அசைவின்றி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கியுவன் ஷங்கர் ராஜா & ஸ்ரேயா கோஷல்யுவன் ஷங்கர் ராஜாபரம்பொருள்

Asaivindri Song Lyrics in Tamil


BGM

ஆண் : அசைவின்றி அசைவே இன்றி…
உன் முன் நின்று கேட்கின்றேன்…
இமைக்காமல் நீயும் என்னை…
பார்த்தால் என் செய்வேன்…

ஆண் : எதன் மீதும் ஆசை ஏதும்…
வேண்டாம் என்றாய் யோசித்தேன்…
அது கூட ஆசைதானே…
ஐயோ என் செய்வேன்…

ஆண் : தலையின் பின்னே பின்னே வீசும் ஒளியில்…
கொஞ்சம் எனக்கும் தா…
உந்தன் போதி நிழலின் பாதி நிழலை…
கொஞ்சம் எனக்கும் தா…

பெண் : அலை யேதும் இல்ல ஆழியிலே…
நிலவாய் பிடுங்கி வீசாதே…
உன்னை காணா வேளையிலே…
கண்ணால் பேசாதே…

பெண் : அட நேற்று நாளை வீணென நீ சொன்னாய்…
இன்றில் வாழ்கின்றேன்…
என்னுள் என்னை வீழ் என்றாய்…
உன்னுள் வீழ்கின்றேன்…

BGM

பெண் : அழகின் மேலே இதயம் ஏறி…
நழுவி கீழே வீழ…
மெழுகின் மேலே தீயில் தோய்ந்த…
காதல் வாளும் கீற…

பெண் : திறக்கின்ற கண்ணுக்குள்ளே…
தீயின் வெப்பம் பாய…
உறைந்திங்கு ஏங்கும் நெஞ்சம்…
கொஞ்சம் குளிர் காய…

ஆண் : சிற்பம் யார் அட சிற்பி யார்…
எந்தன் கேள்வி சரிதானா…
தீயின் என்னை வாட்டுகிறாய்…
சிலையே நான்தானா…

ஆண் : உலகே இங்கே தீப்பிழம்பாய்…
உயிர் நான் வழிந்தேன் தீக்குழம்பாய்…
இருகி போனேன் இரும்பாய்…
நான் ஆனேனே புதிதாய்…

BGM

ஆண் : அசைவின்றி அசைவே இன்றி…
உன் முன் நின்று கேட்கின்றேன்…
இமைக்காமல் நீயும் என்னை…
பார்த்தால் என் செய்வேன்…

பெண் : தலையின் பின்னே பின்னே வீசும் ஒளியில்…
கொஞ்சம் எனக்கும் தா…
உந்தன் போதி நிழலின் பாதி நிழலை…
கொஞ்சம் எனக்கும் தா…

பெண் : அலை யேதும் இல்லா ஆழியிலே…
நிலை பிடுங்கி வீசாதே…
உன்னை காணா வேளையிலே…
கண்ணால் பேசாதே…

பெண் : அட நேற்று நாளை வீணென நீ சொன்னாய்…
இன்றில் வாழ்கின்றேன்…
என்னுள் என்னை வீழ் என்றாய்…
உன்னுள் வீழ்கின்றேன்…


Notes : Asaivindri Song Lyrics in Tamil. This Song from Paramporul (2023). Song Lyrics penned by Madhan Karky. அசைவின்றி பாடல் வரிகள்.


Scroll to Top