மானின் இரு கண்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி இளையராஜாமாப்பிள்ளை

Maanin Iru Kangal Song Lyrics in Tamil


—BGM—

குழு : ஜனக்கு ஜனக்கு ஜம்ஜம்…
ஜனக்கு ஜனக்கு ஜம்ஜம் ஜான்…
ஜனக்கு ஜனக்கு ஜம்ஜம்…
ஜனக்கு ஜனக்கு ஜம்ஜம் ஜான்…

—BGM—

ஆண் : மானின் இரு கண்கள் கொண்ட…
மானே மானே…
தேனின் சுவை கன்னம் கொண்ட…
தேனே தேனே…

ஆண் : மானின் இரு கண்கள் கொண்ட…
மானே மானே…
தேனின் சுவை கன்னம் கொண்ட…
தேனே தேனே…

பெண் : உள்ளதெல்லாம் அள்ளித்தரவா வாவா…
வஞ்சி என்றும் வள்ளல் அல்லவா…
காதல் மல்லிகை வண்டாட்டம்தான்…
போடு நீ கொண்டாட்டம்தான்…

ஆண் : மானின் இரு கண்கள் கொண்ட…
மானே மானே…
தேனின் சுவை கன்னம் கொண்ட…
தேனே தேனே…

பெண் : நானா நா நா நா…
நா நன்னா நா நானா நா…
நா நா நா நன்னா நா…

—BGM—

ஆண் : முக்குளித்து முத்தெடுத்து…
சொக்கத் தங்க நூலெடுத்து…
வக்கனையாய் நான் தொடுத்து…
வண்ண மொழி பெண்ணுக்கென காத்திருக்க…

பெண் : பொய்குழலில் பூ முடித்து…
மங்களமாய் பொட்டு வைத்து…
மெய் அணைக்க கை அணைக்க…
மன்னவனின் நல் வரவை பார்த்திருக்க…

ஆண் : இன்னும் ஒரு ஏக்கம் என்ன…
என்னைத் தொடக் கூடாதா…

பெண் : உன்னைத் தொட தேனும் பாலும்…
வெள்ளம் என ஓடாதா…

ஆண் : முன்னழகும் பின்னழகும் ஆட…
இளமையொரு முத்திரையை வைப்பதற்கு வாட…
மயக்கும் இள…

ஆண் : மானின் இரு கண்கள் கொண்ட…
மானே மானே…
தேனின் சுவை கன்னம் கொண்ட…
தேனே தேனே…

பெண் : சூசூசூ சூசூ சூசூசூ…
லலலல லலல லால லா…

—BGM—

பெண் : ஊசி இலை காடிருக்க…
உச்சி மலை மேடிருக்க…
பச்சைக் கிளி கூடிருக்க…
பக்கம் வர வெட்கம் என்ன மாமனுக்கு…

ஆண் : புல்வெளியில் மெத்தையிட்டு…
மெத்தையிலே உன்னையிட்டு…
சத்தமிட்டு முத்தமிட…
உத்தரவு இட்டுவிடு நீ எனக்கு…

பெண் : அந்திப் பகல் மோகம் வந்து…
அங்கும் இங்கும் போராட…

ஆண் : எந்தப் புறம் காணும் போதும்…
அந்தப் புறம் போலாக…

பெண் : செங்கரும்பு சாறெடுக்கதானே…
உனக்கு ஒரு சம்மதத்தை தந்துவிட்டேன் நானே…

ஆண் : மயக்கும் இள…

ஆண் : மானின் இரு கண்கள் கொண்ட…
மானே மானே…
தேனின் சுவை கன்னம் கொண்ட…
தேனே தேனே…

ஆண் : மானின் இரு கண்கள் கொண்ட…
மானே மானே…
தேனின் சுவை கன்னம் கொண்ட…
தேனே தேனே…

பெண் : உள்ளதெல்லாம் அள்ளித்தரவா வாவா…
வஞ்சி என்றும் வள்ளல் அல்லவா…
காதல் மல்லிகை வண்டாட்டம்தான்…
போடு நீ கொண்டாட்டம்தான்…

ஆண் : மானின் இரு கண்கள் கொண்ட…
மானே மானே…
தேனின் சுவை கன்னம் கொண்ட…
தேனே தேனே…

பெண் : நா நா நா நன்னா நா…
லலலல லலல லால லா…


Notes : Maanin Iru Kangal Song Lyrics in Tamil. This Song from Mappillai (1989). Song Lyrics penned by Vaali. மானின் இரு கண்கள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading