Category Archives: நினைவெல்லாம் நித்யா

Pani Vilum Malar Vanam Song Lyrics in Tamil

பனிவிழும் மலர்வனம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாநினைவெல்லாம் நித்யா

Pani Vilum Malar Vanam Song Lyrics in Tamil


BGM

ஆண் : பனிவிழும் மலர்வனம்…
உன் பார்வை ஒரு வரம்…

BGM

ஆண் : பனிவிழும் மலர்வனம்…
உன் பார்வை ஒரு வரம்…

BGM

ஆண் : இனி வரும் முனிவரும்…
தடுமாறும் கனிமரம்…

BGM

ஆண் : பனிவிழும் மலர்வனம்…
உன் பார்வை ஒரு வரம்…
பனிவிழும் மலர்வனம்…
உன் பார்வை ஒரு வரம்…

ஆண் : இனி வரும் முனிவரும்…
தடுமாறும் கனிமரம்…
இனி வரும் முனிவரும்…
தடுமாறும் கனிமரம்…

ஆண் : பனிவிழும் மலர்வனம்…
உன் பார்வை ஒரு வரம்…

BGM

ஆண் : சேலை மூடும் இளஞ்சோலை…
மாலை சூடும் மலர்மாலை…
சேலை மூடும் இளஞ்சோலை…
மாலை சூடும் மலர்மாலை…

ஆண் : இருபது நிலவுகள்…
நகமெங்கும் ஒளிவிடும்…
இளமையின் கனவுகள்…
விழியோரம் துளிர்விடும்…

ஆண் : கைகள் இடைகளில் நெளிகையில்…
இடைவெளி குறைகையில்…
எரியும் விளக்கு சிரித்து கண்கள் மூடும்…

ஆண் : பனிவிழும் மலர்வனம்…
உன் பார்வை ஒரு வரம்…
பனிவிழும் மலர்வனம்…
உன் பார்வை ஒரு வரம்…

ஆண் : இனி வரும் முனிவரும்…
தடுமாறும் கனிமரம்…
இனி வரும் முனிவரும்…
தடுமாறும் கனிமரம்…

BGM

ஆண் : காமன் கோயில் சிறைவாசம்…
காலை எழுந்தால் பரிகாசம்…
காமன் கோயில் சிறைவாசம்…
காலை எழுந்தால் பரிகாசம்…

ஆண் : தழுவிடும் பொழுதிலே…
இடம் மாறும் இதயமே…
வியர்வையின் மழையிலே…
பயிராகும் பருவமே…

ஆண் : ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி…
இருவிழி மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி…

ஆண் : பனிவிழும் மலர்வனம்…
உன் பார்வை ஒரு வரம்…
பனிவிழும் மலர்வனம்…
உன் பார்வை ஒரு வரம்…

ஆண் : இனி வரும் முனிவரும்…
தடுமாறும் கனிமரம்…
இனி வரும் முனிவரும்…
தடுமாறும் கனிமரம்…

ஆண் : பனிவிழும் மலர்வனம்…
பனிவிழும் மலர்வனம்…
பனிவிழும் மலர்வனம்…


Notes : Pani Vilum Malar Vanam Song Lyrics in Tamil. This Song from Ninaivellam Nithya (1982). Song Lyrics penned by Vairamuthu. பனிவிழும் மலர்வனம் பாடல் வரிகள்.


நீதானே எந்தன் பொன் வசந்தம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாநினைவெல்லாம் நித்யா

Nee Thane Enthan Song Lyrics in Tamil


ஆண் : நீதானே எந்தன் பொன்வசந்தம்…
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்…

BGM

ஆண் : நீதானே எந்தன் பொன்வசந்தம்…
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்…

ஆண் : ஆஹா… நீதானே எந்தன் பொன்வசந்தம்…
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்…
என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்…
உன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்…

ஆண் : நீதானே எந்தன் பொன்வசந்தம்…
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்…

BGM

ஆண் : பாதை முழுதும் கோடி மலர்கள்…
பாடி வருமே தேவக் குயில்கள்…
உன் ஆடை ஹே மிதக்கின்ற பாலாடை…
உன் காலை ஹே குளிப்பாட்டும் நீரோடை…

ஆண் : வெயில் நாளும் சுடுமென தேகம் கெடுமென…
ஜன்னல் திரையிடும் மேகம்…
சிறு காதல் விழிகளில் வீசும் மொழிகளில்…
பிறையும் பௌர்ணமி ஆகும்…
சந்தோஷம் உன்னோடு கைவீசும் எந்நாளும்…

ஆண் : நீதானே எந்தன் பொன்வசந்தம்…
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்…
என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்…
உன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்…

BGM

ஆண் : ஈர இரவில் நூறு கனவு…
பேதை விழியில் போதை நினைவு…
பன்னீரில் ஹே இளந்தேகம் நீராடும்…
பனிப்பூக்கள் ஹே உனைக்கண்டு தேனூறும்…

ஆண் : நீ ஆடை அணிகலன் சூடும் அறைகளில்…
ரோஜா மல்லிகை வாசம்…
முக வேர்வைத் துளியது போகும் வரையிலும்…
தென்றல் கவரிகள் வீசும்…
நெஞ்சோரம் தள்ளாடும் முத்தாரம் எந்நாளும்…

ஆண் : நீதானே எந்தன் பொன்வசந்தம்…
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்…
என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்…
உன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்…

BGM


Notes : Nee Thane Enthan Song Lyrics in Tamil. This Song from Ninaivellam Nithya (1982). Song Lyrics penned by Vairamuthu. நீதானே எந்தன் பொன் வசந்தம் பாடல் வரிகள்.


ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாநினைவெல்லாம் நித்யா

Rojavai Thalattum Thendral Song Lyrics in Tamil


BGM

பெண் : ரோஜாவை தாலாட்டும் தென்றல்…
பொன்மேகம் நம் பந்தல்…

ஆண் : உன் கூந்தல் என்னூஞ்சல்…
உன் வார்த்தை சங்கீதங்கள்…
ஹா… ரோஜாவை தாலாட்டும் தென்றல்…
பொன்மேகம் நம் பந்தல்…

BGM

ஆண் : இலைகளில் காதல் கடிதம்…
வண்டு எழுதும் பூஞ்சோலை…
இதழ்களில் மேனி முழுதும்…
இளமை வரையும் ஓர் கவிதை…

ஆண் : இலைகளில் காதல் கடிதம்…
வண்டு எழுதும் பூஞ்சோலை…
இதழ்களில் மேனி முழுதும்…
இளமை வரையும் ஓர் கவிதை…

பெண் : மௌனமே சம்மதம் என்று…
தீண்டுதே மன்மத வண்டு…
மௌனமே சம்மதம் என்று…
தீண்டுதே மன்மத வண்டு…
பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு…

ஆண் : ரோஜாவை தாலாட்டும் தென்றல்…
பெண் : பொன்மேகம் நம் பந்தல்…
ஆண் : உன் கூந்தல் என்னூஞ்சல்…

BGM

பெண் : வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது…
உனது கிளையில் பூவாவேன்…
இலையுதிர் காலம் முழுதும்…
மகிழ்ந்து உனக்கு வேராவேன்…

பெண் : வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது…
உனது கிளையில் பூவாவேன்…
இலையுதிர் காலம் முழுதும்…
மகிழ்ந்து உனக்கு வேராவேன்…

ஆண் : பூவிலே மெத்தைகள் தைப்பேன்…
கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்…
பூவிலே மெத்தைகள் தைப்பேன்…
கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்…
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன்… ஹா ஹா…

பெண் : ரோஜாவை தாலாட்டும் தென்றல்…
பொன்மேகம் நம் பந்தல்…

ஆண் : உன் கூந்தல் என்னூஞ்சல்…
பெண் : உன் வார்த்தை சங்கீதங்கள்…

பெண் : ரோஜாவை தாலாட்டும் தென்றல்…
ஆண் & பெண் : பொன்மேகம் நம் பந்தல்…


Notes : Rojavai Thalattum Thendral Song Lyrics in Tamil. This Song from Ninaivellam Nithya (1982). Song Lyrics penned by Vairamuthu. ரோஜாவைத் தாலாட்டும் தென்றல் பாடல் வரிகள்.