Category Archives: என்னடி மீனாட்சி

என்னடி மீனாட்சி – Ennadi Meenakshi (1979)

ரொம்ப நாளாக

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி. பாலசுப்ரமயம் & வாணி ஜெயராம்சங்கர் கணேஷ்என்னடி மீனாட்சி

Romba Naalaga Song Lyrics in Tamil


ஆண் : ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை…
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை…
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை…

பெண் : இன்னும் தீராத…
இன்னும் தீராத ஆசைகள் என்ன…
இங்கு நீராடும் வேளையில் சொல்ல…

ஆண் : ரொம்ப நாளாக…
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை…
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை…

பெண் : இன்னும் தீராத…
இன்னும் தீராத ஆசைகள் என்ன…
இங்கு நீராடும் வேளையில் சொல்ல…

ஆண் : ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை…
பெண் : மனம் தாளாமல் துடித்திடும் ஓசை…

BGM

ஆண் : நீரிலே ஆடையாய் நானும் மாறவோ…
நேரிழை மார்பிலே மேடை போடவோ…
நீரிலே ஆடையாய் நானும் மாறவோ…
நேரிழை மார்பிலே மேடை போடவோ…

பெண் : சின்னப்பிள்ளை…
செய்யும் தொல்லை…
சின்னப்பிள்ளை செய்யும் தொல்லை…
இன்னும் என்னவோ நீயும் கண்ணனோ…

ஆண் : ரொம்ப நாளாக…
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை…
பெண் : மனம் தாளாமல் துடித்திடும் ஓசை…

BGM

ஆண் : தாமரைப்பூவிதழ் அங்கம் அல்லவோ…
தாவிடும் வண்டுபோல் மச்சம் என்னவோ…

பெண் : மஞ்சம் அமைத்து மன்னன் அணைத்து…
மஞ்சம் அமைத்து மன்னன் அணைத்து…
கன்றிவிட்டதோ கண்ணில் பட்டதோ…

பெண் : ரொம்ப நாளாக…
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை…
ஆண் : மனம் தாளாமல் துடித்திடும் ஓசை…

BGM

பெண் : எத்தனை ஜென்மமோ வாழ்க்கை என்பது…
என் மனம் உன்னிடம் வாழ வந்தது…
எத்தனை ஜென்மமோ வாழ்க்கை என்பது…
என் மனம் உன்னிடம் வாழ வந்தது…

ஆண் : அன்றில் பறவை… கண்ட உறவை…
அன்றில் பறவை கண்ட உறவை…
பெண்மை கொண்டதோ கண்ணில் நின்றதோ…

ஆண் : ரொம்ப நாளாக…
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை…
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை…

பெண் : இன்னும் தீராத…
இன்னும் தீராத ஆசைகள் என்ன…
இங்கு நீராடும் வேளையில் சொல்ல…

ஆண் : ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை…
பெண் : மனம் தாளாமல் துடித்திடும் ஓசை…


Notes : Romba Naalaga Song Lyrics in Tamil. This Song from Ennadi Meenakshi (1979). Song Lyrics penned by Pulamaipithan. ரொம்ப நாளாக பாடல் வரிகள்.