பொள்ளாச்சி மல ரோட்டுல

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்மலேசியா வாசுதேவன், சுவர்ணலதா & எஸ்.என். சுரேந்தர்பரணிபெரியண்ணா

Pollachi Malay Rotula Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பொள்ளாச்சி மல ரோட்டுல… ஹோய்…
ஒரு பொண்ண பாரு சோக்குல…
அட நான்தான் உனக்கு மாப்பிள்ளை… ஹோய்…
இதைக் கேட்டு பாரு ஊருல…

ஆண் : என்னாட்டம் ஒரு ஆண் பிள்ளை…
எங்கேயும் இல்லை…
சொன்னாக்க நீ கேட்டுக்க…
பொய் ஏதுமில்லை…

ஆண் : அட என்னாட்டம் ஒரு ஆண்பிள்ளை…
எங்கேயும் இல்லை…
சொன்னாக்க நீ கேட்டுக்க…
பொய் ஏதுமில்லை…

பெண் : பொள்ளாச்சி மல ரோட்டுல… ஹோய்…
ஒரு பொண்ண பாரு சோக்குல…

—BGM—

பெண் : சிம்ரன் போல ஸ்டைலாதான்…
இந்த பொண்ணு இருக்கா…
சின்ன சிரிப்பில் ஐஸ்வர்யா…
போலதான் இருக்கா…

ஆண் : மன்மதன் போல் மாப்பிள்ளை…
ரொம்ப அழகுதான்…
துள்ளும் ஸ்டைலை பார்த்தாக்க…
சச்சின் டெண்டுல்தான்…

பெண் : பொண்ணுகிட்ட மாப்பிள்ளை…
சலாம் போடு வாரே…

ஆண் : சாந்தி முகூர்த்தம் ஆகட்டும்…
பையன் வீரம் பாரு…

பெண் : அண்ணன் அழகில் எண்ணம்போல…
புள்ள பொறக்கணும்…
அட மின்னும் நெருப்பு வைரம் போல…
பெயரும் எடுக்கணும்…

ஆண் : கருத்த வண்ணம் வெளுத்த உள்ளம்…
கொடுத்த கை சிகப்புடா…
தவறு செய்யும் மனுசருக்கு…
நம்ம அண்ணன் நெருப்புடா…

பெண் : பொள்ளாச்சி மல ரோட்டுல… ஹோய்…
ஒரு பொண்ண பாரு சோக்குல…

—BGM—

குழு : மாப்பிள்ளை மாப்பிள்ளை…
மணக்கப்போகும் மாப்பிள்ளை…

பெண் : ம்ஹும்ம்… ஆஹஹா…
விவரமான ஆம்பள…

குழு : மாவிலைத் தோரணம் கட்டுங்கட…
மங்கள மேளத்த கொட்டுங்கடா…

பெண் : டும் டும் டும்… ஹேய்…

பெண் : முத்து ரத்தின பல்லாக்கு…
முன்னே போகுதே…
மொத்த சனமும் ஊர்கோலம்…
பின்னே போகுதே…

ஆண் : தார தம்பட்ட ஓயாம…
கொட்டி முழங்குதே…
தைய தந்தன ஆட்டத்தில்…
பூமி குலுங்குதே…

பெண் : எங்கும் வாணவேடிக்கை…
இங்கே கொஞ்சம் பாரு…

ஆண் : சொர்க்கம் போல ஆயாச்சு…
இப்போ நம்ம ஊரு…

பெண் : தங்க சரிகை சேலை கட்டுன…
பொண்ணு ஜொலிக்கிறா…

ஆண் : புது வெள்ளி சரிகை வேட்டி சட்டையில்…
பையன் அசத்துறான்…

பெண் : மனசுக்குள்ள எதை எதையோ…
நினைச்சு பொண்ணு சிரிக்கிறா…

ஆண் : மௌனமாக பார்த்து பார்த்து…
நம்ம பையன் ரசிக்கிறான்…

ஆண் : பொள்ளாச்சி மல ரோட்டுல… ஹோய்…
என் பொண்ண பாரு சோக்குல… ஹான்…
அட நீதான் எனக்கு மாப்பிள்ளை… ஹோய்…
ஹோய் இதைக் கேட்டு பாரு ஊருல… ஹான்…

ஆண் : இவளாட்டம் ஒரு பெண்பிள்ளை…
எங்கேயும் இல்லை…
சொன்னாக்க நீ கேட்டுக்க…
பொய் ஏதுமில்லை…

ஆண் : அட இவனாட்டம் ஒரு ஆண்பிள்ளை…
எங்கேயும் இல்லை…
சொன்னாக்க நீ கேட்டுக்க…
பொய் ஏதுமில்லை…

குழு : பொள்ளாச்சி மல ரோட்டுல…
எங்க பொண்ண பாரு சோக்குல…

—BGM—


Notes : Pollachi Malay Rotula Song Lyrics in Tamil. This Song from Periyanna (1999). Song Lyrics penned by Pulamaipithan. பொள்ளாச்சி மல ரோட்டுல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading