கண்ணுக்குள் ஏதோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்விஜய் யேசுதாஸ் & ரீட்டாடி. இமான்திருவிளையாடல் ஆரம்பம்

Kannukkul Yetho Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ…
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே…
நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ…
காலடி சத்தம் ஒன்று கேட்கிறதே…

ஆண் : உன் உயிர் வந்து…
எந்தன் உயிர் தொட்டது…
என் உலகமே உன்னால்…
மாறிவிட்டது…

பெண் : கண்ணே சொல் இதுதான்…
காதல் என்பதா…

பெண் : கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ…
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே…

—BGM—

ஆண் : காதல் வந்து கெடுத்த பின்…
கவிதைகள் படிக்கிறேன்…

பெண் : தோழிகளை தவிர்கிறேன்…
உன்னை தேடி வருகிறேன்…

ஆண் : தாய் தந்தை இருந்தும் ஏன்…
தனிமையில் தவிக்கிறேன்…
சொந்தமாய் நீ வா பிழைக்கிறேன்…

பெண் : எந்தன் வீட்டு சொந்தம் என்று…
நேற்று வரை நினைத்தவள்…
உன் வீட்டில் குடி வர நினைக்கிறேன்…

ஆண் : உன்னை காதலித்த கணமே…
உனக்குள் வந்தேன்…

பெண் : கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ…
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே…

—BGM—

ஆண் : கனவிலே நீயும் வந்தால்…
புகைப்படம் எடுக்கிறேன்…

பெண் : கனவுகள் இங்கு இல்லை…
கண் விழித்து நினைக்கிறேன்…

ஆண் : பெண்ணே நானோ உன்னை என்றும்…
மறப்பது இல்லையடி…
மறந்தால்தானே நினைத்திட…

பெண் : அன்பே நானோ இருக்கையில்…
உந்தன் சுவாசம் தீண்டட்டும்…
உடனே நானும் பிறந்திட…

ஆண் : உண்மை காதல்…
சாதல் இல்லையடி…

ஆண் : கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ…
கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே…

பெண் : நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ…
காலடி சத்தம் ஒன்று கேட்கிறதே…

ஆண் : உன் உயிர் வந்து…
எந்தன் உயிர் தொட்டது…
என் உலகமே உன்னால்…
மாறிவிட்டது…

பெண் : கண்ணே சொல் இதுதான்…
காதல் என்பதா…

—BGM—


Notes : Kannukkul Yetho Song Lyrics in Tamil. This Song from Thiruvilaiyaadal Aarambam (2006). Song Lyrics penned by Na. Muthukumar. கண்ணுக்குள் ஏதோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading