ச‌ம்போ சிவ‌ ச‌ம்போ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எம்.எஸ். விஸ்வநாதன்எம்.எஸ். விஸ்வநாதன்நினைத்தாலே இனிக்கும் (1979)

Sambo Siva Sambo Song Lyrics in Tamil


BGM

ஆண் : ச‌ம்போ சிவ‌ ச‌ம்போ சிவ‌ ச‌ம்போ சிவ‌ ச‌ம்போ…

ஆண் : ஜ‌க‌மே த‌ந்திர‌ம் சுக‌மே ம‌ந்திர‌ம்…
ம‌னித‌ன் எந்திர‌ம் சிவ‌ ச‌ம்போ… ஓஓ…
நெஞ்ச‌ம் ஆல‌ய‌ம் நினைவே தேவ‌தை…
தின‌மும் நாட‌க‌ம் சிவ‌ ச‌ம்போ…

ஆண் : ஜ‌க‌மே த‌ந்திர‌ம் சுக‌மே ம‌ந்திர‌ம்…
ம‌னித‌ன் எந்திர‌ம் சிவ‌ ச‌ம்போ… ஓஓ…
நெஞ்ச‌ம் ஆல‌ய‌ம் நினைவே தேவ‌தை…
தின‌மும் நாட‌க‌ம் சிவ‌ ச‌ம்போ…

BGM

ஆண் : ம‌னிதா உன் ஜென்ம‌த்தில் எந்நாளும் ந‌ன் நாளாம்…
ம‌றுநாளை எண்ணாதே இந்நாளே பொன் நாளாம்…
ப‌ல்லாக்கைத் தூக்காதே ப‌ல்லாக்கில் நீ ஏறு…
உன் ஆயுள் தொண்ணூறு எந்நாளும் பதினாறு…

BGM

ஆண் : ஜ‌க‌மே த‌ந்திர‌ம் சுக‌மே ம‌ந்திர‌ம்…
ம‌னித‌ன் எந்திர‌ம் சிவ‌ ச‌ம்போ… ஓஓ…
நெஞ்ச‌ம் ஆல‌ய‌ம் நினைவே தேவ‌தை…
தின‌மும் நாட‌க‌ம் சிவ‌ ச‌ம்போ…

BGM

ஆண் : அப்பாவும் தாத்தாவும் வ‌ந்தார்க‌ள் போனார்க‌ள்…
த‌ப்பென்ன‌ ச‌ரியென்ன‌ எப்போதும் விளையாடு…
அப்பாவி என்பார்க‌ள் த‌ப்பாக‌ நினைக்காதே…
எப்பாதை போனாலும் இன்ப‌த்தைத் த‌ள்ளாதே… ஏஏ…

ஆண் : க‌ல்லை நீ தின்றாலும் செறிக்கின்ற‌ நாளின்று…
கால‌ங்க‌ள் போனாலே தின்னாதே என்பார்க‌ள்…

ஆண் : ஆ… ம‌துவுண்டு பெண்ணுண்டு சோறுண்டு…
சுக‌முண்டு ம‌ன‌முண்டு என்றாலே…
சொர்க்க‌த்தில் இட‌ம் உண்டு…

BGM

ஆண் : ஜ‌க‌மே த‌ந்திர‌ம் சுக‌மே ம‌ந்திர‌ம்…
ம‌னித‌ன் எந்திர‌ம் சிவ‌ ச‌ம்போ… ஓஓ…
நெஞ்ச‌ம் ஆல‌ய‌ம் நினைவே தேவ‌தை…
தின‌மும் நாட‌க‌ம் சிவ‌ ச‌ம்போ…

ஆண் : லலலலலில லலலலில லலலலில…
சிவ‌ ச‌ம்போ…
லலலலலில லலலலில லலலலில…
சிவ‌ ச‌ம்போ…

BGM


Notes : Sambo Siva Sambo Song Lyrics in Tamil. This Song from Ninaithale Inikkum (1979). Song Lyrics penned by Kannadasan. ச‌ம்போ சிவ‌ ச‌ம்போ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading