Category Archives: மாப்பிள்ளை

ennoda-raasi-nalla-raasi-song-lyrics-in-tamil

என்னோட ராசி நல்ல ராசி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன்இளையராஜாமாப்பிள்ளை

Ennoda Raasi Nalla Raasi Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே… என்னோட ராசி நல்ல ராசி…
அது எப்போதும் பெரியவங்க ஆசி…
அத்தை மக ராசி…
அதை ஊர் முழுக்க பேசி…
கொட்டு மேளம் கொட்டி வாசி…

ஆண் : அத்தை மக ராசி…
அதை ஊர் முழுக்க பேசி…
கொட்டு மேளம் கொட்டி வாசி…

ஆண் : என்னோட ராசி நல்ல ராசி…
அது எப்போதும் பெரியவங்க ஆசி…

BGM

ஆண் : ராசி உள்ள பக்கம்…
தினம் வெற்றி வந்து சேரும்…
காசு உள்ள பக்கம்…
வெறும் திமிரு வந்து சேரும்…

ஆண் : ராசி உள்ள பக்கம்…
தினம் வெற்றி வந்து சேரும்…
காசு உள்ள பக்கம்…
வெறும் திமிரு வந்து சேரும்…

ஆண் : நேரம் கூடும் போது…
இந்த ஊரும் உன்னை பாடும்…
நெஞ்சுக்குள்ள நிம்மதி வரும்…

ஆண் : ஆளு அன்பு சேனை…
அட அத்தனையும் கூடும்…
விட்டுப் போன சொந்தமும் வரும்…

ஆண் : கோடியிலே ஒருத்தனுக்கு…
ராசி உச்சத்திலே…
எந்த குறைகளுமே அவன்கிட்டதான்…
தேடி வந்ததில்லே…

ஆண் : எது வந்தாலும் போனாலும்…
ஒட்டுற மண்ணுதான் ஒட்டுமடா…

ஆண் : என்னோட ராசி நல்ல ராசி…
அது எப்போதும் பெரியவங்க ஆசி…
அத்தை மக ராசி…
அதை ஊர் முழுக்க பேசி…
கொட்டு மேளம் கொட்டி வாசி…

ஆண் : என்னோட ராசி நல்ல ராசி…
அது எப்போதும் பெரியவங்க ஆசி…

BGM

குழு : மாப்பிள்ளைனா மாப்பிள்ளை…
வாசக் கருவேப்பில்லை…
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

குழு : மாப்பிள்ளைனா மாப்பிள்ளை…
வாசக் கருவேப்பில்லை…
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

குழு : பேய் பிடிச்ச பேர்கள…
ஓட்டி விடும் வேப்பில்லை…
ஹோய் ஹோய் ஹோய்…

குழு : பேய் பிடிச்ச பேர்கள…
ஓட்டி விடும் வேப்பில்லை…
ஹோய் ஹோய் ஹோய்…

குழு : அவர் சிரிப்பில… ஹோய்…
ஒரு வெறுப்பில்ல…
அவர் ஸ்டைலத்தான்… ஹேய்…
யாரு ரசிக்கல…

குழு : ஹேய் ஹொய்யா தன்னா…
ஹொய்யா தன்னா…
தன்னா தன்னானா…

ஆண் : ஊரு வம்பு பேசும்…
அட உண்மை சொல்ல கூசும்…
போடும் நூறு வேஷம்…
தினம் பொய்ய சொல்லி ஏசும்…

ஆண் : ஊரு வம்பு பேசும்…
அட உண்மை சொல்ல கூசும்…
போடும் நூறு வேஷம்…
தினம் பொய்ய சொல்லி ஏசும்…

ஆண் : ஜில்லா டாங்கு டாங்கு…
அட என்ன உங்க போங்கு…
ஏண்டியம்மா இந்த ராங்கு…

ஆண் : நல்லா இல்ல போக்கு…
நான் சொன்னேன் ஒரு வாக்கு…
வெத்தலைக்குள் கொட்டப் பாக்கு…

ஆண் : ராணியம்மா மனசு வச்சா…
நன்மை உண்டாகும்…
நல்ல பேச்ச கேக்கலைன்னா…
வீடு ரெண்டாகும்…

ஆண் : அட அத்தாச்சி பித்தாச்சி…
அத்தனை வித்தையும் சொல்லணுமா…

ஆண் : என்னோட ராசி நல்ல ராசி…
அது எப்போதும் பெரியவங்க ஆசி…
அத்தை மக ராசி…
அதை ஊர் முழுக்க பேசி…
கொட்டு மேளம் கொட்டி வாசி…

ஆண் : அத்தை மக ராசி…
அதை ஊர் முழுக்க பேசி…
கொட்டு மேளம் கொட்டி வாசி…

ஆண் : என்னோட ராசி நல்ல ராசி…
அது எப்போதும் பெரியவங்க ஆசி…
என்னோட ராசி நல்ல ராசி…
அது எப்போதும் பெரியவங்க ஆசி…


Notes : Ennoda Raasi Nalla Raasi Song Lyrics in Tamil. This Song from Mappillai (1989). Song Lyrics penned by Gangai Amaran. என்னோட ராசி நல்ல ராசி பாடல் வரிகள்.


என்னதான் சுகமோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாமாப்பிள்ளை

Ennathaan Sugamo Song Lyrics in Tamil


பெண் : என்னதான் சுகமோ நெஞ்சிலே…
இதுதான் வளரும் அன்பிலே…

ஆண் : ராகங்கள் நீ பாடி வா…
பண்பாடும் மோகங்கள் நீ காணவா…
எந்நாளும் காதல் உறவே…

ஆண் : என்னதான் சுகமோ நெஞ்சிலே…
இதுதான் வளரும் அன்பிலே…

BGM

பெண் : பூவோடு வண்டு…
புது மோகம் கொண்டு…
சொல்கின்ற வண்ணங்கள் நீ சொல்லத்தான்…

ஆண் : நான் சொல்லும்போது…
இரு கண்கள் மூடி…
எழுதாத எண்ணங்கள் நீ சொல்லத்தான்…

பெண் : இன்பம் வாழும்…
உந்தன் நெஞ்சம்…

ஆண் : தீபம் ஏற்றும்…
காதல் ராணி…

பெண் : சிந்தாத முத்துக்களை…
நான் சேர்க்கும் நேரம் இது…
காதல் உறவே…

பெண் : என்னதான் சுகமோ நெஞ்சிலே…
இதுதான் வளரும் அன்பிலே…

BGM

ஆண் : தீராத மோகம்…
நான் கொண்ட நேரம்…
தேனாக நீ வந்து சீராட்டதான்…

பெண் : காணாத வாழ்வு…
நீ தந்த வேலை…
பூமாலை நீ சூடி பாராட்டத்தான்…

ஆண் : நீ என் ராணி…
நாந்தான் தேனீ…

பெண் : நீ என் ராஜா…
நான் என் ரோஜா…

ஆண் : தெய்வீக பந்தத்திலே…
நான் கண்ட சொர்க்கம் இது…
காதல் உறவே…

ஆண் : என்னதான் சுகமோ நெஞ்சிலே…
இதுதான் வளரும் அன்பிலே…

பெண் : ராகங்கள் நீ பாடி வா…
பண்பாடும் மோகங்கள் நீ காணவா…
எந்நாளும் காதல் உறவே…

பெண் : என்னதான் சுகமோ நெஞ்சிலே…

ஆண் : இதுதான் வளரும் அன்பிலே…


Notes : Ennathaan Sugamo Song Lyrics in Tamil. This Song from Mappillai (1989). Song Lyrics penned by Panchu Arunachalam. என்னதான் சுகமோ பாடல் வரிகள்.


மானின் இரு கண்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி இளையராஜாமாப்பிள்ளை

Maanin Iru Kangal Song Lyrics in Tamil


BGM

குழு : ஜனக்கு ஜனக்கு ஜம்ஜம்…
ஜனக்கு ஜனக்கு ஜம்ஜம் ஜான்…
ஜனக்கு ஜனக்கு ஜம்ஜம்…
ஜனக்கு ஜனக்கு ஜம்ஜம் ஜான்…

BGM

ஆண் : மானின் இரு கண்கள் கொண்ட…
மானே மானே…
தேனின் சுவை கன்னம் கொண்ட…
தேனே தேனே…

ஆண் : மானின் இரு கண்கள் கொண்ட…
மானே மானே…
தேனின் சுவை கன்னம் கொண்ட…
தேனே தேனே…

பெண் : உள்ளதெல்லாம் அள்ளித்தரவா வாவா…
வஞ்சி என்றும் வள்ளல் அல்லவா…
காதல் மல்லிகை வண்டாட்டம்தான்…
போடு நீ கொண்டாட்டம்தான்…

ஆண் : மானின் இரு கண்கள் கொண்ட…
மானே மானே…
தேனின் சுவை கன்னம் கொண்ட…
தேனே தேனே…

பெண் : நானா நா நா நா…
நா நன்னா நா நானா நா…
நா நா நா நன்னா நா…

BGM

ஆண் : முக்குளித்து முத்தெடுத்து…
சொக்கத் தங்க நூலெடுத்து…
வக்கனையாய் நான் தொடுத்து…
வண்ண மொழி பெண்ணுக்கென காத்திருக்க…

பெண் : பொய்குழலில் பூ முடித்து…
மங்களமாய் பொட்டு வைத்து…
மெய் அணைக்க கை அணைக்க…
மன்னவனின் நல் வரவை பார்த்திருக்க…

ஆண் : இன்னும் ஒரு ஏக்கம் என்ன…
என்னைத் தொடக் கூடாதா…

பெண் : உன்னைத் தொட தேனும் பாலும்…
வெள்ளம் என ஓடாதா…

ஆண் : முன்னழகும் பின்னழகும் ஆட…
இளமையொரு முத்திரையை வைப்பதற்கு வாட…
மயக்கும் இள…

ஆண் : மானின் இரு கண்கள் கொண்ட…
மானே மானே…
தேனின் சுவை கன்னம் கொண்ட…
தேனே தேனே…

பெண் : சூசூசூ சூசூ சூசூசூ…
லலலல லலல லால லா…

BGM

பெண் : ஊசி இலை காடிருக்க…
உச்சி மலை மேடிருக்க…
பச்சைக் கிளி கூடிருக்க…
பக்கம் வர வெட்கம் என்ன மாமனுக்கு…

ஆண் : புல்வெளியில் மெத்தையிட்டு…
மெத்தையிலே உன்னையிட்டு…
சத்தமிட்டு முத்தமிட…
உத்தரவு இட்டுவிடு நீ எனக்கு…

பெண் : அந்திப் பகல் மோகம் வந்து…
அங்கும் இங்கும் போராட…

ஆண் : எந்தப் புறம் காணும் போதும்…
அந்தப் புறம் போலாக…

பெண் : செங்கரும்பு சாறெடுக்கதானே…
உனக்கு ஒரு சம்மதத்தை தந்துவிட்டேன் நானே…

ஆண் : மயக்கும் இள…

ஆண் : மானின் இரு கண்கள் கொண்ட…
மானே மானே…
தேனின் சுவை கன்னம் கொண்ட…
தேனே தேனே…

ஆண் : மானின் இரு கண்கள் கொண்ட…
மானே மானே…
தேனின் சுவை கன்னம் கொண்ட…
தேனே தேனே…

பெண் : உள்ளதெல்லாம் அள்ளித்தரவா வாவா…
வஞ்சி என்றும் வள்ளல் அல்லவா…
காதல் மல்லிகை வண்டாட்டம்தான்…
போடு நீ கொண்டாட்டம்தான்…

ஆண் : மானின் இரு கண்கள் கொண்ட…
மானே மானே…
தேனின் சுவை கன்னம் கொண்ட…
தேனே தேனே…

பெண் : நா நா நா நன்னா நா…
லலலல லலல லால லா…


Notes : Maanin Iru Kangal Song Lyrics in Tamil. This Song from Mappillai (1989). Song Lyrics penned by Vaali. மானின் இரு கண்கள் பாடல் வரிகள்.