நிலவே நிலவே சரிகம பதநி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாசன்ஹரிஹரன் & சுஜாதா மோகன்பரணிபெரியண்ணா

Nilave Nilave Sarigama Pathani Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நிலவே நிலவே…
சரிகம பதநி பாடு…
என் கனவைத் திருடி…
பல்லவி வரியாய்ப் போடு…

ஆண் : நிலவே நிலவே…
சரிகம பதநி பாடு…
என் கனவைத் திருடி…
பல்லவி வரியாய்ப் போடு…

ஆண் : உன்னை ஒவ்வொரு இரவிலும் தேடுகிறேன்…
நீ தேய்கின்ற நாளில் வாடுகிறேன்…
உன் மௌனத்தில் ஆயிரம் பாட்டு…
நான் மயங்குகிறேன் அதைக் கேட்டு…

ஆண் : நீ மாலையில் வருவதும்…
காலையில் மறைவதும்…
என்னடி விளையாட்டு…

ஆண் : நிலவே நிலவே…
சரிகம பதநி பாடு…
என் கனவைத் திருடி…
பல்லவி வரியாய்ப் போடு…

—BGM—

பெண் : காதல் பேசும்…
வயதுக்கு வந்த நிலா…
உன்னை நெஞ்சைத் தீண்ட
அனுமதி தந்த நிலா…
தன் மனதைச் சொல்லிவிட
தயங்குது தங்க நிலா…

ஆண் : அட ஆதாம் ஏவாள்…
பார்த்தது பழைய நிலா…
என் ஆசை நெஞ்சை…
ஈர்த்தது புதிய நிலா…

பெண் : தன் கனவுகளை…
மெல்ல முனகும் நிலா…

ஆண் : என் ஆயுளையே…
அள்ளிப் பருகும் நிலா…

பெண் : பகலுடன் இரவும்…
பதினெட்டு வருடம்…
வளர்ந்தது இந்த நிலா…
இது உனக்கே சொந்த நிலா…

ஆண் : நிலவே நிலவே…
சரிகம பதநி பாடு…
என் கனவைத் திருடி…
பல்லவி வரியாய்ப் போடு…

—BGM—

ஆண் : கண்ணில் கண்ணில்…
கனவுகள் பூசுகிறாய்…
என் காதல் நெஞ்சில்…
நினைவுகள் வீசுகிறாய்…
தொட தொட நான் வருகையிலே…
தொலைவினில் ஓடுகிறாய்…

பெண் : அட நானும் உன்னை…
பார்ப்பது தெரியாதா…
நான் பேசும் வார்த்தை…
உனக்கது புரியாதா…

ஆண் : அடி நான் இருந்தேன்…
உன் ஞாபகமாய்…

பெண் : அதை சொல்லுகிறேன்…
நான் சூசகமாய்…

ஆண் : அருகில் நானும்…
தொலைவில் நீயும்…
இருந்தால் காதல் எது…
மனம் கேட்கும் கேள்வி இது…

ஆண் : நிலவே நிலவே…
சரிகம பதநி பாடு…
என் கனவைத் திருடி…
பல்லவி வரியாய்ப் போடு…

ஆண் : நிலவே நிலவே…
சரிகம பதநி பாடு…
என் கனவைத் திருடி…
பல்லவி வரியாய்ப் போடு…

ஆண் : உன்னை ஒவ்வொரு இரவிலும் தேடுகிறேன்…
நீ தேய்கின்ற நாளில் வாடுகிறேன்…
உன் மௌனத்தில் ஆயிரம் பாட்டு…
நான் மயங்குகிறேன் அதைக் கேட்டு…

ஆண் : நீ மாலையில் வருவதும்…
காலையில் மறைவதும்…
என்னடி விளையாட்டு…

ஆண் : நிலவே நிலவே…
சரிகம பதநி பாடு…
என் கனவைத் திருடி…
பல்லவி வரியாய்ப் போடு…


Notes : Nilave Nilave Sarigama Pathani Song Lyrics in Tamil. This Song from Periyanna (1999). Song Lyrics penned by Vasan. நிலவே நிலவே சரிகம பதநி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading