விழிகளில் விழிகளில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஹரிஷ் ராகவேந்திராடி. இமான்திருவிளையாடல் ஆரம்பம்

Vizhigalil Vizhigalil Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாய்…
எனக்குள் என்னையே ஒளித்து வைத்தாய்…
சின்னஞ்சிறு சிரிப்பினில் சிதறடித்தாய்…
சிதறிய இதயத்தை திருடி கொண்டாய்…

ஆண் : யார் என்று நான் யார் என்று…
அடி மறந்தே போனதே…
உன்பேரை கூட தெரியாமல்…
மனம் உன்னை சுற்றுதே…

ஆண் : ஒரு நாள் வரைதான் என நினைத்தேன்…
பல நாள் தொடரும் வலி கொடுத்தாய்…
காதல் என் காதில் சொல்வாய்…
காதல் என் காதில் சொல்வாய்…

ஆண் : விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்…
எனக்குள் என்னையே ஒளித்து வைத்தாய்…
சின்னஞ்சிறு சிரிப்பினில் சிதறடித்தாய்…
சிதறிய இதயத்தை திருடி கொண்டாய்…

—BGM—

ஆண் : சாலையில் நீ போகையில…
மரமெல்லாம் கூடி முணுமுணுக்கும்…
காலையில் உன்னை பார்ப்பதற்கு…
சூரியன் கிழக்கில் தவமிருக்கும்…

ஆண் : யாரடி நீ யாரடி…
அதிருதே என் ஆறடி…

ஆண் : ஒரு கார்பன் கார்டு என…
கண்ணை வைத்து காதலை எழுதி விட்டாய்…
அந்த காதலை நானும்…
வாசிக்கும் முன்னே எங்கே ஓடுகிறாய்…

ஆண் : போகாதே அடி போகாதே…
என் சுடிதார் சொர்கமே…
நீ போனாலே நீ போனாலே…
என் வாழ்நாள் சொற்பமே…

ஆண் : விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்…
எனக்குள் என்னையே ஒளித்து வைத்தாய்…
சின்னஞ்சிறு சிரிப்பினில் சிதறடித்தாய்…
சிதறிய இதயத்தை திருடி கொண்டாய்…

—BGM—

ஆண் : பூவிலே செய்த சிலை அல்லவா…
பூமியே உனக்கு விலையல்லவா…
தேவதை உந்தன் அருகினிலே…
வாழ்வதே எனக்கு வரமல்லவா…

ஆண் : மேகமாய் அங்கு நீயடி…
தாகமாய் இங்கு நானடி…
உன் பார்வை தூறலில் விழுந்தேன்…
அதனால் காதலும் துளிர்த்ததடி…

ஆண் : அந்த காதலை நானும்…
மறுநொடி பார்த்தேன்…
மரமாய் அசையுதடி…

ஆண் : இன்றோடு அடி இன்றோடு…
என் கவலை முடிந்ததே…
ஒரு பெண் கோழி நீ கூவித்தான்…
என் பொழுதும் விடிந்ததே…

—BGM—

ஆண் : எனக்குள் என்னையே ஒளித்து வைத்தாய்…
சின்னஞ்சிறு சிரிப்பினில் சிதறடித்தாய்…
சிதறிய இதயத்தை திருடி கொண்டாய்…

ஆண் : காதல் என் காதில் சொல்வாய்…
காதல் என் காதில் சொல்வாய்…

—BGM—


Notes : Vizhigalil Vizhigalil Song Lyrics in Tamil. This Song from Thiruvilayadal Aarambam (2006). Song Lyrics penned by Viveka. விழிகளில் விழிகளில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading