்னாலத் தான் ஏன் ஆச மனசு…
ஏதேதோ போலாச்சு…

BGM

பெண் : ஆளான நானு…
ஆண் : ம்ஹூம்…
பெண் : அழகான மானு…
ஆண் : ஆஹாஹ்…
பெண் : அரங்கேற நேரம் கேட்டேனே…

ஆண் : அதுக்காகத்தானே…
பெண் : ஓஹோ…
ஆண் : உன் மாமன் நானே…
பெண் : ஓஹோ…
ஆண் : அச்சாரம் இப்போ போட்டேனே…

பெண் : அல மேல தள்ளாடும் ஒரு தோணி…
அதுதானே பெண்ணோட இள மேனி…

ஆண் : ஹே… ஊர்கோலம் போகும் நாள…
பாத்து காத்து நின்னேனே…

பெண் : கண்ணா கண்ணா அட இப்போது எனக்கு…
கல்யாண வயசாச்சு…
அட உன்னாலத்தான் என் ஆச மனசு…
ஏதேதோ போலாச்சு…
நான் கற்பூரந்தான் என் முன்னாலதான்…
ஒரு காதல் நெருப்பு… ஹோய்…

ஆண் : சும்மா சும்மா என்ன பாத்து பாத்து…
கண்ணால இழுக்காதே…
அடி யம்மா யம்மா இந்த காள மனசு…
சும்மாவும் இருக்காதே…


Notes : Summa Summa Enna Paathu Song Lyrics in Tamil. This Song from En Thangachi Padichava (1988). Song Lyrics penned by Gangai Amaran. சும்மா சும்மா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading